இன்பகவி (சேவியர் ஹென்ரிக் லீம்) என்பவர் ஒரு தமிழ்ப் புலவரும் நாடகவியலாளரும் ஆவார்.

இளமைக் காலம்

தொகு

இன்பகவி, சேவியர் ஹென்ரிக் லீம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறையில் பிறந்தார்.[1] இவருடைய பெற்றோர்கள் பரதவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.[1] மிகவும் இளைய வயதிலேயே இன்பகவி, தூத்துக்குடியில் பரதர் இனத்தின் தலைவராக விளங்கிய டான் கேப்ரியல் வாஸ் கோமஸ்ஸின் ஆதரவு பெற்று, எட்டயபுர அரசரை அணுகினார்.[1] ஆரம்பத்தில், அரசர் இவரை விரும்பாததைப் போலத் தெரிந்தாலும், அரசரைத் தன்னுடைய எழுத்துகளால் கவர்ந்தார், அரசரும் பரிசுகளை அள்ளி வழங்கினார்.[1]

சிறிது காலத்திற்குப் பிறகு, தஞ்சாவூரில் உள்ள இரண்டாம் சரபோஜியின் அரண்மனைக்கு அனுப்பப்பட்டார்.[2] தஞ்சாவூரில், இவர் அமைச்சர் தாதூஜியை கவர்ந்தார்.[2] இவர் தூத்துக்குடியில் குறைந்தகாலமே தங்குவதற்கு இவருடைய உடல்நலக் குறைவும் ஒரு காரணமாக விளங்கியது.[2]

தன்னுடைய பிந்தைய நாட்களில், இன்பகவி யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கும் சுற்றுலா சென்றார்.[2] இவருடைய குடிப்பழக்கத்தால், உடல்நலக்குறைவும் அவருடைய புகழும் குறையத் தொடங்கியது.[2] இவர் யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் முன்பு, பிலிப் ரோட்ரிகோ முத்துக்கிருஷ்ணாவைக் குறித்து குறவஞ்சி என்னும் நாடகத்தினை உருவாக்கினார். .[3]

இன்பகவி 1835-ம் ஆண்டு காலமானார்.

படைப்புகள்

தொகு

இன்பகவி பல்வேறு நாடகங்களையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவர் கிறித்தவம் மட்டுமின்றி சைவம் மற்றும் வைணவத் துதிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 The Tamil Plutarch, பக் 26
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 The Tamil Plutarch, பக் 27
  3. The Tamil Plutarch, Pg 28

மேற்கோள்கள்

தொகு
  • Chitty, Simon Casie (1859). The Tamil Plutarch, containing a summary account of the lives of poets and poetesses of Southern India and Ceylon. Jaffna: Ripley & Strong.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்பகவி&oldid=3630251" இலிருந்து மீள்விக்கப்பட்டது