இப்ராகிம் முஸ்தக் அப்துல் ரசாக் நதிம் மேமன்
இப்ராகிம் முஸ்தக் அப்துல் ரசாக் நதிம் மேமன் அல்லது டைகர் மேமன், (Ibrahim Mushtaq Abdul Razak Nadim Memon), (பிறப்பு: 24 நவம்பர் 1960) 1993 மும்பை வெடி குண்டு வழக்கில் இந்திய அரசின் சிபிஐ மற்றும் இண்டர் போலாலும் தேடப்படும் குற்றவாளி. தாவூத் இப்ராகிமின் "டி-கம்பெனி" அமைப்பை சேர்ந்த போதை மருந்து, ஆயுதக் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர் என குற்றச்சாட்டுள்ளது.[1] இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். யாக்கூபு மேமனின் உடன் பிறந்தவர்.
இப்ராகிம் முஸ்தக் அப்துல் ரசாக் நதிம் மேமன் | |
---|---|
பிறப்பு | 24 நவம்பர் 1960 மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா |
தொழில் | தீவிரவாதி மற்றும் போதை மருந்து & ஆயுத கடத்தல் குழு தலைவன் |
துணைவர் | ஷாபனம் |
பிள்ளைகள் | 3 |
1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில்
தொகு12 செப்டம்பர் 2006இல் தடா (TADA) சிறப்பு நீதிமன்றம், 1993 மும்பை வெடி குண்டு வழக்கில், தாவூத் இப்ராகிமுடன் முக்கிய குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட, டைகர் மேமன் தற்போது தாவூத் இப்ராகிமுடன் பாகிஸ்தானில் இருப்பதாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.[2]
டைகர் மேமனின் உடன்பிறப்பு யாக்கூபு மேமன் மும்பை வெடி குண்டு வழக்கில் தூக்கிலிடப்பட்டார்.