இன்ஜில் ( அரபு மொழி: إنجيل‎, romanized: ʾInjīl)இயேசுவின் (ஈசா) நற்செய்தியின் அரபுப் மொழி பெயர் ஆகும். இந்த இன்ஜில் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட நான்கு இஸ்லாமிய புனித நூல்களில் ஒன்றாக குர்ஆனால் விவரிக்கப்படுகிறது, மற்றவை சபூர் (திருப்பாடல்கள்), தவ்ராத் ( தோரா ) மற்றும் குர்ஆன் ஆகும். இன்ஜில் என்ற வார்த்தை குர்ஆன், ஹதீஸ் மற்றும் முஸ்லீம்களின் ஆரம்பகால ஆவணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, இது ஈஸா நபிக்கு அல்லாஹ்வால் குடுக்கப்பட்டா நூல் என்று முஸ்லீம்களில் நம்பப்படுகிறது.

இஸ்லாமிய நூல்களில் காணப்படும் இன்ஜில் (إنجيل) என்ற அரபு சொல், இது சிரியாக் அராமிக் சொலனா அவங்கலீயோன் awongaleeyoon (ܐܘܢܓܠܝܘܢ) பேஷிட்டா என்ற (விவிலியத்தின் சிரியாக் மொழிபெயர்ப்பு) இல் காணப்படுகிறது,[1]

அடுத்தது கிரேக்க வார்த்தையான euangelion (Εὐαγγέλιον) வந்தது.[2] கிரேக்க புதிய ஏற்பாட்டில், அதன் பொருள் "நல்ல செய்தி" (கிரேக்க வார்த்தையான"Εὐαγγέλιον", பண்டைய ஆங்கிலத்தில் "gōdspel", என்று மாற்றியாத்து

நற்செய்தி பற்றி கூறும் திருக்குர்ஆன்

தொகு

இன்ஜில் (நற்செய்தி) பற்றி கூறும் திருக்குர்ஆன் வசனங்கள்.

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

— திருகுர்ஆன் 5:46
  1. Peshitta (Mark 1:1) - "Literal Aramaic idiomatic (Lit. Ar. id.) name: "Awon-galee-yoon," or He Reveals."
  2. Muhammad in world scriptures Abdul Haque Vidyarthi - 1997 "It is derived from the Greek term evangelion which means gospel, good news and happy tidings."
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்ஜில்&oldid=3725931" இலிருந்து மீள்விக்கப்பட்டது