இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம், 2005
இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம், 2005, 1956 இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களை இந்திய நாடாளுமன்றம் மேற்கொண்டது. அதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் 5 செப்டம்பர் 2005 அன்று ஒப்புதல் வழங்கினார். 9 செப்டம்பர் 2005 முதல் இச்சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது.[1] இது இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956ல் சொத்து உரிமைகள் தொடர்பான பாலின பாகுபாடு விதிகளை அகற்றுவதற்கு வழிவகுத்தது. இந்தியாவில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக, இந்திய சட்டத் துறையில் நடைபெற்ற ஒரு புரட்சிகரமான படியாகும்.
இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம், 2005 | |
---|---|
1956 இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தம் | |
சான்று | Act No. 39 of 2005 |
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
சம்மதிக்கப்பட்ட தேதி | 5 செப்டம்பர் 2005 |
முக்கிய திருத்தங்கள்
தொகு1956 இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 4 இன் துணைப் பிரிவு (2) நீக்கப்பட்டது. [2] மேலும் முதன்மை சட்டத்தின் பிரிவு 6 திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி தந்தை, தாத்தா அல்லது கொள்ளுத் தாத்தா செலுத்த வேண்டிய கடனை மகன், பேரன் அல்லது கொள்ளுப் பேரன் செலுத்துவதிலிருந்து முடிவுக்கு வந்தது.
விதிவிலக்கு
தொகுபிரிவு 6 இன் பிரிவு 5 இன் கீழ் திருத்தம் பின்வருமாறு விதிவிலக்கு அளிக்கிறது: இந்த பிரிவில் உள்ள எதுவும் 20 டிசம்பர் 2004க்கு முன் செயல்படுத்தப்பட்ட கடன்களுக்குப் பொருந்தாது. விளக்கம் - இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக "சொத்துப் பிரிவினை" என்பது பதிவுச் சட்டம், 1908 இன் கீழ் முறையாகப் பதிவுசெய்யப்பட்ட பிரிவினைப் சொத்துப் பத்திரத்தை நிறைவேற்றுவதன் மூலம் செய்யப்பட்ட எந்தவொரு சொத்துப் பிரிவினை அல்லது நீதிமன்றத்தின் ஆணையின் மூலம் மேற்கொள்ளப்படும் சொத்துப் பிரிவினை அடங்கும்.
முக்கிய அம்சங்கள் மற்றும் விளைவுகள்
தொகுஇத்திருத்தம் ஆண் மற்றும் பெண் உடன்பிறப்புகளின் சொத்து உரிமைகளை மிகப் பெரிய அளவில் சமநிலைப்படுத்தியுள்ளது. 2008 ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டம் பிற்போக்கான விளைவைக் கொண்டிருப்பதாகத் தீர்ப்பளித்தது. மேலும் மகள் தனது ஆண் உடன்பிறப்புகளுடன் இணைப் பங்காளியாக மாற, தந்தை 9 செப்டம்பர் 2005 அன்று உயிருடன் இருக்க வேண்டியதில்லை கருத்து தெரிவித்தது. 2005ஆம் ஆண்டிற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சொத்துப் பிரிவினை வழக்குகளுக்கும், நிலுவையில் இருந்த சொத்து வழக்குகளுக்கு இந்த சட்ட திருத்தம் பொருந்தும் [3]இந்த சட்ட திருத்தம் இந்திய அரசியலமைப்பின் 14, 15, & 21 ஆகியவற்றின் கீழ் உள்ள சமத்துவ உரிமையுடன் ஒத்துப்போகிறது.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Hindu Succession (Amendment) Act, 2005 comes into force from today". www.pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 5 July 2018.
- ↑ "Section 6 in The Hindu Succession Act, 1956". பார்க்கப்பட்ட நாள் 5 July 2018.
- ↑ "Daughters Born Before 2005 Have Equal Rights To Ancestral Property: SC". The Economic Times. 28 March 2018. https://economictimes.indiatimes.com/familybusinessforum/insights/daughters-born-before-2005-have-equal-rights-to-ancestral-property-sc/articleshow/63516453.cms.
- ↑ Kharat, Shital (6 February 2017). Effect of the Hindu Succession (Amendment) Act 2005.