இந்திரயாணி விரைவுவண்டி

(இந்திரயாணி எக்ஸ்பிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திரயாணி விரைவுவண்டி (Indrayani Express) என்பது இந்திய ரயில்வேயினைச் சார்ந்த மும்பையிலிருந்து புனே சந்திப்பு வரை செல்லும் அதிவேக விரைவுத் தொடருந்து ஆகும். இதன் வண்டி எண் ௨௨௧೦௫/௨௨௧೦௬ (22105/22106). தினமும் செயல்படும் இந்த சேவையானது, புனே அருகில் ஓடும் இந்திரயாணி நதியின் பெயரால் இது “இந்திரயாணி விரைவுவண்டி” என அழைக்கப்படுகிறது.

இந்திரயாணி விரைவுத் தொடருந்து
கண்ணோட்டம்
வகைஅதிவேக விரைவுத் தொடருந்து
முதல் சேவைஏப்ரல் 27, 1988
நடத்துனர்(கள்)மத்திய இரயிவே
வழி
தொடக்கம்சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்
இடைநிறுத்தங்கள்8 (வண்டி எண் 22105); 7 (வண்டி எண் 22106)
முடிவுபுனே இரயில் நிலையம்
ஓடும் தூரம்192 km (119 mi)
சராசரி பயண நேரம்3 மணி, 28 நிமிடங்கள் (22105), 3 மணி 20 நிமிடங்கள் (22106)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்22105 / 22106
பயணச் சேவைகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஇல்லை
உணவு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்110 km/h (68 mph) அதிகபட்சம்
56.47 km/h (35 mph), (நிறுத்தங்கள் உட்பட)

இந்த தொடருந்து முதலில் வண்டி எண் ௧௨೦௧ (1021) என மும்பை முதல் புனே வரையும் பின்பு வண்டி எண் ௧௨೦௨ (1022) என புனே முதல் மும்பை வரையும் ஓடியது. பின்பு விரைவு தொடருந்தாகத் தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து வண்டி எண் ௨௨௧೦௫ (22105) என மும்பை முதல் புனே சந்திப்பு வரையும் ௨௨௧೦௬ (22106) என புனே சந்திப்பு முதல் மும்பை வரையும் ஓடுகிறது.

பெட்டிகள்

தொகு

இந்த தொடருந்தில் 2 குளிரூட்டப்பட்ட உட்கார்ந்து செல்லும் வசதிகொண்ட பெட்டிகளும், 8 பொதுவான இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், முன்பதிவு செய்யக்கூடிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கான 2 பொதுவான இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், முன்பதிவு செய்யப்படாத 5 பொதுவான பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. தேவைகளைப் பொறுத்து இந்த தொடருந்தில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம். இந்த விரைவுவண்டி, தனது பெட்டிகளை புனே சோலபூர் உள்ளூர் விரைவுவண்டியுடன் பகிர்ந்துள்ளது. இதன் இயக்கம் மத்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சேவைகள்

தொகு

இந்திரயாணி தொடருந்து முதன்முதலில் 27 ஏப்ரல் 1988-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. வண்டி எண் 22105 ஆனது மணிக்கு 55.38 கி.மீ. வேகத்தில் 192 கி.மீ. தூரத்தினை 3 மணி 28 நிமிடங்களிலும், வண்டி எண் 2216 ஆனது மணிக்கு 57.60 கி.மீ. வேகத்தில் 3 மணி 20 நிமிடங்களில் மொத்த தூரமான 192 கி.மீ. கடக்கிறது.

இயக்கம்

தொகு

இந்த தொடருந்து பயணப்பாதை முழுவதும் மின்சாரவழித்தடத்தில் உள்ளது.

பயணக்கால அட்டவணை[1]

தொகு

புனே சந்திப்பிற்காக மும்பையிலிருந்து செல்லும் ஆறு ரயில்களில் இந்திரயாணி தொடருந்து முதலில் செல்லும் ரயில் ஆகும். மேலும் புனே சந்திப்பிலிருந்து திரும்பும் ரயில் வரிசையில் இது கடைசியாக மும்பைக்குத் திரும்புகிறது.
வண்டி எண் 22105 மும்பை தொடருந்து தினமும் இந்திய நேரப்படி 05.40க்கு புறப்பட்டு 09.08க்கு புனே சந்திப்பினை அடைகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் புனே சந்திப்பிலிருந்து வண்டி எண் 22106 இந்திரயாணி விரைவுவண்டி 18.35க்கு புறப்பட்டு மும்பையினை 21.55க்கு அடைகிறது.[2]

22105 மும்பை -புனே இந்திராயாணி விரைவுவண்டி
எண் நிலையத்தின் பெயர் (குறியீடு) வருகை புறப்பாடு நிறுத்தும் நேரம்
(நிமிடங்கள்)
பயணித்த தூரம்
(கி.மீ)
நாள் பாதை
1 மும்பை (CSTM) ஆரம்பம் 05:40 0 0 1 1
2 தாதர் (DR) 05:51 05:53 2 9 1 1
3 தானே (TNA) 06:14 06:16 2 34 1 1
4 கல்யாண் சந்திப்பு (KYN) 06:33 06:35 2 54 1 1
5 கர்ஜத் (KJT) 07:13 07:15 2 100 1 1
6 லோணவளா (LNL) 07:58 08:00 2 128 1 1
7 சிவாஜி நகர் (SVJR) 08:50 08:52 2 190 1 1
8 புனே சந்திப்பு (PUNE) 09:08 முடிவு 0 192 1 1
22106 - புனே சந்திப்பு → மும்பை இந்திரயாணி விரைவுவண்டி
புனே சந்திப்பு (PUNE) ஆரம்பம் 18:35 0 0 1 1
லோணவளா (LNL) 19:23 19:25 2 64 1 1
கர்ஜத் (KJT) 20:08 20:10 2 92 1 1
கல்யாண் சந்திப்பு(KYN) 20:50 20:52 2 139 1 1
தானே (TNA) 21:08 21:10 2 159 1 1
தாதர் (DR) 21:33 21:35 2 183 1 1
மும்பை (CSTM) 21:55 முடிவு 2 192 1 1
1 1

குறிப்பிடும்படியான சம்பவங்கள்

தொகு

திசம்பர் 1, 1994 இரவில் தக்கூர்வாடி அருகில் தீப்பிடித்ததன் காரணமாக இந்திரயாணி விரைவுவண்டியின் நிறுத்தும் கருவிகளில் பழுது ஏற்பட்டது. இந்த சம்பவம் கர்ஜத் மற்றும் லோணாவ்ளா மலைப்பாதையில் ஏற்பட்டது. இதனால் தொடருந்து சமவெளிப் பகுதியில் நிறுத்தப்படும் வரை மணிக்கு 100 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றது. இதற்கான தெளிவான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.[3]

மேற்கோள்கள்:

தொகு
  1. "Indrayani Express ௨௨௧೦௬".
  2. "ரூட் போர் ற்றின் நோ.௨௨௧೦௫". Archived from the original on 2014-08-21. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22.
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரயாணி_விரைவுவண்டி&oldid=3759959" இலிருந்து மீள்விக்கப்பட்டது