இமாச்சல் மாநில அருங்காட்சியகம்

இந்தியப் பண்பாட்டு அருங்காட்சியகம்

இமாச்சல் மாநில அருங்காட்சியகம் (Himachal State Museum) இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரத்தில் அமைந்துள்ளது. இதுவொரு பண்பாட்டு வகை அருங்காட்சியகம் ஆகும்.

இமாச்சல் மாநில அருங்காட்சியகம்
Himachal State Museum
Map
நிறுவப்பட்டது26 சனவரி 1974 (1974-01-26)
அமைவிடம்சௌரா மைதான சாலை, சௌரா மைதானம், சிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
வகைபண்பாட்டு மையம்
வலைத்தளம்www.himachalstatemuseum.in

இமாச்சல் மாநில அருங்காட்சியகம் 1974 ஆம் ஆண்டில் இன்வெரார்ம் மலையின் உச்சியில் உள்ள ஓர் இல்லத்தில் நிறுவப்பட்டது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் லார்டு வில்லியம் பெரெசுபோர்டின் கோடைகால தங்குமிடமாக இந்த இல்லம் கட்டப்பட்டது. சிம்லாவில் இருந்த பீட்டராப் எனப்படும் சிறிய அரசப்பிரதிநிதி இல்லத்தில் விருந்தினர்களுக்கு இடப்பற்றாக்குறை நிகழும்போதெல்லாம் அவர்களுக்காக இந்த அருங்காட்சியகம் அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டது.[1][2] தொடர்ந்து எட்வின் என்றி எய்டர் கோலன் மற்றும் எட்வர்ட் ஃபிட்சுசெரால்டு காலத்திலும் அருங்காட்சியகம் இவ்வாறே பயன்படுத்தப்பட்டது.[3][4] 1860 ஆம் ஆண்டுகளில் ஒரு பெரிய விக்டோரியன் இல்லமாக இது கட்டப்பட்டது. இமாச்சலப் பிரதேச அரசு அருங்காட்சியகத்தை வைப்பதற்காக இல்லத்தைக் கையகப்படுத்தி 1973 ஆம் ஆண்டில் புதுப்பித்தது.[5]

மர வேலைப்பாடுகள், வெண்கலங்கள், தொல்பொருள் கலைப்பொருட்கள், நாணயங்கள், நகைகள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள் உட்பட பல சிறு உருவங்கள், தபால் தலைகள் மற்றும் ஆயுதங்கள் போன்றவை அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ளன.[6][7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. Mrs. Stuart Menzies (1917). Lord William Beresford, V. C.: Some Memories of a Famous Sportsman, Soldier and Wit. New York: Brentano's. pp. 142, 143. இணையக் கணினி நூலக மைய எண் 421821.
  2. Pat Barr; Ray Desmond (1978). Simla: A Hill Station in British India. London: Scolar. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780859676595.
  3. Theodore Morison; George T. Hutchinson (1911). The Life of Sir Edward FitzGerald Law, K.C.S.I., K.C.M.G. Edinburgh / London: Blackwood. p. 257. இணையக் கணினி நூலக மைய எண் 5341510.
  4. Edward John Buck (1904). Simla, Past and Present. Calcutta: Thacker, Spink. p. 73. இணையக் கணினி நூலக மைய எண் 977411741.
  5. Vishwa Chander Ohri (1975). Arts of Himachal. State Museum, Department of Languages & Cultural Affairs, Himachal Pradesh. p. viii. இணையக் கணினி நூலக மைய எண் 603393390.
  6. RBS Visitors Guide India: Himachal Pradesh. Jaipur: Data and Expo India. 2015. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380844183.
  7. Weekend Breaks from Delhi (2nd ed.). New Delhi: Outlook. 2004. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190172448.
  8. "Collection". Himachal State Museum. பார்க்கப்பட்ட நாள் 29 August 2022.

புற இணைப்புகள்

தொகு