2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (2001 Census of India) 1871 முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பின் இது 14வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும்.[1]
14வது இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு | |
---|---|
பொதுத் தகவல் | |
நாடு | இந்தியா |
முடிவுகள் | |
மொத்த மக்கள் தொகை | 1,028,737,436 (21.5%) |
அதிக மக்கள் தொகை கொண்ட | உத்தரப் பிரதேசம் (166,053,600) |
குறைந்த மக்கள் தொகை கொண்ட | சிக்கிம் (541,902) |
2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள்தொகை 102,87,37,436 (நூற்றியிரண்டு கோடியே 87 இலட்சத்து முப்பத்தி ஏழாயிரத்தி நானூற்றி முப்பத்தி ஆறு) ஆகும். இதில் ஆண்கள் 53,22,23,090 ஆகவும், பெண்கள் 49,65,14,346 ஆகவும் இருந்தனர்.[2] 1991 - 2001 இடையே பத்தாண்டுகளில் மொத்த மக்கள்தொகை வளர்ச்சி 18,23,10,397 (21.5%) ஆக உயர்ந்துள்ளது.[3]
சமயவாரியாக மக்கள்தொகை
தொகு2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்துக்கள் 82.75 கோடியாகவும் (80.45%) மற்றும் இசுலாமியர்கள் 13.8 கோடியாகவும் (13.4%) இருந்தனர்.[4][5] மேலும் இந்தியாவில் 108 சமயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.[6] 70 இலட்சம் மக்கள் சமயம் அற்றவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர்.[7]
சமயங்கள் | மக்கள்தொகை % 2001 |
---|---|
இந்துக்கள் | 80.45% |
இசுலாமியர்கள் | 13.4% |
கிறித்தவர்கள் | 2% |
சீக்கியர்கள் | 1.89% |
பௌத்தர்கள் | 0.74% |
முன்னோர் வழிபாட்டினர் & பிறர் | 0.43% |
சமணர்கள் | 0.46% |
மொழிவாரியாக மக்கள்தொகை பரம்பல்
தொகுவட இந்தியாவில் பெரும்பான்மையாக இந்தி மொழி பரவலாக பயிலப்பட்டது. இந்திய மக்கள்தொகையில் 53.6% இந்தி மொழி அறிந்திருந்தனர். 41% வட இந்திய மக்கள் இந்தி மொழியை தாய் மொழியாகக் கொண்டிருந்தனர்.[8][9][10] 12.5% மக்கள் ஆங்கில மொழி அறிவு கொண்டிருந்தனர்.[11] 25.50 கோடி மக்கள் (24.8%) இரண்டு மொழிகளை பேசுபவர்களாக இருந்தனர்.[12] இந்தியவில் 780 மொழிகளை தாய்மொழியாக மக்கள் பேசினர். இது உலக அரங்கில் பப்புவா நியூ கினியாவுக்கு (839) அடுத்து இரண்டாமிடம் ஆகும்.[13]
மொழிகள் | முதல் மொழி பேசுபவர்கள்[14][15] |
முதல் மொழி பேசுவர்கள் % [16] |
இரண்டாம் மொழி பேசுபவர்கள்[15] |
மூன்றாம் மொழி பேசுபவர்கள் [15] |
மொத்தம்[15][17] | மொத்த மக்கள்தொகையில் மொழி பேசுபவர்கள் %[16] |
---|---|---|---|---|---|---|
இந்தி | 422,048,642 | 41.03 | 98,207,180 | 31,160,696 | 551,416,518 | 53.60 |
ஆங்கிலம் | 226,449 | 0.02 | 86,125,221 | 38,993,066 | 125,344,736 | 12.18 |
வங்காளம் | 83,369,769 | 8.10 | 6,637,222 | 1,108,088 | 91,115,079 | 8.86 |
தெலுங்கு | 74,002,856 | 7.19 | 9,723,626 | 1,266,019 | 84,992,501 | 8.26 |
மராத்தி | 71,936,894 | 6.99 | 9,546,414 | 2,701,498 | 84,184,806 | 8.18 |
தமிழ் | 60,793,814 | 5.91 | 4,992,253 | 956,335 | 66,742,402 | 6.49 |
உருது | 51,536,111 | 5.01 | 6,535,489 | 1,007,912 | 59,079,512 | 5.74 |
கன்னடம் | 37,924,011 | 3.69 | 11,455,287 | 1,396,428 | 50,775,726 | 4.94 |
குஜராத்தி | 46,091,617 | 4.48 | 3,476,355 | 703,989 | 50,271,961 | 4.89 |
ஒடியா | 33,017,446 | 3.21 | 3,272,151 | 319,525 | 36,609,122 | 3.56 |
மலையாளம் | 33,066,392 | 3.21 | 499,188 | 195,885 | 33,761,465 | 3.28 |
சமசுகிருதம் | 14,135 | <0.01 | 1,234,931 | 3,742,223 | 4,991,289 | 0.49 |
புள்ளி விவரத் தொகுப்பு
தொகு-
Overview of 2001 population, separated by gender and age bracket.
-
2001 overview based on religious affiliation and language.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Vijayanunni, M. (26–29 August 1998). "Planning for the 2001 Census of India based on the 1991 Census" (PDF). 18th Population Census Conference. Honolulu, Hawaii, USA: Association of National Census and Statistics Directors of America, Asia, and the Pacific. Archived from the original (PDF) on 19 November 2008. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
- ↑ "Home/Census Data 2001/India at a glance". New Delhi: Registrar General & Census Commissioner, India, Ministry of Home Affairs. 2001. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.
- ↑ "Home/Census Data 2001/India at a glance". New Delhi: Registrar General & Census Commissioner, India, Ministry of Home Affairs. 2001. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.
- ↑ Abantika Ghosh , Vijaita Singh (24 January 2015). "Census: Hindu share dips below 80%, Muslim share grows but slower". Indian Express. Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
- ↑ "With current trends, it will take 220 years for India's Muslim population to equal Hindu numbers".
- ↑ "Fewer minor faiths in India now, finds Census; number of their adherents up".
- ↑ "Indian rationalism, Charvaka to Narendra Dabholkar".
- ↑ "These four charts break down India's complex relationship with Hindi".
- ↑ "Nearly 60% of Indians speak a language other than Hindi".
- ↑ 2001 census data
- ↑ 9 கோடி மக்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்தினர்."காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-05-14. பார்க்கப்பட்ட நாள் 2019-09-03., Issue 10, 2003, pp. 8–10, (Feature: Languages of West Bengal in Census and Surveys, Bilingualism and Trilingualism) and Tropf, Herbert S. 2004. India and its Languages பரணிடப்பட்டது 2008-03-08 at the வந்தவழி இயந்திரம். Siemens AG, Munich.)
- ↑ "Hindi migrants speaking Marathi rise to 60 lakh".
- ↑ "Seven decades after Independence, many small languages in India face extinction threat".
- ↑ ORGI. "Census of India: Comparative speaker's strength of Scheduled Languages-1971, 1981, 1991 and 2001".
- ↑ 15.0 15.1 15.2 15.3 S, Rukmini. "Sanskrit and English: there's no competition".
- ↑ 16.0 16.1 http://www.censusindia.gov.in/Census_Data_2001/India_at_glance/popu1.aspx
- ↑ "Indiaspeak: English is our 2nd language - Times of India".