இந்து மகாஜன சங்கம் (மலேசியா)

இந்து மகாஜன சங்கம் (Hindu Mahajana Sangam), மலேசியா நாட்டில் வாழும் இந்து சமயம் சார்ந்த தொழிலாளர்களின் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். 1935-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இதன் தலைமையிடம், மலேசியாவின் பினாங்கு மாநிலத் தலைநகரான ஜார்ஜ் டவுனில் இயங்குகிறது. 1935-ஆம் ஆண்டிற்கு முன்னர் இதனை கூட்டக்கடை மடம் என்று அழைக்கப்பட்டது.[1]

இந்து மகாஜன சங்கம்
அமைவிடம்
நாடு:மலேசியா
மாநிலம்:பினாங்கு
அமைவு:ஜார்ஜ் டவுன்
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:கூட்டக்கடை மாடம்
இணையதளம்:Hindu Mahajana Sangam


வரலாறு

தொகு

1933-ஆம் ஆண்டில் நடைபெற்ற பினாங்கு மகாமாரியம்மன் கோயில் முதல் குடமுழுக்கை ஒட்டி, 1935-ஆம் ஆண்டில் இந்து மகாஜன சங்கம், ஜார்ஜ் டவுனில் நிறுவப்பட்டது. முதன்முதலில் இந்த அமைப்பு சமயக் கடமைகளை கடைபிடிக்க வேண்டி நிறுவப்பட்டது. மேலும் இந்த தொண்டு நிறுவனம் மலேசியா வாழ் இந்துக்களின் கல்வி, சமூக/பண்பாடு மேம்பாடு மற்றும் பினாங்கு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தில்/வளர்ச்சியில் பங்கேற்பது மற்றும் தொழிலாளர்களின் ஒன்றியமாகச் செயல்படுகிறது. இச்சங்கத்தின் மண்டபம் அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில் மலையுச்சியில் உள்ளது.

தலைமையிடம்

தொகு

இந்து மகாஜன சங்கத்தின் தலைமையிடக் கட்டிடம் பினாங்கில் உள்ள தேவாலயத் தெருவில் 1935 முதல் 1988-ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. தற்போது பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுனில் உள்ள காந்திஜி ஆஸ்ரமத்தில் சொந்த கட்டிடத்தில் இயங்குகிறது.[2]

கோயில்கள் & திருவிழாக்கள்

தொகு

தைப்பூசம் விழாவை காந்திஜி மண்டபத்தில் விருந்து உபசாரத்துடன் கொண்டாடப்படுகிறது. அன்று பல பக்தர்கள் பால் காவடிகள் ஏந்தி, 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாக வந்து பாலதண்டாயுதபாணிக்கு பால் அபிசேகம் செய்வர்.

1951-ஆம் ஆண்டில் இந்து மகாஜன சங்கத்தினர், அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் அருகே பிள்ளையார் கோயிலை எழுப்பி குடமுழுக்கு செய்தனர். பின்னர் 1970-ஆம் ஆண்டில் இக்கோயிலை புதுப்பித்தது. மேலும் பிள்ளையார் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறது.

சித்திரைத் திருவிழாவின் போது ஐம்பொன் முருகன் விக்கிரகத்தை தேரில் அமர்த்தி, பகதர்கள் புடைசூழ, பாலதண்டாயுதபாணி கோயிலிருந்து, முத்து மாரியம்மன் கோயில் வரை ஊர்வலம் நடத்தப்படுகிறது. [3] [4] [5] [6]

இந்து மகாஜன சங்கம் சார்பில் முத்து மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.[7]1900-ஆம் ஆண்டு முதல் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவை குஞ்ச் பிகாரி எனும் கிருஷ்ணன் கோயிலில் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Hindu Mahajana Sangam Official Website".
  2. "Plan to demolish ashram for a new hall scrapped, The Star dated 27 January 2015".
  3. "Hindus mark annual festival, The Star dated 8 May 2006".
  4. "Annual Chitraparuvam fest, The Star dated 2 May 2007".
  5. "Chariot procession kicks off fest, The Star dated 4 May 2007".
  6. "Mini Thaipusam in living colour, The Star dated 12 May 2009".
  7. "Big celebration in Little India, The Star dated 26 October 2012".