இமயமலை செரோவ்

இமயமலை செரோ
இந்தியாவின் சிக்கிம் பங்கோலகா வனவிலங்கு சரணாலயத்தில் ஆண் இமயமலை செரோ
CITES Appendix I (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேப்பரிகார்னிசு

உரோபிகுயட் & அசானின், 2005
இனம்:
கே. சுமத்திரென்சிசு தார்
இருசொற் பெயரீடு
கேப்பரிகார்னிசு சுமத்திரென்சிசு
முச்சொற் பெயரீடு
கேப்பரிகார்னிசு சுமத்திரென்சிசு தார்
(கோட்ஜ்சன், 1831)

இமயமலை செரோவ் (Himalayan serow-கேப்பரிகார்னிசு சுமத்திரென்சிசு தார்) என்றும் அழைக்கப்படும் வரையாடு[a] (/θɑːr/ THAR, /tɑːr/ TAR)[2][3], முதன்மை நிலத்தில் காணப்படும் செரோவின் துணையினமாகும்.[4] இமயமலை இதன் தாயகமாகும்.[1] இது முன்னர் கேப்பரிகார்னிசு தாரினமாகக் கருதப்பட்டது. இது இந்திய மாநிலம் மிசோரத்தின் மாநில விலங்கு ஆகும்.

வகைப்பாட்டியல்

தொகு

1831ஆம் ஆண்டில், பிரையன் காக்டன் கோட்சன் முதன்முதலில் சத்லஜ் மற்றும் டீஸ்டா ஆறுகளுக்கு இடையிலான மலைப்பகுதிகளில் "புபலின் மான்" என்ற பெயரில் குறுகிய கொம்புகளைக் கொண்ட ஆடு போன்ற விலங்கை விவரித்தார்.[5] "புபலின்" என்ற பெயர் அதிகமாகப் பயன்பாட்டில் இருந்ததால், சில மாதங்களுக்குப் பிறகு இதற்கு ஆன்டிலோப் தார் என்ற இருசொற் பெயரினைக் கொடுத்தார்.[6] 1838ஆம் ஆண்டில் வில்லியம் ஓகில்பி கேப்பரிகார்னிசு பேரினத்தை விவரித்தபோது, இமயமலை செரோவை இந்தப் பேரினத்தின் மாதிரி இனமாகத் தீர்மானித்தார்.[7]

விளக்கம்

தொகு

இமயமலை செரோ பெரும்பாலும் கருப்பு நிறத்தில் காணப்படும். பக்கவாட்டு, பின்புறம் மற்றும் மேல் கால்கள் துருப்பிடித்த செந்நிறத்தில் உள்ளன. இதன் கீழ்க் கால்கள் வெண்மை நிறத்தில் உள்ளன.

வாழிடமும் பரவலும்

தொகு

இமயமலை செரோ 300 மீ (980 ) உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பாங்கான காடுகளில் வாழ்கிறது. ஆனால் குளிர்காலத்தில் 100 மீ (330 ) வரை இறங்குகிறது.[8] இது இமயமலையில் 2,500 முதல்3,500 மீ (ID1) உயரமான பகுதியினை விரும்புகிறது.[9]

பாதுகாப்பு

தொகு

கேப்பரிகார்னிசு சுமத்திரென்சிசு காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிந்து வரும் உயிரினங்களில் பன்னாட்டு வர்த்தகம் பற்றிய மாநாட்டு பின் இணைப்பு I-இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

குறிப்புகள்

தொகு
  1. This name has also by confusion been applied to the Himalayan tahr.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Phan, T.D.; Nijhawan, S.; Li, S.; Xiao, L. (2020). "Capricornis sumatraensis". IUCN Red List of Threatened Species 2020: e.T162916735A162916910. https://www.iucnredlist.org/species/162916735/162916910. பார்த்த நாள்: 16 January 2022. 
  2. "thar". The Chambers Dictionary (9th ed.). Chambers. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-550-10105-5.
  3. "thar". Collins English Dictionary (13th ed.). HarperCollins. 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-008-28437-4.
  4. Mori, E.; Nerva, L.; Lovari, S. (2019). "Reclassification of the serows and gorals: the end of a neverending story?". Mammal Review 49 (3): 256–262. doi:10.1111/mam.12154. 
  5. Hodgson, B.H. (1831). "On the Bubaline Antelope. (Nobis.)". Gleanings in Science 3 (April): 122–123. https://archive.org/details/proceedingsofzoo01zool/page/12/mode/2up. 
  6. Hodgson, B.H. (1831). "Contributions in Natural History". Gleanings in Science 3 (October): 320–324. https://archive.org/details/gleaningsscienc3/page/324/mode/2up. 
  7. Ogilby, W. (1836). "On the generic characters of Ruminants". Proceedings of the Zoological Society of London 8: 131–140. https://archive.org/details/proceedingsofgen36zool/page/n151/mode/2up. 
  8. Choudhury, A. (2003). "Status of serow (Capricornis sumatraensis) in Assam". Tigerpaper 30 (2): 1–2. https://www.fao.org/3/ak877e/ak877e.pdf. 
  9. Aryal, A. (2009). "Habitat ecology of Himalayan serow (Capricornis sumatraensis ssp. thar) in Annapurna Conservation Area of Nepal". Tigerpaper 34 (4): 12–20. https://www.fao.org/3/ak851e/ak851e00.pdf#page=14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_செரோவ்&oldid=3964849" இலிருந்து மீள்விக்கப்பட்டது