இந்திரா காந்தி சாலை

இந்திரா காந்தி சாலை அல்லது இந்திரா காந்தி சரணி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் உள்ள சாலை ஒன்றாகும். இது முன்னர் செஞ்சாலை என அழைக்கப்பட்டது. மத்திய கொல்கத்தாவில் இச்சாலை ஈடன் கார்டனிலிருந்து (ரசுமோனி பகுதி-கோஸ்தோ பால் சரணி சந்திப்பு) வில்லியம் கோட்டை மேற்கு வாயில் (டஃபெரின் சாலை-அவுட்ராம் சாலை சந்திப்பு) வரை செல்கிறது. வில்லியம் கோட்டை மேற்கு வாயிலுக்கு தெற்கே, செஞ்சாலை கேசுவரினா சாலை/கிதிர்பூர் சாலையாக மாறுகிறது.[1] 1820ஆம் ஆண்டு[2] பவுல்வர்டு சாலை அமைக்கப்பட்டது. இது கொல்கத்தா மைதானத்தை இரண்டாகப் பிரிக்கிறது.[3] பிரித்தானிய அதிகாரிகள் அணிவகுப்புகளை நடத்தும் வகையில் இச்சாலை அமைக்கப்பட்டது.[3] இதனுடைய மேற்பகுதியின் காரணமாக இச்சாலைக்குச் செஞ்சாலை எனப் பெயரிடப்பட்டது.[3]

இந்திரா காந்தி சாலை
முந்தையபெயர்கள் :செஞ்சாலை
பராமரிப்பு :கொல்கத்தா மாநகராட்சி
அஞ்சல் குறி:700021
அமைவிடம்:கொல்கத்தா, இந்தியா
வடக்கு முனை:ஈடன் கார்டன்ஸ்
தெற்கு முனை:வில்லியம் கோட்டை மேற்கு வாயில்
Construction
முழுமை பெற்ற நாள்:1820
செஞ்சாலையில் குடியரசு தின அணிவகுப்பு

இரண்டாம் உலகப் போரின் போது, கல்கத்தாவின் மையப் பகுதியில் உள்ள சாலை, போர் விமானங்கள் தரையிறங்கும் பகுதியாகச் செயல்பட்டது. வருடாந்திர கொல்கத்தா பேரோட்டம் செஞ்சாலையில் உள்ள படைக்கலவீரர் மன்றத்தின் வெளிப் பகுதியிலிருந்து தொடங்குகிறது.[4] 'இந்திரா காந்தி சாலை' என்ற பெயர் 1985-ல் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Google maps
  2. Cotton, H.E.A., Calcutta Old and New, 1909/1980, p 72, General Printers and Publishers Pvt. Ltd.
  3. 3.0 3.1 3.2 Robert H. Farquharson (2004). For Your Tomorrow: Canadians and the Burma Campaign, 1941-1945. Trafford. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4120-1536-3.
  4. "Ninth edition of Kolkata marathon to be held on March 6". NewsX. 2015-12-24. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_காந்தி_சாலை&oldid=3394563" இலிருந்து மீள்விக்கப்பட்டது