இந்திராணி சென்
இந்திராணி சென் (Indrani Sen) எனும் பெங்காலி பாடகி நஸ்ருல் கீத்தி மற்றும் ரவீந்திர சங்கீத்துக்குப் பெயர் பெற்றவர் ஆவார்.[1]
இந்திராணி சென் Indrani Sen | |
---|---|
இயற்பெயர் | ইন্দ্রাণী সেন |
பிறப்பிடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
இசை வடிவங்கள் | அதுனிக் பெங்காலி பாடல்கள், நசுருல் கீத்தி, ரவீந்திர சங்கீதம் |
தொழில்(கள்) | பாடகி |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1970–முதல் |
இணைந்த செயற்பாடுகள் | பாடகி, பாடலாசிரியர் |
இணையதளம் | singerindranisen.in |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇந்திராணி சென் பாடகி சுமித்ரா சென்னின் மகள் ஆவார். இவரது தங்கை ஸ்ரபானி சென் ஆவார். இவரது ஆரம்பக்கால பாடலானது இவரது தாயின் வழிகாட்டுதலின் கீழ் பாடப்பட்டது. பின்னர் இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெங்கால் இசைக் கல்லூரியில் பயின்றார். பின்னர் தெபப்ரதா பிஸ்வாஸால் மரபு சார்ந்த மற்றும் புரபி தத்தா நஸ்ருல் கீத்தியில் பயிற்சி பெற்றார்.[2]
கொல்கத்தாவில் உள்ள உள்ள கல்கத்தா மகளிர் கல்லூரியில் பொருளாதாரத் துறையின் தலைவராகவும் உள்ளார்.[3]
இந்திராணியின் தாயார் சுமித்ரா சென் 3 சனவரி 2023 அன்று தனது 89வது வயதில் காலமானார் [4]
விருதுகளும் சாதனைகளும்
தொகுஇந்திராணி பெங்காலி திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் – சிறந்த பெண் பின்னணி விருதினை - 1993-ல் ஸ்வேத் பதரேர் தலா [5] மற்றும் மீண்டும் 1995-ல் சந்தியா தாரா திரைப்படத்திற்காகப் பெற்றார்.
இந்திராணி இந்தித் திரைப்படங்கள், பெங்காலி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான பின்னணிப் பாடகி, மேலும் மேற்கு வங்க அரசின் பங்கா பூசன் உட்படப் பல விருதுகளைப் பெற்றவர்.[6] 2012ஆம் ஆண்டு இந்திரா காந்தி கலாச்சார மையத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் இரவீந்திரநாத் தாகூரின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தியா மற்றும் வங்காளதேசம் கூட்டுக் கொண்டாட்டங்களில் சென் இசைநிகழ்ச்சியினை நடத்தினார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sen, Debolina (15 April 2018). "Series on journey of popular faces hits the web". Times of India. https://m.timesofindia.com/tv/news/bengali/series-on-journey-of-popular-faces-hits-the-web/articleshow/63771318.cms.
- ↑ 2.0 2.1 Alom, Zhangir (13 February 2012). "Songs and poems of Tagore resound at National Museum". Daily Star. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
- ↑ .
- ↑ "Legendary Singer Sumitra Sen passes away at the age of 89". டைம்ஸ் நவ். 3 January 2023.
- ↑ "Lesser known facts about Rituparna Sengupta". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
- ↑ Mukherjee, Abhijeet (11 April 2005). "Back to the roots". The Telegraph. Archived from the original on 10 September 2018. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.