இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாணையம்

இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாணையம் (ஆங்கிலம்பேங்கிங் ஒம்பட்ஸ்மேன்) இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாளர் திட்டம், 2006 இன் படி அமைக்கப்பட்ட ஆணையம் இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாளர் ஆணையமாகும். வங்கிகளின் சேவை குறித்த குறைபாடுகளையும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளினால் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் சச்சரவுகளை தீர்க்கும் பொருட்டு இவ்வாணையம் இந்திய ரிசர்வ் வங்கியால் ஆரம்பிக்கப்பட்டு செயல் பட்டு வருகின்றது.

கட்டமைவு

தொகு

அனைத்து வங்கி வாடிக்கையாளரின் புகார்களுக்கும் விரைவான தீர்வுகாணும் ஒரு முறைமையாக, ரிசர்வ் வங்கி வங்கிகள் குறைதீர்ப்புத்திட்டத்தை வடிவமைத்துத் தந்துள்ளது. அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல வகையான வங்கிச்சேவை குறித்த வாடிக்கையாளர் புகார்களைத்தீர்த்திட நிறுவன மற்றும் சட்டரீதியான அமைப்பினை இது அமைத்துத் தந்துள்ளது. வங்கிகள் விதி கூட்டம் 1949, சட்டப்பிரிவு 35-A [1] கீழ் வெளியிடப்பட்ட கட்டளையின் வாயிலாக இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதனின் மேம்பட்ட செயல்திறனுக்கான, ரிசர்வ் வங்கி பணமுதலீடு செய்யும். மேலும் தன்னிடம் பணி புரியும் உயர் அதிகாரிகளை நியமிக்கும்.

தீர்ப்பாணையம் கவனத்தில் எடுத்துகொள்ளும் புகார்கள் [1]

தொகு
 
    • 1. வரைவோலை, கேட்போலை, உறுதிச்சீட்டுகள் போன்றவை மீதான பணம் வசூலிக்கப்பட்ட தொகை அளிக்கப்படாவிட்டாலோ, அல்லது அளிப்பதில் மிதமிஞ்சிய காலதாமதம்.
    • 2. போதிய காரணமின்றி, நாணயங்கள் வழங்கப்படும்போது, வாங்க மறுப்பதும் அந்த சேவைக்குத் தரகுத் தொகை வசூலிப்பதும்.
    • 3. உள்வரும் பணவரவுத்தொகைகளை செலுத்தாமலிருப்பதும் செலுத்துவதில் தாமதம் செய்வதும்.
    • 4. பணவழங்காணைகள், கேட்போலைகள், வங்கி வரைவோலைகள் வழங்காமலிருத்தல், வழங்குவதில் தாமதம் செய்தல்.
    • 5. குறிக்கப்பட்ட வங்கிவேலை நேரத்தை அனுசதிக்காமலிருத்தல்.
    • 6. கடன் சான்றிதழ், மற்றும் கடன் உத்தரவும் சார்ந்த கடமைப்பொறுப்பை மதித்து நடப்பதிலிருந்து தவறுதல்.
    • 7. கடன் மற்றும் முன்பணம் வழங்கும் வசதி தவிர, எழுத்தளவில் வங்கியாலோ அல்லது அதன் நேரடி விற்பனை முகவர்கள் மூலமாகவோ உறுதியளிக்கப்பட்ட வங்கி வசதியை அளிக்காமலிருத்தல் அல்லது அளிப்பதில் தாமதம்.
    • 8. வங்கியில் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு, நடப்புக்கணக்கு அல்லது வேறெந்தவகைக் கணக்கிலும், வாடிக்கையாளருக்குரிய வரவு வைக்கப்படவேண்டிய தொகையை வரவு வைக்காமலிதுத்தல், தாமதித்தல் சேமிப்பைத்திருப்பியளிக்காமலிருத்தல், வட்டி விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டளைகளை அனுசரிக்காமலிருத்தல், வங்கியின் இந்திய நடவடிக்கைகள் சார்நத புகார்களாயின் ஏற்றுமதியாளருக்குரிய ஏற்றுமதித் தொகையைப்பெற்று அளிப்பதில் தாமதம். ஏற்றுமதி உறுதிச்சீட்டுகள் கையாளுதல் மற்றும் உறுதிச்சீட்டுகள் வசூல் இவற்றில் தாமதம்.
    • 9. மறுப்பதற்கான எந்த உரிய காரணம் இல்லாமல் சேமிப்புக்கணக்கினைத் துவக்க மறுத்தல்.
    • 10. உரிய முன் அறிவிப்பு ஏதும் தராமல் கட்டணங்கள் வசூலித்தல்.
    • 11. தானியங்கி பணம் வழங்கும்/பற்று அட்டை நடைமுறைகள் மற்றும் கடன் அட்டை நடைமுறைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை அனுசரிக்காத வங்கிகள் மற்றும் அதன துணை நிறுவனங்களின் மீதான புகார்கள்.
    • 12. பணியாளரல்லாத ஒருநபரின் ஓய்வூதிக்கணக்கிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணம் வங்கியின் செயல்பாட்டில் நிகழந்த குறையென்று சொல்லமுடிந்தால் அத்தகைய புகார்கள்.
    • 13. ரிசர்வ் வங்கி அல்லது அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வரிகளுக்கான் பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது அதை தாமதப்படுத்துதல்.
    • 14. இந்திய அரசுப்பத்திரங்களை வெளியிடமறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றை பராமரிக்க மறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றிற்குரிய பணத்தைத் திருப்பித்தர மறுத்தல் அல்லது தாமதித்தல்.
    • 15. வாடிக்கையாளருக்கு உரிய அறிவிப்பின்றி வலிந்து சேமிப்புக்கணக்கினைக் காரணமின்றி முடித்துக்கொள்ளுதல்.
    • 16. வங்கிக் கணக்குகளை முடிக்க மறுத்தல் அல்லது முடித்தலில் தாமதம்.
    • 17. நியாயமான பழக்கங்களுக்கான வங்கியின் நெறி முறைகளிலிருந்து பிறழுதல்.
    • 18. வங்கிச்சேவை மற்றும் இதர சேவைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களிலிருந்து பிறழும் எந்தவிதமான விடயத்திற்காகவும் புகார் செய்யலாம்.


    • குறிப்பு-; இந்தியாவில் கணக்கு வைத்துள்ள குடியிருப்பாளரல்லாத இந்தியரின் கணக்கு குறித்து வெளிநாட்டிலிருந்து வரும் பணம், சேமிப்புக்கணக்கு, மற்றும் வங்கி சார்ந்த விடயங்கள் குறித்த புகார்களையும் கவனிக்கும்.

புகார் அளிக்க காலவரை

தொகு

குறிப்பிட்ட வங்கி, புகார்தாரரின் முறையீட்டைப்பெற்றுக் கொண்ட ஒரு மாதத்திற்குள்[1] பதில் தராவிட்டாலோ, புகாரை மறுத்தாலோ, திருப்திகரமாக பதிலளிக்காவிட்டாலோ, குறைதீர்ப்பானையத்திடம் தமது புகாரை வாடிக்கையாளர் சமர்ப்பிக்கலாம்.

குறைதீர்ப்பாயத்திடம் புகார் அளிப்பதற்கு முன்பாக, புகாரில் குறிப்பிடப்படும் வங்கியிடமிருந்தே நேரடியாக எழுத்துவடிவிலான வேண்டுகோள் மூலம் முயற்சித்து ஒரு திருப்திகரமான் தீர்வினைப் பெற முதலில் முயல்வது அவசியம் – ஆயினும் புகாருக்குரிய நிகழ்விற்கு ஒரு வருடத்திற்குள்ளாக[1] அந்தப்புகார் அளிக்கப்பட வேண்டும்.

புகார் மனுவில் தெரிவிக்கவேண்டியவை

தொகு

புகார் வெள்ளைத்தாளில் எழுத்துமூலமோ அல்லது மின்னஞ்சலிலோ, இணையத்திலோ அனுப்பலம் அல்லது பதிவு செய்யலாம். அல்லது அதிகாரம் பெற்ற வேறோரு நபரின் மூலம் அவர் வழக்குரைஞராக இருக்கவேண்டும் என்பதில்லை அல்லது அஞ்சலிலோ அளிக்கலாம். ஆங்கிலத்திலோ 8வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி அந்தந்த மாநில மொழிகளில் புகார் அளிக்கலாம். புகாரில் குறிப்பிட வேண்டுவன-;[1]

  • பெயர்
  • முகவரி
  • புகாருக்குள்ளாகிய வங்கியின் பெயர்
  • புகாருக்குள்ளாகிய வங்கியின் முகவரி
  • புகாரின் உண்மைக் காரணங்கள்
  • ஆவணச்சான்று இருப்பின் அதன் விவரம் (நகல்)
  • நட்டம்/பாதிப்பு/ அளவு
  • தீர்வு குறித்து வேண்டுவன
  • உறுதிமொழி (ஆணையம் இடும் கட்டளைகளை மேற்கோள்வேன் என்ற பொருளில்)


வெளிப்புற இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு