இனியநந்தவனம் (சிற்றிதழ்)

தமிழகத்திலிருந்து வெளியாகும் தமிழ்ச் சிற்றிதழ்களில் இனிய நந்தவனம் மாத இதழும் ஒன்று. திருச்சியிலிருந்து 1997 ஆம் ஆண்டு, சனவரி மாதம் முதல் வெளிவரும் இது ஒரு கலை, இலக்கிய மாத இதழாகும். இதன் ஆசிரியராக த. சந்திரசேகரன் என்பவர் இருந்து வருகிறார்.

இனிய நந்தவனம்
இதழின் அட்டை
வெளியீட்டாளர்
இதழாசிரியர் த. சந்திரசேகரன்
வகை தமிழ்ச் சிற்றிதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ் ஜனவரி, 1997
நிறுவனம்
நகரம் திருச்சிராப்பள்ளி
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி இனிய நந்தவனம் மாத இதழ்
எண்.18, பெரியசெட்டித் தெரு,
உறையூர்,
திருச்சிராப்பள்ளி - 620 003,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம்

சிறப்பு

தொகு

தமிழகச் சிற்றிதழ்கள் வரிசையில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் இனிய நந்தவனம் இதழ் தமிழகத்தில் மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த தமிழர்களால் வேறு சில நாடுகளிலும் வாசிக்கப்பட்டு வருகின்றது. எனவே இந்த இதழின் ஆலோசகர்களாக பிரான்சில் வண்ணை தெய்வம், இலங்கையில் அந்தனி ஜீவா, அவுஸ்திரேலியாவில் ஸ்ரீ கந்தராசா, மலேசியாவில் க.கண்ணன், சிங்கப்பூரில் சிங்கைத் தமிழ்ச்செல்வம், டென்மார்க்கில் ‘வேலணையூர் பொன்னன்ணா’, சீசலில் 'சிவசுப்பிரமணியன், ஜெர்மனியில் தம்பி புவனேந்திரன், அமெரிக்காவில் புலவர் நாகப்பன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உள்ளடக்கம்

தொகு

இலக்கியக் கட்டுரைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், புதுஎழுத்தாளர் அறிமுகம், துணுக்குகள், நேர்காணல்கள், நூல்நயம், விழாநிகழ்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

சிறப்பிதழ்கள்

தொகு

இனிய நந்தவனம் இதழின் மாத வெளியீடுகளுக்கிடையில் அவ்வப்போது சில சிறப்பிதழ்களும் வெளியிட்டு வருகின்றது. இந்த சிறப்பிதழ்கள் 80 பக்கங்களுக்கு மேல் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு சிறப்பிதழுக்கும் துறை சார்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து இனிய நந்தவனத்தின் பலவர்ண முகப்பட்டையில் பிரசுரித்து சிறப்பு செய்கின்றது. மேலும் தமிழ் இலக்கியவாதிகள், தமிழ் அறிஞர்கள், சாதனையாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள் ஆகியோரின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனியநந்தவனம்_(சிற்றிதழ்)&oldid=2917264" இலிருந்து மீள்விக்கப்பட்டது