1991 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
1991 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (1991 Census of India ) 13 ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகும். முன்னதாக இக்கணக்கெடுப்புப் பணி 1871[1] ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையென அதுவரை 12 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இக்கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 838,583,988[2] ஆகும். கணக்கெடுப்புப் பணியில் 1.6 மில்லியன் நபர்கள் கணக்கெடுப்பாளர்களாக பணிபுரிந்தனர்.[1]
1991 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு | ||
---|---|---|
பொதுத் தகவல் | ||
நாடு | இந்தியா | |
முடிவுகள் | ||
மொத்த மக்கள் தொகை | 838,583,988 | |
அதிக மக்கள் தொகை கொண்ட | உத்தரப் பிரதேசம் (132,062,800) | |
குறைந்த மக்கள் தொகை கொண்ட | சிக்கிம் (406,000) |
மத அடிப்படையில் மக்கள் தொகை
தொகு1991 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் 69.01 கோடி நபர்கள் இந்துக்கள் (81.53%) ஆவர். 10.67 கோடி நபர்கள் இசுலாமியர்கள் ஆவர்.[3]
இந்தியாவில் உள்ள பிரதானமான சமயக் குழுக்களின் மக்கள் தொகைப் போக்குகள் 1951 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு அடிப்படையில் இங்கு தரப்பட்டுள்ளது.
சமயக்குழு | மக்கள் தொகை % 1951 |
---|---|
இந்து | 81.53% |
இசுலாம் | 12.61% |
கிறித்துவம் | 2.32% |
சீக்கியம் | 1.94% |
புத்த மதம் | 0.77% |
சைனம் | 0.40% |
பார்சி | 0.08% |
ஆன்மீகம்,மற்றவை | 0.44% |
மொழித் தரவுகள்
தொகு1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1576 மொழிகள் தாய்மொழியாக வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தாய் மொழியாகப் பேசக்கூடிய மொழிகளாக 22 மொழிகள் உள்ளன. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தாய் மொழியாகப் பேசக்கூடிய மொழிகளாக 50 மொழிகளும், 10,000 நபர்களுக்கு மேல் தாய் மொழியாகப் பேசக்கூடிய மொழிகள் 114 எனவும் கணக்கிடப்பட்டன. எஞ்சியிருக்கும் பிற மொழிகளை தாய் மொழியாகக் கொண்டவர்கள் மொத்தமாக 566,000 நபர்கள் எனவும் அறியப்பட்டது.[4] 1991 கணக்கெடுப்பின்படி சமசுகிருதம் மொழியை 49,736 நபர்கள் பேசினர்.[5]
வேறுசில புள்ளி விவரங்கள்
தொகு- 1991 ஆம் ஆண்டு அடிப்படையில் கணக்கெடுப்பில் உள்ள மொத்த ஊர்களின் எண்ணிக்கை 1702.[6]
- கிளர்ச்சி காரணமாக 1991 ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.[7] எனவே இம்மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை அங்குள்ள சமயக்குழுக்களின்[8] தரவுகள் மூலம் கணிக்கப்பட்டது.
- முன்னதாக 1981 ஆம் ஆண்டில் பிரிவினைவாதிகளின் கிளர்ச்சியால் அசாம் மாநிலத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கவில்லை. அப்பொழுதும் வரைபட முறையிலேயே கணிக்கப்பட்டது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Vijayanunni, M. (26–29 August 1998). "Planning for the 2001 Census of India based on the 1991 Census" (PDF). 18th Population Census Conference. Honolulu, Hawaii, USA: Association of National Census and Statistics Directors of America, Asia, and the Pacific. Archived from the original (பி.டி.எவ்) on 19 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
- ↑ Dev, Amiya (2010). "Literary Multilingualism II : Multilingualism in India". Comparative Literature : Sharing Knowledges for Preserving Cultural Diversity (PDF). Encyclopedia of Life Support Systems (EOLSS). Vol. 2. pp. 172–183.
{{cite book}}
: Unknown parameter|editors=
ignored (help) Developed under the Auspices of the UNESCO, EOLSS Publishers, Paris, France, [1]. Retrieved 17 December 2014. - ↑ "With current trends, it will take 220 years for India's Muslim population to equal Hindu numbers".
- ↑ Mallikarjun, B. (7 November 2001). "Languages of India according to 2001 Census". Languages in India. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
- ↑ "Where are the Sanskrit speakers?".
- ↑ "Census findings point to decade of rural distress".
- ↑ "Where Are India's 2011 Census Figures on Religion?".
- ↑ "Religion Census: A faithful count".
- ↑ "Muslims' growth rate much lower".