சன்னி தியோல்

சன்னி தியோல் (Sunny Deol) என்றழைக்கப்படும் அஜய் சிங் தியோல் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சீக்கிய சாட் குடும்பத்தில் பிறந்தார். நடிகர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்தியத் திரைப்படத்துறையில் அதிக வசூல் செய்த நடிகர்களில் ஒருவரான இவர், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக 90 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக தனது அதிரடி சண்டைக் காட்சி மற்றும் கதாநாயக ஆளுமைக்கு பெயர் பெற்றவர்.[2] தியோல் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.[3][4][5]

சன்னி தியோல்
2024 இல் தியோல்
இந்திய மக்களவை உறுப்பினர், மக்களவை
பதவியில்
18 சூன் 2019 – 4 சூன் 2024
முன்னையவர்சுனில் குமார் ஜகர்
பின்னவர்சுக்ஜிந்தர் சிங் ரந்த்வால்
தொகுதிகுர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி, பஞ்சாப்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பூஜா தியோல்
பிள்ளைகள்2
பெற்றோர்தர்மேந்திரா
வாழிடம்ஜுகூ 3, 11 வது சாலை, வில்லே பார்லி மும்பை
பணிநடிகர், அரசியல்வாதி

தொழில் வாழ்க்கை

தொகு

பிரபல இந்தி நடிகரான தர்மேந்திராவின் மூத்த மகனான தியோல் 1983 ஆம் ஆண்டு பீட்டாபாய் என்ற இந்தி திரைப்படத்தில் புதுமுக நடிகையான அம்ரிதா சிங்குடன் முதன் முதலில் அறிமுகமாகனார். வணிகமுறையில் இப்படம் பெரும் வெற்றி பெற்றதால் [6] அர்ஜுன் (1985), பாப் கி துனியா (1988) மற்றும் திரிதேவ் (1989) போன்ற அதிரடி படங்களில் நடித்து திரைத்துறையில் புகழ் பெற்றார். மேலும் கொலை குற்றம் சாட்டப்பட்ட ஒரு குத்துச்சண்டை வீரரைப் பற்றிய கதையான ராஜ்குமார் சந்தோசியின் காயல் (1990) திரைப்பட வெற்றியின் மூலம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது [5] மற்றும் தேசிய திரைப்பட விருது-சிறப்பு தேர்வுக்குழு விருது (திரைப்படம்). இயக்குநர் சந்தோஷியின் குற்றப்படமான ஒரு துடிப்பான வழக்கறிஞரின் கதையை சித்தரித்த டாமினி (1993) திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதும் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தன.[5] இவர் டார் (1993), ஜீத் (1996), காடக் (1996), ஸித்தி (1997), மற்றும் அர்ஜுன் பண்டிட் (1999) ஆகிய படங்களின் மூலம் தனது திரைப்படத்தொழிலில் தொடர் வெற்றிகளை பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி பிறந்த [7] சன்னி தியோலின் இயற்பெயர் அஜய் சிங் தியோல் ஆகும். [8]. இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சானேவால் கிராமத்தில் [9] பஞ்சாபிய சாட் குடும்பத்தில் பிறந்தார். [10][11][12] இவர் பிரபல இந்தி நடிகரான தர்மேந்திரா மற்றும் [13] பிரகாஷ் கவுர் தம்பதியரின் மூத்த மகன் ஆவார். [14] சிறு வயதில் தனது குறும்புச் சேட்டைகளால் தாய் பிரகாஷ் கவுரிடம் அடிக்கடி அடி வாங்கிய தியோல் பின்னாளில் அவரது தாயால் மிகவும் நேசிக்கப்பட்ட மகனாகத் திகழ்ந்தார்.[15] தந்தை தர்மேந்திராவுக்கு மிகவும் பயந்த சுபாவமும், கீழ்ப்படிந்தவராகவும் விளங்கினார்.[16] மும்பையில் உள்ள புனித இருதய ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த தியோல் தனது உயர்கல்வியை மும்பையில் உள்ள ராம்நிரஞ்சன் ஆனந்திலால் பொடார் வணிகம் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் தொடர்ந்தார் [17] பள்ளியில் வாசிப்பதிலும் எழுதுவதிலும் சிரமங்களை ஏற்படுத்திய எழுத்துதயக்கம் இருப்பதாக தியோல் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். [18] இருப்பினும் கல்லூரிப் படிப்பின் போது விளையாட்டுத்துறையிலும் பிறதுறை செயற்பாட்டிலும் சிறந்து விளங்கினார்.இருப்பினும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சண்டையிடுதல், வம்பிழுத்தல் போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபட்டார். தனது மகிழுந்தில் எப்பொழுதும் ஆக்கி மட்டை மற்றும் ஆயுதங்களை பாதுகாப்பிற்காக வைத்திருந்தார். சாலைகளில் பந்தையத்தில் ஈடுபட்டும் தனது மகிழுந்தில் மாற்றம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்த இவரை அவரது குடும்பத்தினர் ஒதுக்கினர். [19]

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, இவர் பர்மிங்காமில் உள்ள புகழ்பெற்ற ஓல்ட் ரெப் தியேட்டரில் நடிப்புக்கலை பயின்றார்.[20] அங்கு அவர் மேடை நிகழ்ச்சிகளை நிகழ்த்திய இவர், தனது திரைப்பட அறிமுகத்திற்காக இந்தியா திரும்பினார். புகழ்பெற்ற பாலிவுட் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சசி கபூரின் தனிப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் இவர் அறிமுகமானார்.[21]

அரசியல் வாழ்க்கை

தொகு

தியோல் 23 ஏப்ரல் 2019 அன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2019 இந்திய மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[22] தேர்தல் பரப்புரையின் போது, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்திற்காக எல்லையைத் திறப்பதாக உறுதியளித்தது உட்பட பல வாக்குறுதிகளை அவர் அளித்தார். அவரது நோக்கங்கள் பாராட்டப்பட்டாலும், இந்த அணுகுமுறை நடைமுறைக்கு மாறானது மற்றும் அரசியல் ரீதியாக அப்பாவித்தனமானது என்று விமர்சிக்கப்பட்டது.[23] இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் சுனில் ஜாகரை 82,459 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இருந்த போதிலும் தியோலின் அரசியல் வாழ்க்கை தோல்வியடைந்ததாகக் கருதப்படுகிறது. இது குறித்து பஞ்சாபின் பிரபல பத்திரிக்கையான தி டிரிப்யூன் நாளிதழ் "ஒரு மக்களவை உறுப்பினராக அவரது செயல்பாடுகளை மதிப்பிடும்போது,வரவிருக்கும் காலங்களில் வரலாறு அவருக்கு ஒருபோதும் இரக்கம் காட்டாது” என கடுமையாகச் சாடியது."[23] 2023 டிசம்பர் 11 அன்றைய நிலவரப்படி அவரது நாடாளுமன்ற வருகை 18% இது தேசிய சராசரி 79% ஐ விட மிக மிகக் குறைவானதாகும்.[24] தியோல் ஆறு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாமல் தவறவிட்டார். குர்தாஸ்பூர் குறித்து ஒரே ஒரு கேள்வியுடன் நான்கு கேள்விகளை மட்டுமே அவரது பதவி காலத்தில் முன்வைத்தார். அவர் தனது தொகுதியில் சட்டவிரோத மணல் சுரங்கம் குறித்து விசாரனை நடத்தினார். ஆனால் எவ்வித ஆக்கப்பூர்வமான விவாதத்திலும் ஈடுபடவில்லை. தியோல் 2020 செப்டம்பருக்குப் பிறகு குர்தாஸ்பூருக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். ஆகஸ்ட் 2023 இல் அவரது தொகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கூட திரும்பி வர முடியவில்லை. மக்களவை உறுப்பினராக தொகுத மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் பெற உரிமை இருந்தபோதிலும், தியோல் தனது எம். பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஐந்து ஆண்டுகளில் 7 கோடி ரூபாயை மட்டுமே பயன்படுத்தினார். தனது பதவிக்காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில், அவர் எவ்விதமான நிதியையும் அரசிடம் கோரவில்லை மேலும் கிடைக்கக்கூடிய வளங்களிலிருந்து தனது தொகுதியில் எதையும் செலவிடவில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகிறது.[25]

விருதுகள்

தொகு

பிலிம்ஃபேர் விருதுகள்

தொகு
  • 1983 ல் - பேடாப் திரைப்படத்திற்காக பிலிம் ஃபேரின் சிறந்த நடிகருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.[1]
  • 1991ல்-வெற்றியாளர் , காயல் பிலிம்ஃபேரின் சிறந்த நடிகருக்கான விருது
  • 1994 - வெற்றியாளர் , டாமினி - லைட்னிங் திரைப்படத்திற்காக பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகருக்கான விருது
  • 1997- பிலிம்ஃபேரின் சிறந்த நடிகருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
  • 1998 - பார்டர் திரைப்படத்திற்காக பிலிம்ஃபேரின் சிறந்த நடிகருக்கான விருது க்காக பரிந்துரைக்கப்பட்டார்.
  • 2002 - பிலிம்ஃபேரின் சிறந்த நடிகருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.Gadar: Ek Prem Katha

ஜீ சினி விருதுகள்

தொகு
  • 2002- வெற்றியாளர் , [[ஆண் நடிகருக்கான -சீ சைன் சிறப்பு விருது மிகச்சிறந்த நடிப்பிற்காக பெற்றார்|ஆண் நடிகருக்கான -“ஜீ சினி சிறப்பு விருது” மிகச்சிறந்த நடிப்பிற்காக பெற்றார்

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்

தொகு
  • 2001- வெற்றியாளர் சிறந்த நடிகருக்கான விருது

ஐஐஎப்எ விருதுகள் \

தொகு
  • 2001 - சிறந்த நடிகருக்கான விருது பரிந்துரைக்கப்பட்டது.

பிற விருதுகள்

தொகு
  • தேசிய திரைப்பட விருது- சிறப்பு நடுவர் குழு விருது: காயல்
  • சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது: டாமினி-லைட்னிங்
  • 2002 - வெற்றியாளர் சிறந்த நடிகருக்கான விருது, சான்சுய் வீவர்ஸ்' “அனைவரின் தேர்வு திரைப்பட விருதுகள்”.[2] [3] பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம்

திரைப்படப் பட்டியல்

தொகு
ஆண்டு தலைப்பு பாத்திரம் பிற குறிப்புகள்
1983 பேடாப் சன்னி
1984 சன்னி சன்னி இந்திரஜித்
சோனி மகிவால் மஹிவாள்
மன்லில் மன்லில் விஜய்
1985 சாபர்டஸ்ட் ஷியாம்
அர்ஜூன் அர்ஜூன்
1986 சவேரய் வாலி காடி ரவிடாஸ்
சுல்டனட் சுல்தான்
சாமுந்தர் அஜித்
1987 டெகாயிட் அர்ஜுன் யாதவ்
1988 யாடீம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா
இன்டிக்வாம்
பாப் கி துனியா சுராஜ் / அஷோக்
ராம்-அவ்தார் ரேம்
1989 நாகினா பகுதி II ஆனந்த்
மஜ்பூர் இன்ஸ்பெக்டர் சுனில்
மெயின் டெரா துஷ்மன் கோபால்
ஜோஷிலேய் டாரா
ட்ரைதேவ் இன்ஸ்பெக்டர் கரன் ஸக்ஸேனா
சால்பாஸ் சூரஜ்
1990 வர்டி அஜய் குமார் சிங்
ஆக் கா கொலா விக்ரம் சிங் /ஷங்கர் 'ஷாகா'
க்ரோத் அஜய் ஷுக்லா
காயல் அஜய் மெஹ்ரா
1991 யோதா அட்வகேட் கரன் ஸ்ரீவட்சவ்
ஷங்கரா ஷங்கரா
நரசிம்ஹா நரசிம்ஹா(1991 திரைப்படம்)
விஷ்ணு- தேவா இன்ஸ்ப்.விஷ்ணு சுப்ரமணியம்/ஜாக் D'ஸௌஸா
1992 விஷ்வத்மா இன்ஸ்பெக்டர் ப்ரபாட் சிங்
1993 குணா ரவி சோனி
லூடெரெல் (1993)
காஸ்த்ரியா வினய் ப்ரதாப் சிங்
டாமினி - லைட்னிங் கொவிந்
இஸ்ஸாட் கி ரோடீ(1993)
தர் சுனில் மல்ஹோத்ரா
1994 இன்சானியாட் கரிம் லாலா
1995 இம்திஹான் ராஜா
எ வயலன்ட் லவ் ஸ்டோரி சூரஜ் சிங்
அங்ராக்ஷக் அஜய்
1996 ஹிம்மட் ஏஜெண்ட் அஜய் ஸக்ஸேனா
ஜீத் கரண்
Ghatak: Lethal காஷி நாத்
அஜய் அஜய்
1997 எல்லைகள் மேஜர் குல்டீப் சிங்
ஸிட்டி தேவா ப்ரதான்
அவுர் பியார் ஹோ கயா அவரே ஸ்பெஷல் அப்பியான்ஸ் (பாடல்)
குஹார் ராஜா
1998 சோர் அர்ஜுன் சிங்க்
சாலாகென் விஷால் அக்னிஹோத்ரி
இச்கி டோபி உஸ்கே ஸார் பாங்ரா டான்சர்
1999 ப்யார் கொய் கெல் நஹின் ஆனந்த்
அர்ஜுன் பண்டிட் அர்ஜுன் டீக்சித்/அர்ஜுன் பண்டிட்
தில்லகி ரான்வீர் சிங்
2000 சாம்பியன்கள் ராஜ்வீர் சிங்
2001 ஃபார்ர்ஸ் டிசிபி கரண் சிங்
ஏக் பிரேம கதா டாரா சிங்
யே ராஸ்தே ஹைன் ப்யார் கே சாகர்
இந்தியன் டிசிபி ராஜஷேகர் அஸாட்
காஸம் ஷங்கர்
(2002). மா துஜ்ஜே சலாம் மேஜர் ப்ரதாப் சிங்
23 மார்ச்சு 1931: சாகீத் சந்திரஷெகர் ஆஸட்
ஜானி துஸ்மான்: ஏக் அனோகி ககானி கரண் ஸக்ஸேனா
கார்ஸ்: தி பர்டன் ஆப் ட்ரூத் சூரஜ் சிங்
2003) தி கீரோ: லவ் ஸ்டோரி ஆப் எ ஸ்பை மேஜர் அருண் கண்ணா/பாத்ரா/வாஹிட்
கைஸே கஹூன் கே ப்யார் ஹாய்
ஜால்: தி ட்ராப் அஜய் கௌல்
கேல் ஏசிபி ராஜ்வீர் Scஇந்தியா
2004 லகீர்- ஃபர்பிட்டென் லைன்ஸ் அர்ஜூன் ரானா
ரோக் சாகோ டு ரோக் லோ கபிர் (ஃபெந்தம்)
2005 ஜொ போலே சொ நிஹால் ஹவால்டர் நிஹார் சிங்
2006 நக்சா வீர்
டீஸ்ஸ்ரீ ஆன்க்ஹ் ஏசிபி அர்ஜுன் சிங்
2007 காஃபில்லா கோல். ஸமீர் அஹ்மெட் கான்
ஃபூல் அண்ட் ஃபைனல் முன்னா
பிக் பிரதர் தேவ்தர் காந்தி/ ஷர்மா
அப்னே அங்கட் சிங் சௌத்ரி
2008 ஹீரோஸ் விக்ரம் ஷெர்கில்
2009 நரி யஷ்வந்த் தேஷ்முக்
ரைட் யா ராங்
2010 த மேன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Members : Lok Sabha". 164.100.47.194. Archived from the original on 11 October 2020. Retrieved 30 August 2020.
  2. Hungama, Bollywood. "Highest Cumulative Box Office Collection by Actor - Bollywood Hungama". Bollywood Hungama (in ஆங்கிலம்). Archived from the original on 2 April 2024. Retrieved 2 April 2024.
  3. "40th nff 1993" (PDF). 9 March 2016. Archived from the original (PDF) on 9 March 2016. Retrieved 30 August 2020.
  4. "27 years of Ghayal: Sunny Deol film succeeded despite clash with Aamir-Madhuri's Dil". Hindustan Times (in ஆங்கிலம்). 22 June 2017. Archived from the original on 30 March 2019. Retrieved 30 August 2020.
  5. 5.0 5.1 5.2 "Filmfare Awards Winners From 1953 to 2020". Filmfare (in ஆங்கிலம்). Archived from the original on 4 February 2018. Retrieved 30 August 2020. பிழை காட்டு: Invalid <ref> tag; name "filmfare 1953 to 2020" defined multiple times with different content
  6. "2018 Has High Number Of Blockbusters". 9 January 2019. Archived from the original on 16 January 2024. Retrieved 16 January 2024.
  7. National Informatics Centre. "Shri Sunny Deol - Profile". Digital Sansad (in ஆங்கிலம்). Archived from the original on 17 May 2024. Retrieved 17 May 2024.
  8. "2019 Lok Sabha elections affidavit: I hereby declare". The Indian Express. 30 April 2019 இம் மூலத்தில் இருந்து 15 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230815112627/https://indianexpress.com/photos/india-news/lok-sabha-elections-2019-i-hereby-declare-bjp-congress-rahul-gandhi-narendra-modi-amit-shah-5658185/. 
  9. "In my 30-year career, I have spent five years in bed due to my backache: SDeol". The Times Of India இம் மூலத்தில் இருந்து 25 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225165914/https://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/In-my-30-year-career-I-have-spent-five-years-in-bed-due-to-my-backache-Sunny-Deol/articleshow/25126235.cms?curpg=2. 
  10. Dedhia, Sonil (3 January 2011). "Sunny Deol: Bobby and I are still scared of dad". Rediff.com இம் மூலத்தில் இருந்து 10 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241210104754/https://www.rediff.com/movies/slide-show/slide-show-1-sunny-deol-the-unsung-hero/20110103.htm. "I am a Jat, so it came naturally." 
  11. "Lok Sabha elections 2019: Sunny Deol banks on Punjabi roots, patriotic". Hindustan Times (in ஆங்கிலம்). 2 May 2019. Archived from the original on 5 March 2020.
  12. "Vijayta Films". 6 June 2011. Archived from the original on 6 June 2011. Retrieved 30 August 2020.
  13. "The Deols". vijaytafilms. Archived from the original on 6 June 2011. Retrieved 13 July 2011.
  14. "Sunny Deol's mother Prakash Kaur makes rare appearance at Gadar 2 premiere; Dharmendra, Bobby Deol, Tania also spotted". Hindustan Times. 12 August 2023 இம் மூலத்தில் இருந்து 18 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230818110021/https://www.hindustantimes.com/entertainment/bollywood/sunny-deol-mother-prakash-kaur-gadar-2-premiere-dharmendra-first-wife-bobby-deol-101691809934206.html. 
  15. "Sunny Deol recalls mom Prakash Kaur beating him with slippers when he got injured while playing". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/sunny-deol-reveals-childhood-memories-with-mom-prakash-kaur/amp_articleshow/109889625.cms. 
  16. "Sunny Deol On Equation With His Dad Dharmendra: "He Was A Fear Factor For Me"". NDTV.com. Archived from the original on 20 May 2024. Retrieved 20 May 2024.
  17. "Sunny 'Paaji' Deol's Gadar Educational Qualifications". www.mensxp.com (in ஆங்கிலம்). 19 October 2022. Archived from the original on 20 May 2024. Retrieved 20 May 2024.
  18. "Sunny Deol Reveals He Has Problem Learning English Due to Childhood Dyslexia - All About The Disease". India.com (in ஆங்கிலம்). 11 December 2023. Archived from the original on 20 May 2024. Retrieved 20 May 2024.
  19. "'Gadar 2' star Sunny Deol reveals he used to carry swords and hockey sticks in his car; says he got into fights everywhere and kept beating people up". The Times of India. 16 October 2023 இம் மூலத்தில் இருந்து 20 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240520125604/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/gadar-2-star-sunny-deol-reveals-he-used-to-carry-swords-and-hockey-sticks-in-his-car-says-he-got-into-fights-everywhere-and-kept-beating-people-up/articleshow/104436852.cms. 
  20. "Bollywood Trivia: Did you know that Sunny Deol has studied acting in England?". The Times of India. 20 August 2023 இம் மூலத்தில் இருந்து 21 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240521173914/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/bollywood-trivia-did-you-know-that-sunny-deol-has-studied-acting-in-england/amp_articleshow/102857697.cms. 
  21. "Sunny Deol". The Times of India. 18 June 2014 இம் மூலத்தில் இருந்து 21 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240521173917/https://photogallery.indiatimes.com/celebs/bollywood/sunny-deol/we-were-supposed-to-launch-karan-not-yrf-sunny-deol/sunny-deol/articleshow/36753826.cms. 
  22. PTI (23 April 2019). "Bollywood actor Sunny Deol joins BJP". Times of India. https://timesofindia.indiatimes.com/elections/news/bollywood-actor-sunny-deol-joins-bjp/articleshow/69003734.cms. 
  23. 23.0 23.1 "MP report card: Sunny Deol scores zilch". The Tribune. 22 March 2024 இம் மூலத்தில் இருந்து 4 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240404070610/https://www.tribuneindia.com/news/punjab/mp-report-card-sunny-deol-scores-zilch-603026. 
  24. "Ajay Singh Dharmendra Deol | PRSIndia". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 21 December 2023. Retrieved 21 December 2023.
  25. "Report card: Sunny Deol, Bollywood star who won election in just 20 days but couldn't win hearts". The Indian Express (in ஆங்கிலம்). 2 May 2024. Archived from the original on 27 December 2024. Retrieved 24 September 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னி_தியோல்&oldid=4227452" இலிருந்து மீள்விக்கப்பட்டது