இந்திராயணி ஆறு

இந்திராயணி ஆறு (Indrayani River) இந்தியாவின் மகாராட்டிராவின் சகாயாத்ரி மலைகளில் உள்ள ஒரு மலைப்பகுதியான லோனாவ்லாவிற்கு அருகிலுள்ள குர்வண்டே கிராமத்தில் உருவாகிறது.[1] மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் போது, இங்கிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து, தேகு மற்றும் ஆளந்தி ஆகிய இந்து புனித யாத்திரை மையங்கள் வழியாகப் பீமா ஆற்றினை அடைகிறது. இது பெரும்பாலும் புனே நகரின் வடக்குப் பகுதியில் செல்கிறது.[2] இது ஒரு புனித நதியாகப் போற்றப்படுகிறது. சாந்த் துக்காராம் மற்றும் தியானேஷ்வர் போன்ற மதப் பிரமுகர்களுடன் தொடர்புடையது.

இந்திராயணி ஆறு
இந்திராயணி ஆறு ஆளந்தியில்
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுலோணாவ்ளா, புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
முகத்துவாரம்பீமா ஆறு
 ⁃ அமைவு
துலாபூர், புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா

கம்ஷெட்டில் இந்திராயணி மீது வால்வான் அணை என்ற நீர்மின் அணை கட்டப்பட்டுள்ளது.[3]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Dahanukar, Neelesh; Paingankar, Mandar; Raut, Rupesh N.; Kharat, Sanjay S. (9 December 2012). "Fish fauna of Indrayani River, northern Western Ghats, India". Journal of Threatened Taxa 4 (1): 2310–2317. https://www.academia.edu/2889765/Fish_fauna_of_Indrayani_River_northern_Western_Ghats_India. பார்த்த நாள்: 9 December 2021. 
  2. "Indrayani River in India". India9.com. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  3. "Facts and Information about Indrayani River". Indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராயணி_ஆறு&oldid=3494162" இலிருந்து மீள்விக்கப்பட்டது