இந்தோனேசிய வங்கி அருங்காட்சியகம்
இந்தோனேசிய வங்கி அருங்காட்சியகம் (Museum Bank Indonesia) (இந்தோனேசிய அருங்காட்சியகம் வங்கி இந்தோனேசியா ) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஒரு வங்கி அருங்காட்சியகம் ஆகும். இது வங்கி இந்தோனேசியாவால் நிறுவப்பட்டது மற்றும் ஜூலை 21, 2009 ஆம் நாள் அன்று இது திறக்கப்பட்டது. ஜகார்த்தா ஓல்ட் டவுனில் உள்ள ஒரு பாரம்பரிய கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது, இது நெதர்லாந்து இண்டீஸ் குல்டனின் (டி ஜவாஷே வங்கி) முதல் தலைமையகமாக செயல்பட்டு வந்தது, இது டச்சு கிழக்கிந்திய மத்திய வங்கியாகும். இந்தோனேசியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1953 ஆம் ஆண்டில் வங்கி இந்தோனேசியா என தேசியமயமாக்கப்பட்டது. இது வங்கி மண்டிரி அருங்காட்சியகத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
Museum Bank Indonesia | |
இந்தோனேசிய வங்கி அருங்காட்சியக முகப்பு | |
நிறுவப்பட்டது | சூலை 21, 2009 |
---|---|
அமைவிடம் | ஜேஎல். பிண்டி பேசர் உடாரா எண்.3, ஜகார்த்தா பரத் |
ஆள்கூற்று | 6°08′14″S 106°48′46″E / 6.137333°S 106.812816°E |
வகை | பொருளாதாரம் மற்றும் நாணயவியல் |
சேகரிப்பு அளவு | இந்தோனேசியாவின் வங்கி முறை வரலாறு மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் தொகுப்பு |
உரிமையாளர் | இந்தோனேசிய வங்கி |
வரலாறு
தொகுடி ஜவாஷே வங்கி 1828 ஆம் ஆண்டில் டச்சு கிழக்கிந்தியயாவின் சுழற்சி வங்கியாக உருவாக்கப்பட்டது மற்றும் நெதர்லாந்து இண்டீஸ் குல்டென்ஸை, அதாவது நாணயங்கள் வெளியிடுவதன் பொறுப்பை அது மேற்கொண்டு இருந்தது. இந்த கட்டிடம் படேவியாவின் உள் மருத்துவமனையாக இருந்த ஒரு இடத்தில் அமைந்திருந்தது. இது 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. மற்றும் மைய மருத்துவமனை வெல்டெவ்ரெடனுக்கு மாற்றப்பட்டகாரணத்தால் 1780 ஆம் ஆண்டில் இது கவனிக்கப்படாமல இருந்தது. இந்த கட்டிடம் 1801 ஆம் ஆண்டில் வர்த்தக நிறுவனமான மேக் குயிட் டேவிட்சன் & கோ நிறுவனத்திற்கு விற்கப்பட்டது, மேலும் 1831 ஆம் ஆண்டில் டி ஜவாஷே வங்கியால் வாங்கப்பட்டது.[1]
பழைய மருத்துவமனைக் கட்டிடம் 20 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இடிக்கப்பட்டது, மேலும் அந்தக் கட்டடம் இருந்த இடத்தில் எட்வர்ட் கியூப்பர்ஸ் வடிவமைத்த புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கியூப்பர்ஸ் ஒரு புகழ்பெற்ற டச்சு கட்டிடக் கலைஞராக இருந்தார். மேலும் இந்தோனேசிய கூறுகளை தனது வடிவமைப்பில் புகுத்தும் சோதனை முயற்சியில் அவர் ஆர்வமாக செயல்பட்டார். கட்டிடத்தின் முன் முகப்பானது 1909 ஆம் ஆண்டில் புதிய மறுமலர்ச்சி கட்டிடக்கலைப் பாணியில் தெளிவான முழுமையான ஜாவானிய வேலைப்பாடுகளுடன் நிறைவு செய்யப்பட்டது. 1926 ஆம் ஆண்டில் மறுபடியும் புதுப்பித்தல் செய்யப்பட்டு, பின்னர் உட்புற கட்டட அமைப்பு தற்போதைய வடிவமாக மாற்றப்பட்டது.
1942 ஆம் ஆண்டில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போதும், 1945 இல் இந்தோனேசிய சுதந்திரப் பிரகடனத்தின் போதும் இந்தோனேசியாவின் செயல்படும் மத்திய வங்கியாக இந்த வங்கி தொடர்ந்து இருந்து வந்தது. அதன் முதல் ரூபியா நோட் எனப்படுகின்ற ரூபாய் நோட்டு 1944 ஆம் ஆண்டில் ஜப்பானிய மேற்பார்வையில் அதன் அடையாளத்தை தேசியமயமாக்கும் முயற்சியின் அடிப்படையில் அச்சிடப்பட்டது. 1950 ஆம் ஆண்டில் இந்தோனேசியா சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்துநெதர்லாந்து அங்கீகரித்த பின்னர், இந்தோனேசியாவின் மத்திய வங்கியாக டி ஜாவாஷே வங்கியை தக்க வைத்துக் கொள்ள இந்தோனேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இருந்தபோதிலும் இரு அமைப்புகளுக்கும் இடையில் அதிகரித்து வந்த பகைமை காரணமாக 1953 ஆம் ஆண்டில் வங்கி இந்தோனேசியா என்ற வகையில் தேசியமயமாக்கப்பட்டது.[2]
1962 ஆம் ஆண்டில் ஒரு புதிய மத்திய வங்கி தலைமையக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. பழைய கட்டிடம் மோசமடைந்த நிலையில் விட்டுவிடப்பட்டது. இந்த கட்டிடம் 2006 ஆம் ஆண்டில் ஒரு அருங்காட்சியகமாக மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது, மேலும் 21 ஜூலை 2009 அன்று பொறுப்பு ஜனாதிபதியாக இருந்த சுசிலோ பாம்பாங் யுடோயோனோ அவர்களால் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.[3]
அருங்காட்சியகம்
தொகுஇந்த அருங்காட்சியகம் திங்கட்கிழமைகளிலும், பொது விடுமுறைகளிலும் மூடப்பட்டிருக்கும். பார்வையாளருக்கான நுழைவுக் கட்டணம் ஆர்பி. 5,000 ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காலனித்துவத்திற்கு முந்தைய காலத்திய, உலகெங்கிலும் இருந்து கொணரப்பட்ட பழைய நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறிப்புகள்
தொகு- ↑ Dutch colonial Heritage, Binnenhospital
- ↑ "Museum Bank Indonesia". Dinas Komunikasi, Informatika dan Kehumasan Pemprov DKI Jakarta. 2010. Archived from the original on பிப்ரவரி 21, 2015. பார்க்கப்பட்ட நாள் February 21, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Bangunan Kota Tua: De javasche bank". Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2019-11-19.