இனா சிலானி
இனா சிலானி ( Hina Jilaniஉருது: حنا جیلانی . பிறப்பு 1953), பாக்கித்தானின் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் மற்றும் பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள லாகூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுபாக்கித்தான் இராணுவச் சட்டத்தின் கீழ் இருந்தபோது, சிலானி 1979 இல் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார்.
தொழில் வாழ்க்கை
தொகுமுக்கியமான மனித உரிமை விசாரணைகளில் சிலானி தனது நிபுணத்துவத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். பிப்ரவரி 1980 இல் தனது சகோதரி அஸ்மா ஜெஹாங்கீருடன், பாக்கித்தானின் முதல் அனைத்து பெண் சட்ட உதவி நடைமுறையான AGHS சட்ட உதவி மையத்தை (ALAC) லாகூரில் நிறுவினார். ஆரம்பத்தில் இந்த நடவடிக்கைகள் பெண்களுக்கு சட்ட உதவி வழங்குவதாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தன, ஆனால் படிப்படியாக இந்த அமைப்பு சட்ட விழிப்புணர்வு, கல்வி, சுரண்டலில் இருந்து பாதுகாப்பு, சட்ட ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் சட்ட உதவிகளை வழங்குதல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டன. இவர் பாக்கித்தானின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் செயல் மன்றம் (WAF) (1980 இல் நிறுவப்பட்ட அழுத்தக் குழு, பாகுபாடு சட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்) மற்றும் 1986 இல் பாக்கித்தானின் முதல் சட்ட உதவி மையத்தையும் நிறுவினார். [1] சட்டரீதியான உதவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், 1991 ல் தஸ்தக் என்றழைக்கப்படும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒரு தங்குமிடம் அமைக்கவும் இவர் உதவினார் [2] தங்குமிடத்தை நிர்வகிப்பதைத் தவிர, மனித உரிமைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தஸ்தாக் பட்டறைகளையும் ஏற்பாடு செய்கிறார். [3]
ஒரு வழக்குரைஞர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிரான சமூக ஆர்வலர் மற்றும் கடந்த மூன்று தசாப்தங்களாக பாக்கித்தானில் அமைதி, மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான இயக்கத்தில் தீவிரமாக உள்ளார், இவர் மனித உரிமைகள் வழக்கில் நிபுணத்துவம் பெற்றவர், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் உரிமைகளில் அக்கறை கொண்டுள்ளார். இவர் பாக்கித்தானில் மனித உரிமைகள் தரத்தை நிர்ணயிப்பதில் முக்கிய அம்சங்களாக மாறிய பல வழக்குகளை நடத்தியுள்ளார். [4] குழந்தைகளின் உரிமைகளுக்காக, குறிப்பாக அபாயகரமான வேலைகளில் ஈடுபடும் குழந்தை தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக இவர் நடத்திய போராட்டம், 1991 ல் குழந்தைகளின் வேலைவாய்ப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டத்தை வெளியிட வழிவகுத்தது.
மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் பேச சிலானி அடிக்கடி அழைக்கப்படுகிறார். 17 செப்டம்பர் 2009 அன்று, நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தில், 2009 ஹால் வூட்டன் சொற்பொழிவை வழங்கினார். [5] நவம்பர் 25 ஆம் தேதி, இவர் மெக்கில் பல்கலைக்கழகத்திற்கு விருந்துரையாளராக அழைக்கப்பட்டார்.
சிலானி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சங்கம், கார்ட்டர் மையம் மற்றும் பெண்களுக்கான ஐ.நா. அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுகிறார். [6] 2019 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சட்ட கட்டமைப்புகளை உருவாக்க இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் அமைத்த ஒரு புதிய நிபுணர் குழுவிற்கு இவரை வழக்குரைஞராக நியமித்தது. [7]
மற்ற நடவடிக்கைகள்
தொகுஐக்கிய நாடுகள் சபையில் பங்கு
தொகு2000 முதல் 2008 வரை, சிலானி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் பற்றிய பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியாக இருந்தார் . [8] அந்த காலகட்டத்தில், இவர் 2006 இல் சூடானின் டார்பூர் மீதான சர்வதேச விசாரணை ஆணையத்திலும் உறிப்பினராக நியமிக்கப்பட்டார்.
சான்றுகள்
தொகு- ↑ Interview with Hina Jilani பரணிடப்பட்டது 19 சூலை 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Documentary: Against my will". Archived from the original on 27 April 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
- ↑ Dastak holds workshop on care, treatment of women in distress. Daily Times.
- ↑ Profile Hina Jilani பரணிடப்பட்டது 10 அக்டோபர் 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Hina Jilani to deliver the Annual Hal Wootten Lecture at UNSW on 17 September 2009 பரணிடப்பட்டது 14 அக்டோபர் 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Sawnet: Who's who – Hina Jilani பரணிடப்பட்டது 10 அக்டோபர் 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Indian lawyer Karuna Nundy on UK panel for new media framework". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-07-16. பார்க்கப்பட்ட நாள் 2020-02-05.
- ↑ "Meet the featured human rights defenders – Hina Jilani", Carter Center, February 2009.