தாயபாகம் (Dāyabhāga) என்பது இந்தியாவில் 1956 இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் வரை இந்துக்கள் தங்கள் பரம்பரை சொத்துக்களை எவ்வாறு வாரிசுகளிடையே பிரித்துக்கொள்வது என்பது பற்றிய இந்து சட்ட நூலாகும். இதனை எழுதியவர் ஜிமுதவாகனன் ஆவார். வங்காளப் பகுதியில் பிரித்தானிய இந்திய நீதிமன்றங்களில் தயாபாகச் சட்டம் கடைப்பிடிக்கப்பட்டது.[1] இருப்பினும் இது 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டம் மற்றும் சட்டத்தின் அடுத்தடுத்த திருத்தங்கள் காரணமாக மாறிவிட்டது. மேதாதிதி எழுதிய மிதாச்சாரம் பற்றிய விமர்சனங்களின் அடிப்படையில், அவரது பணி மிதாச்சாரத்தால் தடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. மிதாச்சாரம் நூல் இந்து சட்டத்தின் மரபுவழி கோட்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதே சமயம் தயாபாகம் முறை சீர்திருத்தப்பட்ட பதிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று பல அறிஞர்கள் முடிவு செய்ய இது வழிவகுத்தது.[2]

தாயபாகம் மற்றும் மிதாச்சாரம் நூல்களுக்கிடையேயான மைய வேறுபாடு, ஒருவர் சொத்தின் உரிமையாளராக மாறும் போது அடிப்படையாக கொண்டது. தாயபாகம் மகன்களுக்கு அவர்களின் தந்தையின் மூதாதையர் சொத்தில் அவர் இறக்கும் வரை உரிமை வழங்குவதில்லை. மிதாச்சாரம் மகன்கள் பிறந்தவுடன், மூதாதையர் சொத்துக்கான உரிமையை அளிக்கிறது. இந்நூலுக்கு 12 முறைக்கு மேல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.[3]

மொழிபெயர்ப்பு

தொகு

ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக் 1810 ஆம் ஆண்டில் தாயபாகம் நூலின் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பண்டிதர்களைப் பயன்படுத்தி மொழிபெயர்த்தார். கல்கத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியான கோல்ப்ரூக், தயாபாகம் நூலை அத்தியாயங்கள் மற்றும் வசனங்களாக உரையை அமைத்தார்.[4] மேலும் மொழிபெயர்ப்பில் பல பிழைகள் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது. தவறுகள் மூன்று காரணிகளால் ஏற்பட்டதாக ரோச்சர் நம்புகிறார்:[5]

சமஸ்கிருத நூல்களின் வடிவம்

தொகு

மொழிபெயர்ப்பாளர்கள் அறிந்திராத பழங்கால நாகரிகத்துடன் இந்த நூல்கள் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தன. வழக்கறிஞர்களுக்காக உரை எழுதப்பட்டது என்ற தவறான கருத்து. கோல்ப்ரூக் இந்தியாவில் இரண்டு சிந்தனைப் பள்ளிகளின் பிரிவை உருவாக்கினார். இந்தியாவின் பெரும்பான்மையாகப் பின்பற்றும் மிதாச்சாரம் முறை மற்றும் வங்காளத்தில் பின்பற்றும் தாயபாகம் முறை ஆகும்.

தாயபாகம் நூலில் உள்ள தலைப்புகள்

தொகு
  • தந்தை மற்றும் தாத்தாவின் சொத்துக்களை பிரித்தல்
  • தந்தையின் மரணத்திற்குப் பிறகு சகோதரர்களிடையே சொத்துக்களைப் பிரிக்கும் பரம்பரை நடைமுறை
  • குறைபாடுகள் காரணமாக வாரிசுரிமையிலிருந்து விலக்கப்பட்டவர்கள்
  • மகன் இல்லாமல் இறந்தவரின் வாரிசுகளி வரிசைகள்

தாயபாகம் நூலில் குறிப்பிடப்பட்டவர்கள்

தொகு
  1. மனு: ஸ்மிருதிகளில் ஜிமுதவாகனன் மனுவை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.
  2. யாக்யவல்க்கியர்
  3. விஷ்ணு
  4. நாரதர்
  5. பிரகஸ்பதி
  6. காத்தியாயனர்
  7. வியாசர்

தாயபாகத்திற்கும் மிதாச்சாரத்திற்கும் உள்ள மைய வேறுபாடுகள்

தொகு

மகன்களின் உரிமைகள்

தொகு
  • தந்தையின் பூர்வீகச் சொத்தில் மகனுக்கு அவன் (தந்தை) மரணம் அடையும் வரை உரிமை இல்லை. அல்லது தந்தை ஜாதியிலிருந்து ஒதுக்கிவைக்கப்படுவது அல்லது சந்நியாசம் மேற்கொளவது போன்ற பிற வழிகளில் தந்தையின் உரிமை அழிந்துவிடும். இது மிதாச்சாரததிற்கு நேர் எதிரானது. மிதாசாரத்தில் மகன்கள் பிறந்தவுடன் தந்தையின் சொத்தில் உரிமை வழங்குகிறது.

விதவையின் உரிமைகள்

தொகு

கணவரின் மரணத்தில் கணவரின் சொத்து உரிமையை விதவை மனைவியும் பெறுகிறார்.[6]

மூதாதையர் சொத்தில் உரிமை

தொகு

மூதாதையர் மற்றும் தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் தந்தை மட்டுமே ஆட்சி செய்வர் என்று தயாபாகம் குறிப்பிடுகிறது. ஆனால் மிதாச்சாரம் தந்தையின் மூதாதையர் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க தந்தைக்கு மகன்களின் ஒப்புதல் தேவையில்லை என கூறுகிறது. தயாபாகத்திற்கும், மிதாசாரத்திற்கும் முக்கிய வேறுபாடு என்னவென்றால், தந்தையின் மூதாதையர் மற்றும் தனிப்பட்ட சொத்துக்களின் மீதான முழு கட்டுப்பாட்டிற்கும் இடையே தயாபாகம் எந்த வித்தியாசத்தையும் பார்க்கவில்லை.

தனிப்பட்ட சொத்து

தொகு

மிதாச்சாரம் மற்றும் தாயபாகம் ஆகிய இரண்டிலும் தந்தையானவர் தனது தனிப்பட்ட சொத்துக்களை விரும்பியபடி யாருக்கும் எழுதி வைக்கும் உரிமை உண்டு.

பரம்பரைச் சொத்து

தொகு

தந்தை விரும்பினால் மட்டுமே மகன்கள், தந்தையின் மூதாதையர் சொத்தை தங்களுக்குள் பங்கு பிரிக்கலாம். ஒவ்வொரு மகனும் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தனது பங்கு சொத்த்தைக் கொண்டு அவர் விரும்பியதைச் செய்யும் திறனைக் கொண்டுள்ளனர்.[6]

விளக்க உரைகள்

தொகு

தாயபாகத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட விளக்க உரைகள் எழுதப்பட்டுள்ளன. பாண்டுரங் வாமன் மிக முக்கியமான வர்ணனையாளர்களை பின்வருமாறு பட்டியலிடுகிறார்:[7]

  1. ஸ்ரீநாத ஆச்சார்யசூடா
  2. தயாபாக-டிப்பனி (1470-1540) தயாபாகம் பற்றிய மிகப் பழமையான வர்ணனை.
  3. இராமபத்ர நயலங்காரா
  4. தயாபாக விளக்க உரை (1510-1570)
  5. அச்யுதானந்த சக்கரவர்தின்
  6. தயாபாக-சித்தாந்த குமுதசந்திரிகா (1510-1570)
  7. மகேஸ்வர பட்டாச்சாரியார்
  8. தயாபாகா-டீக்கா (1530-1600)
  9. தயாபாக-பிரபோதினி (18 ஆம் நூற்றாண்டின் மத்தியில்) [10]
  10. தயாபாக தத்துவம் ரகுநந்தன் (16 ஆம் நூற்றாண்டு)

காலம்

தொகு

ஜிமுதவாகனர் தாயபாகம் நூலை கிபி 1090 மற்றும் 1130 இடையில் அல்லது கிபி 15ஆம் நூற்றாண்டில் எழுதியதாக கருதப்படுகிறது.

தாயபாகம் நூல் பின்பற்றப்படும் இடங்கள்

தொகு

சொத்துரிமை தொடர்பான விதிகளை விளக்கும் தயாபாகம் நூலை வங்காளம், பீகார், பூர்வாஞ்சல், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சொத்துரிமை தொடர்பான விதிகள் பின்பற்றப்பட்டது.

இந்து வாரிசு சட்டம்

தொகு

இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 (எண். 30)[8]இயற்றப்பட்ட பிறகு தாயபாகம் மற்றும் மிதாச்சாரம் அமைப்புகளில் வாரிசுகள் மற்றும் சொத்துப் பிரிவினை தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்படுத்தியது..[3]

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Kane, P. V., History of Dharmaśāstra, (Poona: Bhandarkar Oriental Research Institute, 1975), Volume I, Part II, 703.
  2. Rocher,Jimutavahana's Dāyabhāga: The Hindu Law of Inheritance in Bengal, (Oxford University Press, 2002), 23.
  3. 3.0 3.1 Kane, P. V., History of Dharmaśāstra, (Poona: Bhandarkar Oriental Research Institute, 1975), Volume I, Part II, 704.
  4. Rocher,Jimutavahana's Dāyabhāga: The Hindu Law of Inheritance in Bengal, (Oxford University Press, 2002), 33.
  5. Rocher,Jimutavahana's Dāyabhāga: The Hindu Law of Inheritance in Bengal, (Oxford University Press, 2002), 35.
  6. 6.0 6.1 Robert Lingat, The Classical Law of India, (New York: Oxford UP, 1973), 172.
  7. Kāne, P. V., History of Dharmaśāstra, (Poona: Bhandarkar Oriental Research Institute, 1975), Volume I, Part II, 711.
  8. Hindu Succession Act, 1956

மேற்கோள்கள்

தொகு
  • Chakravarti, M. (1915). Part 1. Bengal. J.A.S.B. Publ.
  • Lingat, Robert (1973). The Classical law of India. New York: Oxford UP Publ.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயபாகம்&oldid=3772663" இலிருந்து மீள்விக்கப்பட்டது