இந்திய மகளிர் துடுப்பாட்ட சங்கம்

இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனேவில் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது

இந்திய மகளிர் துடுப்பாட்ட சங்கம் (Women's Cricket Association of India) 1973 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலம் புனேவில் நிறுவப்பட்டது. இந்திய துடுப்பாட்ட விளையாட்டின் ஆளும் குழுவாக இச்சங்கம் செயல்பட்டது. 2007 ஆம் ஆண்டு இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்துடன் இந்திய மகளிர் துடுப்பாட்ட சங்கம் இணைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரான பிரேமலகாகி சவான் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார்.[1][2]

இந்திய மகளிர் துடுப்பாட்ட சங்கம்
Women's Cricket Association of India
துவங்கியது1973
Purpose/focusமகளிர் துடுப்பாட்ட மேம்பாடு,
தலைமையகம்புனே, மகாராட்டிரம்
Affiliationsபன்னாட்டு மகளிர் துடுப்பாட்ட சங்கம்

வரலாறு தொகு

1973 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று இந்திய மகளிர் துடுப்பாட்ட சங்கத்தில் 14 பிராந்திய அணிகள் இருந்தன. அந்த ஆண்டில் இச்சங்கத்தினர் தேசிய அளவிலான போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தனர். 2005-06 ஆம் ஆண்டில் பன்னாட்டு மகளிர் துடுப்பாட்ட சங்கம் பன்னாட்டு துடுப்பாட்ட அவையுடன் இணைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு இந்திய மகளிர் துடுப்பாட்ட சங்கம் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்துடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "About Women's Cricket Association". ESPN Cricinfo.
  2. "BCCI finally takes full control of India women's cricket". ESPN Cricinfo. 13 November 2006.