இந்திரலதா கோயில்


இந்திரலதா கோயில் (Indralatha Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த பலாங்கீர் மாவட்டத்தில் ராணிபூர் ஜாரியால் எனுமிடத்தில் அமைந்த சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கிபி எட்டாம் நூற்றாண்டுக் கோயில் ஆகும். இவ்விடத்தில் சிவபெருமானை இந்திரன் வழிபட்டதால், இதற்கு இந்திரலதா கோயில் எனப்பெயராயிற்று. இந்திரலதா கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது. இக்கோயிலில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கட்டிடக்கலை

தொகு

இக்கோயில் இந்துக் கோயில் கட்டிடக்கலையில், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டது. இக்கோயிலின் கோபுரம் தவித்த அனைத்துப் பகுதிகளும் அழிந்துள்ளது. கோயில் கோபுரம் மட்டும் எஞ்சியுள்ளது. தற்போது இக்கோயில் கருவறையில் சிவலிங்கம், விஷ்ணு, நரசிம்மர், விநாயகர், கார்த்திகேயன் மற்றும் உமாமகேஸ்வரி விக்கிரககங்கள் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. கோயில் கருவறையின் பழைய சிவலிங்கம் சிதைவுற்றதால் கோயிலின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரலதா_கோயில்&oldid=3708147" இலிருந்து மீள்விக்கப்பட்டது