இந்திரா காந்தி ராட்டிரிய மானவ் சங்கராலயா

மானுடவியல் அருங்காட்சியகம்

இந்திரா காந்தி ராட்டிரிய மானவ் சங்கராலயா (Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya) மனிதகுலத்தின் தேசிய அருங்காட்சியகம் அல்லது மனிதர் மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் நகரின் சியாமளா மலையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் நேரம் மற்றும் விண்வெளியில் மனிதகுலத்தின் கதையை சித்தரிக்கிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய இனவியல் அருங்காட்சியகம் ஆகும்.[1]

இந்திரா காந்தி ராட்டிரிய மானவ் சங்கராலயா
இந்திரா காந்தி ராட்டிரிய மானவ் சங்கராலயா
Map
முன்னாள் பெயர்
மனிதகுலத்திற்கான தேசிய அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது21 March 1977; 47 ஆண்டுகள் முன்னர் (21 March 1977)
அமைவிடம்சியாமளா மலைகள், போபால், மத்தியப் பிரதேசம் 462013
ஆள்கூற்று23°13′56″N 77°22′39″E / 23.232279°N 77.37761°E / 23.232279; 77.37761
வகைமானிடவியல் அருங்காட்சியகம்
இயக்குனர்முனைவர் புவன் விக்ரம்
வலைத்தளம்www.igrms.gov.in
அருங்காட்சியகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள மணிப்பூர் கலாச்சார நடன சிலை

பழங்குடியினர் வாழ்விடம், கடலோர கிராமம், பாலைவன கிராமம், இமயமலை கிராமம், பாறை கலை பாரம்பரியம், புராண பாதை, ஆற்றுப் பள்ளத்தாக்கு கலாச்சாரம், அய்யனார் ஆலய வளாகம் மற்றும் பாரம்பரிய தொழில்நுட்ப பூங்கா ஆகிய திறந்தவெளி கண்காட்சிகளை இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் தென்னிந்திய பிராந்தியத்திற்கான பிராந்திய மையமும் உள்ளது, இது கருநாடகாவின் மைசூரில் அமைந்துள்ளது.[2]

வரலாறு

தொகு

1970 ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய அறிவியல் பேராய சங்க அமர்வின் ஒரு பகுதியாக, "மானுடவியல் மற்றும் தொல்லியல் பிரிவின் தலைவர் சச்சின் ராய், தனது தலைமை உரையில், நாட்டில் 'மனித அருங்காட்சியகம்' தேவை என்பதை வலியுறுத்தினார்". இதற்காக மத்தியப் பிரதேச மாநில அரசு 200 ஏக்கர் நிலத்தை வழங்கியது. இதன் விளைவாக இந்த அருங்காட்சியகம் மாநிலத்தில் முறையாக நிறுவப்பட்டது. பின்னர் 21 ஏப்ரல் 1979 அன்று மத்திய அமைச்சர் டாக்டர் பிரதாப் சந்திர சுந்தர் இதனை திறந்து வைத்தார். ஆரம்பத்தில், இந்த அருங்காட்சியகம் புதுதில்லியில் உள்ள பகவல்பூர் இல்லத்தில் அமைந்திருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Roy Chowdhury, Bipasa (2018). "Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya: A New Paradigm to Preserve our Cultural Heritage". International Journal of Research in Engineering, IT and Social Sciences 8 (7): 243-246. பன்னாட்டுத் தர தொடர் எண்:2250-0588. http://indusedu.org/pdfs/IJREISS/IJREISS_2098_99018.pdf. 
  2. "The Southern Regional Centre of IGRMS, at Maisuru (Mysore)".

வெளி இணைப்புகள்

தொகு