இந்துஸ்தான் ஜிந்தாபாத்
இந்துஸ்தான் ஜிந்தாபாத் (Hindustan Zindabad, இந்தி: हिन्दुस्तान ज़िन्दाबाद , உருது: ہندوستان زِندہ باد பொருள் இந்துஸ்தான் வாழ்க ) என்பது ஒரு இந்துசுத்தானி சொற்றொடர் மற்றும் போர்க்குரல் ஆகும். இந்த சொற்றோடர் பொதுவாக சொற்பொழிவுகள் மற்றும் தகவல்தொடர்புகளில் இந்தியா மீதான தேசபக்தியைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இது "வாழ்க இந்தியா" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [1] இது ஒரு தேசியவாத முழக்கமாகும். [2] மேலும் காலனித்துவத்துக்கு பிந்தைய இந்தியாவில் தீவிர விவசாயிகள் இயக்கங்கள் போன்ற எதிர்ப்பு இயக்களில் பயன்படுத்தப்பட்டது. [3] இந்த முழக்கத்தின் மாற்று வடிவங்களாக ஜெய் ஹிந்த், இந்தியா ஜிந்தாபாத் ஆகியவை உள்ளன. [4] துடுப்பாட்ட போட்டிகளில் இந்திய அணியை உற்சாகப்படுத்தும் போது இதுபோன்ற முழக்கங்கள் எழுப்புவது வழமையாகும். [4] [5]
சொற்பிறப்பியல்
தொகுசமகால பயன்பாட்டில், இந்துஸ்தான் என்ற சொல் பொதுவாக 1947 முதல் நவீன இந்தியாவைக் குறிக்கிறது. இது பண்டைய பாரசீக சொல்லான இந்துவிலிருந்து வந்ததாக பொதுவாக நம்பப்படுகிறது. இது சிந்து ஆற்றின் சமசுகிருதப் பெயரான சிந்துவிலிருந்து பெறப்பட்டது. [6] பழைய பாரசீகம் சிந்துவுக்கு அப்பால் வாழும் மக்களை இந்துக்கள் என்று குறிப்பிட்டது. இது அவெஸ்தான் பின்னொட்டுடன் இணைந்தது -ஸ்தான் (சமஸ்கிருத "ஸ்தான்", என இரண்டிலும் "இடம்" என்று பொருள்படும்) [7] ஹிந்துஸ்தான் என்றானது. இதன் பொருள் (பாரசீகத்திலிருந்து) சிந்துவின் மறுபுறம் உள்ள நிலம்.
ஜிந்தாபாத் ([கருத்தியல், நபர், நாடு] என்றென்றும் வாழ்க) என்பது ஒரு நபர் அல்லது நாட்டின் பெயருக்குப் பிறகு சேர்க்கப்படும் ஒரு பொதுவான உருது மற்றும் பாரசீக பின்னொட்டு ஆகும். இது வெற்றி, தேசபக்தி, பிரார்த்தனையை வெளிப்படுத்த பயன்படுகிறது. [8]
வன்முறையில் பயன்பாடு
தொகுஇந்துஸ்தான் ஜிந்தாபாத் மற்றும் அதற்கு இணையான பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கம் போன்றவை, இந்தியப் பிரிவினையின் போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின்போது பயன்படுத்தப்பட்டது. கூட்டுப் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் இந்த வாசகங்கள் பச்சை குத்தப்பட்டன. [9]
பரவலர் பண்பாட்டில்
தொகுஅண்மைக் காலங்களில் இந்த முழக்கத்தின் பிரபலமான பயன்பாடு கதர்: ஏக் பிரேம் கதா திரைப்படத்தில் இடம்பெற்றது. இந்தியப் பிரிவினையின் போது சகினா அலி என்ற முசுலீம் பெண்ணைக் காதலிக்கும் தாரா சிங் ( சன்னி தியோல் ) என்ற சீக்கிய இளைஞன் குறித்து இந்தப் படம் பேசுகிறது. சகினாவின் தந்தை சமயம் மற்றும் நாட்டு வேறுபாடுகள் காரணமாக திருமணத்தை ஏற்க மறுக்கிறார். ஆனால் சிங் இசுலாம் சமயத்திற்கு மாறி, பாக்கித்தானில் இந்துஸ்தான் முர்தாபாத் இந்துஸ்தான் முர்தாபாத் (இந்தியாவுக்கு மரணம்) என்று நூற்றுக்கணக்கான சாட்சிகளின் முன்னிலையில் முழங்கி திருமணம் செய்ய நிபந்தனை விதிக்கிறார். ஆனால் சிங் அங்கு அவர்களின் விருப்பத்துக்கு மாறாக, இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று அவர்களுக்கு எதிராக முழக்கம் செய்கிறார். பின்னர் ஒரு அடி குழாயை அடியோடு பிடுங்குகிறார். மேலும் அவரது கருத்துக்களால் கோபமடைந்து தாக்கும் கும்பலான சில உள்ளூர் மக்களைக் கொல்கிறார்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sarina Singh. Lonely Planet India. Lonely Planet.
- ↑ Christine Everaer. Tracing the Boundaries Between Hindi and Urdu: Lost and Added in Translation Between 20th Century Short Stories. BRILL.
- ↑ Debal K. Singha Roy. Peasant Movements in Post-Colonial India: Dynamics of Mobilization and Identity. SAGE.
- ↑ 4.0 4.1 Nikhita Sanotra (3 April 2011). "India Zindabad! rings across Dubai after cricket victory". Yahoo! News.
- ↑ "World Cup semifinal: Mohali citizens throw open homes to Pak fans". Indian Express. 24 March 2011.
- ↑ Lipner, Julis (1998), Hindus: their religious beliefs and practices, Routledge, pp. 7–8
- ↑ "Unlimited: What does -istan" mean as in Pakistan, Uzbekistan or Afghanistan?". Guardian. பார்க்கப்பட்ட நாள் 2012-05-15.
- ↑ "Pakistan, India have no option but to promote peace: Shahbaz". Thenews.com.pk. 2012-05-08. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
- ↑ Ritu Menon; Kamla Bhasin (1998). Borders & Boundaries: Women in India's Partition. Rutgers University Press. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780813525525.