இமாம் தின் குசராத்தி
இமாம் தின் குசராத்தி (Imam Din Gujrati) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த உருது மற்றும் பஞ்சாபி மொழியின் நகைச்சுவை கவிஞர் ஆவார்.[1] 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.
இமாம் தின் குசராத்தி பிரித்தானிய இந்தியாவின் (இப்போது பாக்கித்தான்) குசராத்தில் பிறந்தார். இவரது உண்மையான பெயர் இமாம்-உத்-தின். இமாமின் கல்வி ஆரம்பக் கல்வியோடு முடிந்தது. குசராத்து மாநிலத்தின் வருவாய்த் துறையில் பணிபுரிந்து வந்தார்.[2]
உருது மற்றும் பஞ்சாபி கவிதைகளில் இமாம் தின் கவிதைகளுக்கு தனி இடம் உண்டு. இமாம் முதலில் தொடர்ந்து பஞ்சாபி கவிதைகளை எழுதினார். ஆனால் பின்னர் அவரது நெருங்கிய நண்பரும் கவிஞரும் பத்திரிகையாளருமான இரகாத்து மாலிக்கின் மூத்த சகோதரர் மாலிக் அப்துல் ரகுமான் காதிமின் வற்புறுத்தலின் பேரில் உருதுவில் கவிதை வாசிக்கத் தொடங்கினார்.
மிகவும் பிரபலமான உருது மற்றும் பஞ்சாபி மொழியைக் கலந்து எழுதும் ஒரு பாணியைக் கண்டுபிடித்தார். இமாம் தின் குசராத்தி பாணியை ஏற்றுக்கொண்டதன் மூலம் நிறைய புகழ் பெற்றார்.
ஆசிரியர்
தொகுஇவரது தொகுப்புகள் பேங் டால், பேங் ரகீல் மற்றும் சுர் இசுராஃபில் என்ற பெயர்களில் வெளியிடப்பட்டன. கவிதையின் முதன்மை என்ற ஒரு புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார். [3] [4]
இறப்பு
தொகுஇமாம் தின் குசராத்தி பிப்ரவரி 22, 1954 அன்று பாக்கித்தானின் குசராத்தில் இறந்தார்.