இனாயத் அகமது ககோர்வி

இசுலாமிய அறிஞர்

இனாயத் அகமது ககோர்வி (Inayat Ahmad Kakorvi) இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கிய நபராவார். 1813 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஓர் இசுலாமிய அறிஞரான இவர் இசுலாமிய போதனைகளை மேம்படுத்துவதிலும், பிரித்தானிய இந்தியா அரசியல் நிலப்பரப்புக்கு பங்களிப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டிருந்தார்.

இனாயத் அகமது ககோர்வி
Inayat Ahmad Kakorvi
பிறப்பு(1813-10-05)5 அக்டோபர் 1813
பாராபங்கி, அயோத்தி இராச்சியம்
இறப்பு7 ஏப்ரல் 1863(1863-04-07) (அகவை 49)
தேசியம்பிரித்தானிய இராச்சியம்
பணிபுரட்சியாளர், எழுத்தாளர், நீதிபதி
அறியப்படுவதுஇசுலாமிய அறிஞர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

ககோர்வி பிரித்தானிய ஆட்சியில் அமைந்திருந்த பாராபங்கி என்ற நகரத்தில் பிறந்தார், இந்த நகரம் இன்றைய இந்திய நகரமாகும். [1] இசுலாமிய படிப்புகளில் இவர் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். மத அறிவியலில் விரிவான கல்வியைத் தொடர்ந்தார்.[2]

பங்களிப்புகள்

தொகு

ஓர் இசுலாமிய அறிஞராக, முப்தி இனாயத் அகமது ககோர்வி இசுலாமிய போதனைகளைப் புரிந்துகொள்வதற்கும் பரப்புவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார். பல நூல்களை எழுதியுள்ளார் .[3] இவரது புத்தகங்களில் ஒன்று இல்ம் உல் சீகா தார்சு-இ-நிசாமி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.[4][5]

தனது அறிவார்ந்த முயற்சிகளுக்கு மேலதிகமாக, ககோர்வி இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார்.[2]

இறப்பு

தொகு

இனாயத் அகமது ககோர்வி 1863 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதியன்று தனது 49 வயதில், நீரில் மூழ்கியதால் இறந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Zia-e-Taiba, I. T. Department of. "Hazrat Molana Mufti Inayat Ahmed Kakorwi | Scholars | Islamic | Encyclopedia | Book Libraray | Articles | Blogs". scholars.pk.
  2. 2.0 2.1 2.2 "مفتی عنایت احمد کاکوروی :جنگ آزادی ۱۸۵۷ء کے فراموش کردہ مجاہد" [Mufti Inayat Ahmed Kakurvi: The Forgotten Mujahid of the 1857 War of Independence]. Hamariweb.com Articles. 26 October 2016.
  3. "محمد عنایت احمد کی کتابیں | ریختہ" [Muhammad Inayat Ahmad's books-Rekhta]. Rekhta.
  4. "Dars e Nizami Darja Sania (2nd Year) درجہ ثانیہ".
  5. "شہیدِ راہِ حجازحضرت مفتی عنایت احمد کاکوروی" [Martyr of Hijaz's way Hazrat Mufti Inayat Ahmed Kakurvi]. Hamariweb.com Articles. 30 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனாயத்_அகமது_ககோர்வி&oldid=4113952" இலிருந்து மீள்விக்கப்பட்டது