இனவழிப்புக்கு எதிரான தமிழர்

இனவழிப்புக்கு எதிரான தமிழர் (Tamils Against Genocide) என்பது ஒரு அரச-சார்பற்ற நிறுவனம். இது ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் கொலம்பியா நகரில் இயங்குகின்றது. 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும் ஈழப்போருக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது[1]. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழரை ஈழப்போரின் போது படுகொலை செய்ததாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இரண்டு இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக இவ்வமைப்பு அமெரிக்காவில் வழக்குத் தொடுத்தது. இவர்களது வழக்குரைஞராக அமெரிக்காவின் புகழ் பெற்ற வழக்கறிஞர் புரூஸ் பெயின் அமர்த்தப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-30. பார்க்கப்பட்ட நாள் 2009-06-09.

வெளி இணைப்புகள்

தொகு