இந்திரா ஜெய்சிங்

இந்திரா ஜெய்சிங் (Indira Jaising பிறப்பு 3 ஜூன் 1940) [1] ஓர் இந்திய வழக்கறிஞர் ஆவார், அவர் மனித உரிமைகளை ஊக்குவிப்பதில் தனது சட்டப்பூர்வ செயல்பாட்டிற்காக பரவலாக அறியப்படுகிறார். 2018 ஆம் ஆண்டில்,பார்ச்சூன் பத்திரிக்கையின் உலகின் 50 தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் அவர் 20 வது இடத்தைப் பிடித்தார். [2] அவர் லாயர்சு கல்க்டிவ் என்ற பெயரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதற்காக உள்துறை அமைச்சகத்தால் இதன் உரிமம் நிரந்தரமாக தடை செய்யப்பட்டது.[3][4] அரசு சார்பற்ற அமைப்பு குறிக்கோள்களில் குறிப்பிடப்படாத வகையில் என்ஜிஓ வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதாக இந்திய நடுவண் அரசு குற்றம் சாட்டியது. இருப்பினும், அவரது அரசு சாரா அமைப்பின் உள்நாட்டு கணக்குகளை முடக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், இந்த வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்கிறது.[5]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ஜெய்சிங் மும்பையில் சிந்தி இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் மும்பையில் தனது பள்ளி கல்வியை பயின்றார். பின்னர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். [1] 1962 இல், பம்பாய் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். [1]

1981 ஆம் ஆண்டில், அவரது கணவர் ஆனந்த் குரோவருடன் சேர்ந்து, அவர் பெண்ணிய மற்றும் இடதுசாரி காரணங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான லாய்ர்சு கல்க்டிவினை துவங்கினார். 1986 ஆம் ஆண்டில், பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆனார். அவரது பெண்ணியம் மற்றும் வலுவான ஆளுமை சோனியா காந்தியை ஈர்க்கச் செய்தது. அதன் விளைவாக 2009 ஆம் ஆண்டில், ஜெய்சிங் இந்தியாவின் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆனார். தனது சட்ட வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, அவர் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்.

பெண்களுக்கான சண்டை தொகு

கேரளாவில் சிறுபான்மையின கிறிஸ்தவ பெண்களுக்கு சமமான பரம்பரை உரிமைகளை வழங்க வழிவகுத்த மேரி ராய் வழக்கு மற்றும் கேபிஎஸ் கில் மீது வழக்கு தொடர்ந்த இந்தியக் குடிமைப் பணி அதிகாரி ரூபன் தியோல் பஜாஜ் உட்பட பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான பல வழக்குகளை ஜெய்சிங் வாதிட்டார். ஜெய்சிங் கீதா ஹரிஹரனின் வழக்கையும் வாதிட்டார், பாலியல் துன்புறுத்தலின் முதல் வழக்குகளில் இதுவும் ஒன்று, இந்த வழக்கில் வெற்றிகரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏஎஸ் ஆனந்த் தலைமையிலான ஒரு அமர்வில் இந்து சட்டத்தின் கீழ், தாயும் தனது இளையோர் குழந்தைகளின் "இயற்கை பாதுகாவலர்" என்று கூறினார். எனவே, தாயின் பெயரையும் குழந்தை தலைப்பெழுத்தாக வைத்துக் கொள்ள முடியும் என கூறினர் . கேரள உயர் நீதிமன்றத்தில் இந்திய விவாகரத்துச் சட்டத்தின் பாகுபாடான விதிகளை ஜெய்சிங் எதிர்த்து வழக்காடினார், இதனால் கிறிஸ்தவ பெண்கள் கொடுமை அல்லது கைவிடப்பட்டதன் அடிப்படையில் விவாகரத்து பெற முடியும், இந்த உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அவர் மீதான பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், டீஸ்டா செடல்வாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினார். [6]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Indira Jaising (India)" (PDF). United Nations Human Rights - Office of the High Commissioner. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
  2. "In a First an Indian Lawyer Makes It to Fortune's World's Greatest Leaders List: Indira Jaising Ranked 20 in the List on a Day She Faced Setback from SC". 2018-04-19.
  3. "MHA cancels FCRA licences of 1,300 NGOs". Rahul Tripathi, ET Bureau. Economic Times (Economic Times). November 8, 2019. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mha-cancels-fcra-licences-of-1300-ngos/articleshow/71964523.cms?from=mdr. 
  4. PTI (2016-12-07). "Home Ministry cancels licence of Indira Jaising's NGO". The Hindu. http://www.thehindu.com/news/national/Home-Ministry-cancels-licence-of-Indira-Jaising%E2%80%99s-NGO/article16773098.ece. 
  5. Correspondent, Special. "Defreeze accounts of Indira Jaisingh's NGO: HC" (in en). The Hindu. http://www.thehindu.com/news/cities/mumbai/Defreeze-accounts-of-Indira-Jaisingh%E2%80%99s-NGO-HC/article17118258.ece. 
  6. "Jaising Leads Protest Against Setalvad's 'Victimisation'".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_ஜெய்சிங்&oldid=3702217" இலிருந்து மீள்விக்கப்பட்டது