இந்து குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956
இந்து சிறார்கள் மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956 இல் இந்து சமயச் சட்டங்களின் ஒரு பகுதியாக இந்திய நாடாளுமன்றத்தில் 1956ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.[1] பிற இந்து சமயச் சட்டங்கள் இந்திய இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 மற்றும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956 ஆகும். இச்சட்டம் சிறார்களுக்கு 18 வயது நிரம்பும் வரை சிறார்களையும், அவர்தம் சொத்துக்களையும் மற்றும் உரிமைகளையும் பராமரிக்கும் பாதுகாவலர் குறித்து விளக்குகிறது.
இந்து குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956 | |
---|---|
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
சம்மதிக்கப்பட்ட தேதி | 1955 |
சுருக்கம் | |
இந்து சமயச் சட்டங்கள் கீழ் சிறார் மற்றும் பாதுகாவலர் சட்டம் |
அறிமுகம்
தொகுஇந்தச் சட்டம் 1956 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசால் இந்து குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் சட்டம், இந்திய இந்துக்களின் தனிப்பட்ட சட்டத்தின்படி சிறார்களைப் பற்றிய கொள்கைகளை வரையறுக்கிறது.
முக்கியமான வரையறைகள்
தொகுசிறார் குழந்தைகள் என்பவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர். ஒரு பாதுகாவலர் என்பவர் 18 வயதிற்குட்பட்ட குழந்தையின் சொத்தையும், குழந்தையையும் பராமரிப்பர் ஆவர். பாதுகாவலர்களின் வகைகள் பின்வருமாறு: ஒரு இயற்கை பாதுகாவலர்; தாய் அல்லது தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாவலர் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர்.[2]
செயல்முறை
தொகுஇந்த சட்டம் அனைத்து இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்களுக்கும் பொருந்தும். மேலும் இச்சட்டத்தில் லிங்காயதம், பிரம்ம சமாஜம் மற்றும் ஆரிய சமாஜத்தைப் பின்பற்றுபவர்களும் அடங்குவர். இறுதியாக இசுலாம், கிறிஸ்தவம், பார்சி அல்லது யூதர்கள் அல்லாதவர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் ஆளப்படுவார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஒரு பெற்றோரையாவது கொண்ட சட்டப்பூர்வ மற்றும் முறைகேடான சிறார்களும் இந்தச் சட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்.[2]
இயற்கை பாதுகாவலர்கள்
தொகுசட்டப்பூர்வமான ஆண் மற்றும் திருமணமாகாத பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு தந்தை முதன்மை பாதுகாவலர் ஆவார்.[3] அதே சமயம் தாய் இரண்டாம் நிலை பாதுகாவலர் ஆவார். இருப்பினும் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தாய் தான் சாதாரணமாக பாதுகாவலர். முறைகேடாக பிறந்த குழந்தைகளுக்கு, தாய் முதன்மை பாதுகாவலர். தந்தை இரண்டாம் நிலை பாதுகாவலர். திருமணமான ஒரு மைனர் பெண்ணின் கணவர் அவளுடைய பாதுகாவலராக மாறுகிறார். வளர்ப்பு மகனுக்கு, வளர்ப்புத் தந்தை முதன்மை பாதுகாவலர், பின்னர் வளர்ப்புத் தாய்.[2]
ஒரு பெற்றோர் இந்துவாக இருப்பதை நிறுத்தினால் அல்லது சமயத்தைத் துறந்தால் அல்லது துறவியாகவோ மாறினால், அந்த பெற்றோர் தனது பாதுகாவலர் உரிமைகளை இழப்பார்கள்.[2]
இயற்கை பாதுகாவலர்களின் திறன்கள்
தொகுஇயற்கை பாதுகாவலர்கள் மைனர் குழந்தைகள் மற்றும் அவரது சொத்துக்களைப் பாதுகாக்கும் மற்றும் நன்மை பயக்கும் நடவடிக்கைகளை எடுக்கலாம். இருப்பினும், மைனருக்கான தனிப்பட்ட ஒப்பந்தங்களில் பாதுகாவலர் கையெழுத்திட முடியாது. பாதுகாவலர் சிறுவனின் அசையாச் சொத்தின் எந்தப் பகுதியையும் விற்கவோ, அடமானம் வைக்கவோ அல்லது கொடுக்கவோ, இந்தச் சொத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விடவோ அல்லது குழந்தைக்கு பதினெட்டு வயதுக்குப் பிறகு சொத்தை ஒரு வருடத்திற்கு மேல் குத்தகைக்கு விடவோ முடியாது.[2]
சிறார்களும் சொத்துக்களும்
தொகுஒரு குழந்தையின் சொத்தின் பாதுகாவலராக மற்றொரு குழந்தை செயல்பட முடியாது.[2] கூட்டுக் குடும்பச் சொத்தில் ஏற்கனவே அந்தக் குடும்பத்தில் உள்ள வயது வந்தோரால் கட்டுப்படுத்தப்படும் ஒரு குழந்தைக்கு ஒரு பாதுகாவலரை நியமிக்க முடியாது.[2]
சிறார் நலன்
தொகுபாதுகாவலரை நியமிப்பதில் குழந்தையின் நலன் முதன்மையாகக் கருதப்படும்.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The Hindu Minority and Guardianship Act, 1956
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Hindu Minority and Guardianship Act". Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 8 December 2008.
- ↑ குழந்தைக்கு தந்தையே இயற்கை காப்பாளர்