இந்திய வளர்ச்சி மற்றும் நிவாரண நிதி

இந்திய வளர்ச்சி மற்றும் நிவாரண நிதி (India Development and Relief Fund (IDRF)[1]ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் வடக்கு பெதெஸ்டா நகரத்தில் செயல்படும் இலாப நோக்கமற்ற பொதுத் தொண்டு நிறுவனம் ஆகும்.

இந்திய வளர்ச்சி மற்றும் நிவாரண நிதி
உருவாக்கம்1988
வகைஇலாப நோக்கமற்ற பொதுத் தொண்டு நிறுவனம்
நோக்கம்இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் நிலையான சமூக-பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வருதல்
தலைமையகம்
ஆள்கூறுகள்
சேவை பகுதி
இந்தியா, நேபாளம், இலங்கை
முக்கிய நபர்கள்
வினோத் பிரகாஷ்
வலைத்தளம்www.idrf.org

இதன் நோக்கம் இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் போன்ற நாடுகளின் தொலைதூரப் பகுதிகளில் நிலையான சமூக-பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வருதல் ஆகும்.[2]1988ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளையின் நிறுவனர், உலக வங்கியின் முன்னாள் பொருளாதார ஆலோசகரான. வினோத் பிரகாஷ் ஆவார்.

திட்டங்கள்

தொகு

இந்த பொது தொண்டு நிறுவனம் இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களின் கல்வி, சுகாதாரம், மருத்துவம், மகளிருக்கு அதிகாரம், பேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, சுற்றுச்சூழல் நட்பு வளர்ச்சி, நல்லாட்சி ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.

விமர்சனங்கள்

தொகு

இந்த அறக்கட்டளை இந்தியாவில் செயல்படும் சங்கப் பரிவார் அமைப்புகளின் மூலம் தனது நிதியை செலவழிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. IDRF is a registered trademark of India Development and Relief Fund, Inc. USA
  2. "IDRF Annual Report 2017". Archived from the original on 21 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 25 June 2024. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Tow, William T.; Chin, Kin Wah (2009). ASEAN, India, Australia: towards closer engagement in a new Asia. Institute of Southeast Asian Studies. p. 289. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9812309631.