பாராபங்கி
பாராபங்கி (Barabanki), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், அவத் பிரதேசத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் பாராபங்கி நகரம் உள்ளது. 2011-இல்இந்நகரத்தின் மக்கள் தொகை 1,46,831 ஆகும்.
பாராபங்கி | |
---|---|
நகரம் | |
கடிகாரச் சுற்றுப்படி::தேசிய நெடுஞ்சாலை எண் 28, பாரபங்கி நகராட்சி கட்டிடம், கே. டி. சிங் பாபு விளையாட்டரங்கம், ஆனந்த பவன் பள்ளி | |
ஆள்கூறுகள்: 26°55′N 81°12′E / 26.92°N 81.2°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
கோட்டம் | பைசாபாத் |
மாவட்டம் | பாராபங்கி |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பாராபங்கி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 45 km2 (17 sq mi) |
ஏற்றம் | 100 m (300 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,46,831 |
• அடர்த்தி | 331/km2 (860/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 225 001 |
தொலைபேசி குறியீடு எண் | 05248 |
வாகனப் பதிவு | UP-41 |
இணையதளம் | barabanki |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பாராபங்கி நகரத்தின் மக்கள் தொகை 1,46,831 ஆகும். அதில் ஆண்கள் 77,766 மற்றும் பெண்கள் 69,065 ஆக உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.85% ஆகவுள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகையில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.[2][3]
போக்குவரத்து
தொகுநெடுஞ்சாலைகள்
தொகுதேசிய நெடுஞ்சாலை 28 பாராபங்கி மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. இது அயோத்தி, லக்னோ, கோரக்பூர் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.[4]இந்நகரத்தின் வழியாகச் செல்லும் பிற நெடுஞ்சாலைகள்:
- தேசிய நெடுஞ்சாலை எண் 27
- தேசிய நெடுஞ்சாலை எண் 727 H (பாராபங்கி-லக்கீம்பூர்
- தேசிய நெடுஞ்சாலை எண் 927 (பாராபங்கி-நேபாள்கஞ்ச்
- தேசிய நெடுஞ்சாலை எண் 28 (லக்னோ-அயோத்தி-கோரக்பூர்
விரைவுச் சாலைகள்
தொகுலக்னோ முதல் காசீப்பூர் மாவட்டம் வழியாகச் செல்லும் 340 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 6 வழித்தட பூர்வாஞ்சல் விரைவுச் சாலை பாராபங்கி நகரம் வழியாகச் செல்கிறது.
பாராபங்கி இரயில் சந்திப்பு நிலையம்[5]அயோத்தி, லக்னோ போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
வானூர்தி நிலையம்
தொகுபாராபங்கி நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், பாராபங்கி (1989–2010, extremes 1989–2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 29.0 (84.2) |
35.5 (95.9) |
40.5 (104.9) |
44.5 (112.1) |
45.5 (113.9) |
47.0 (116.6) |
44.5 (112.1) |
38.0 (100.4) |
38.4 (101.1) |
38.0 (100.4) |
35.5 (95.9) |
30.5 (86.9) |
47.0 (116.6) |
உயர் சராசரி °C (°F) | 21.8 (71.2) |
26.1 (79) |
31.9 (89.4) |
38.0 (100.4) |
39.0 (102.2) |
37.2 (99) |
33.8 (92.8) |
33.0 (91.4) |
32.8 (91) |
32.8 (91) |
29.2 (84.6) |
24.4 (75.9) |
31.7 (89.1) |
தாழ் சராசரி °C (°F) | 8.0 (46.4) |
10.9 (51.6) |
15.1 (59.2) |
20.1 (68.2) |
24.2 (75.6) |
26.0 (78.8) |
26.2 (79.2) |
25.9 (78.6) |
24.7 (76.5) |
20.0 (68) |
13.8 (56.8) |
9.2 (48.6) |
18.7 (65.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 2.0 (35.6) |
3.0 (37.4) |
7.5 (45.5) |
8.7 (47.7) |
15.7 (60.3) |
20.3 (68.5) |
22.2 (72) |
20.6 (69.1) |
17.5 (63.5) |
13.0 (55.4) |
6.3 (43.3) |
2.0 (35.6) |
2.0 (35.6) |
மழைப்பொழிவுmm (inches) | 16.0 (0.63) |
15.9 (0.626) |
7.7 (0.303) |
6.6 (0.26) |
38.8 (1.528) |
122.2 (4.811) |
236.3 (9.303) |
191.4 (7.535) |
170.4 (6.709) |
36.2 (1.425) |
5.9 (0.232) |
9.1 (0.358) |
856.5 (33.72) |
% ஈரப்பதம் | 62 | 52 | 41 | 33 | 41 | 55 | 74 | 78 | 77 | 66 | 61 | 63 | 59 |
சராசரி மழை நாட்கள் | 1.2 | 1.6 | 0.9 | 0.6 | 2.4 | 5.5 | 10.9 | 9.5 | 7.0 | 1.5 | 0.4 | 0.6 | 42.0 |
ஆதாரம்: India Meteorological Department[6] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. Archived (PDF) from the original on 13 November 2011. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
- ↑ Ashok, Akash Deep (6 December 2013). "Babri Masjid anniversary: A few more things that were demolished that day". India Today (New Delhi) இம் மூலத்தில் இருந்து 6 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131206115820/http://indiatoday.intoday.in/story/babri-anniversary-a-few-more-things-demolished-that-day/1/328114.html.
- ↑ "UPSRTC". Archived from the original on 4 January 2010. பார்க்கப்பட்ட நாள் 27 October 2009. UPSRTC History
- ↑ Barabanki Junction railway station
- ↑ "Station: Barabanki Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 95–96. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.