குஜராத், பாகிஸ்தான்
குஜராத் (Gujrat) (பஞ்சாபி, உருது: گُجرات), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜராத் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.[3] இதனருகில் சியால்கோட் மற்றும் குஜ்ரன்வாலா நகரங்கள் உள்ளன.[4][5]
குஜராத் گُجرات | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 32°34′26″N 74°4′44″E / 32.57389°N 74.07889°E | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
மாவட்டம் | குஜராத் மாவட்டம் |
மக்கள்தொகை (2017)[1] | |
• மொத்தம் | 3,90,533 |
நேர வலயம் | பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5) |
தொலைபேசி குறியிடு | 053 |
ஒன்றியக் குழுக்கள் | 18[2] |
வரலாறுதொகு
தில்லி சுல்தான் சேர் சா சூரியின் ஆட்சியின் போது குஜராத் நகரம் நிறுவப்பட்டது. [6] முன்னர் இப்பகுதியை மங்கோலியர்கள் 1303-இல் அழித்தனர்.[7]முகலாயப் பேரரசர் அக்பர் ஆட்சிக்காலத்தில், 1580-இல் குஜராத் நகரத்தை விரிவாக்கி ஒரு கோட்டை கட்டப்பட்டது. [8]மேலும் 1596-97களில் குஜ்ஜர் இன மக்களை கட்டாயப்படுத்தி குஜராத் நகரத்தில் தங்க வைக்கப்பட்டனர்.[6][9] குஜ்ஜர் இன மக்களின் பெயரில் இந்நகரம் குஜராத் என அழைக்கப்பட்டது. [6]
அப்சரித்து வம்ச பேரரசர் நாதிர் ஷா முகலாயப் பேரரசை முற்றுகையிட்ட போது, குஜராத் நகரம் அழிக்கப்பட்டது.[6] இராவல்பிண்டி அருகே வாழ்ந்த கக்கர் இன மக்களால் 1741-இல் குஜராத் நகரம் கைப்பற்றப்பட்டது.[7]1700 ஆண்டின் நடுவில் ஆப்கான் மன்னர் அகமது ஷா துரானியால் குஜராத் நகரம் அழிக்கப்பட்டது.[6] 1797-இல் ஆப்கானியர்களை வென்று சீக்கியப் பேரரசால் குஜராத் நகரம் கைப்பற்றப்பட்டது.[10] இறுதியாக இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போரின் முடிவில் 1849-இல் குஜராத் நகரம் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் சென்றது. 1867-இல் குஜராத் நகர நிர்வாகத்தை மேற்கொள்ள நகராட்சிமன்றம் நிறுவப்பட்டது.[8]
புவியியல்தொகு
ஜீலம் ஆறு மற்றும் செனாப் ஆற்றின் கரையில் அமைந்த குஜராத் நகரத்தின் வடகிழக்கில் ஜம்மு காஷ்மீர், வடமேற்கில் ஜீலம் ஆறும், கிழக்கிலும், தென்கிழக்கிலும் செனாப் ஆறு குஜ்ரன்வாலா மற்றும் சியால்கோட் நகரங்களைப் பிரிக்கிறது. இதன் மேற்கில் மண்டி பகாவுத்தீன் மாவட்டம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்தொகு
2017 பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குஜராத் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 3,90,533 ஆகும்.
தட்ப வெப்பம்தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், குஜராத் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 19.2 (66.6) |
22.1 (71.8) |
27.4 (81.3) |
33.7 (92.7) |
39.1 (102.4) |
41.1 (106) |
36.3 (97.3) |
34.6 (94.3) |
35.1 (95.2) |
33.1 (91.6) |
27.2 (81) |
21.2 (70.2) |
30.84 (87.52) |
தினசரி சராசரி °C (°F) | 12.4 (54.3) |
15.1 (59.2) |
20.3 (68.5) |
26 (79) |
31.1 (88) |
34 (93) |
31.4 (88.5) |
30.2 (86.4) |
29.4 (84.9) |
25.3 (77.5) |
18.7 (65.7) |
13.5 (56.3) |
23.95 (75.11) |
தாழ் சராசரி °C (°F) | 5.6 (42.1) |
8.1 (46.6) |
13.3 (55.9) |
18.4 (65.1) |
23.2 (73.8) |
26.9 (80.4) |
26.6 (79.9) |
25.8 (78.4) |
23.8 (74.8) |
17.6 (63.7) |
10.2 (50.4) |
5.8 (42.4) |
17.11 (62.8) |
பொழிவு mm (inches) | 38 (1.5) |
37 (1.46) |
36 (1.42) |
21 (0.83) |
19 (0.75) |
47 (1.85) |
182 (7.17) |
205 (8.07) |
83 (3.27) |
12 (0.47) |
5 (0.2) |
18 (0.71) |
703 (27.68) |
ஆதாரம்: https://en.climate-data.org/location/964104/ |
மேற்கோள்கள்தொகு
- ↑ "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. 2017-08-29 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;nrb.gov.pk
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Google maps. "Location of Gujrat". Google maps. 23 September 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Mehmood, Mirza, Faisal; Ali, Jaffri, Atif; Saim, Hashmi, Muhammad (2014-04-21) (in en). An assessment of industrial employment skill gaps among university graduates: In the Gujrat-Sialkot-Gujranwala industrial cluster, Pakistan. Intl Food Policy Res Inst. பக். 2. https://books.google.com/books?id=P5pvAwAAQBAJ&pg=PA2&lpg=PA2&dq=sialkot+gujranwala+gujrat+golden+triangle&source=bl&ots=G3CAFE-Jxj&sig=D24M5cRh6i_UvdwNdWjFFH-GKzI&hl=en&sa=X&ved=0ahUKEwj0v4TAkITZAhViHGMKHeFABDkQ6AEIVDAH#v=onepage&q=sialkot%20gujranwala%20gujrat%20golden%20triangle&f=false.
- ↑ Naz, Neelum. "Historical Perspective of Urban Development of Gujranwala". Dept. of Architecture, UET, Lahore. 22 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 "Imperial Gazetteer2 of India, Volume 12, page 365 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library". dsal.uchicago.edu. 2018-02-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 7.0 7.1 (in en) Americanized Encyclopaedia Britannica: Rev. and Amended A Dictionary of Arts, Sciences and Literature, to which is Added Biographies of Living Subjects. 96 Colored Maps and Numerous Illustrations. Belford-Clarke Company. 1890. https://books.google.com/books?id=vk7OAAAAMAAJ&pg=PA2966&lpg=PA2966&dq=Gujrat+mughal+-gujarat+punjab&source=bl&ots=I8tJml8UBt&sig=nLG2-6BxhH53vnb5L9gNguSQ-aM&hl=en&sa=X&ved=0ahUKEwjUxpaz_IbZAhVPKKwKHZDKAYQ4ChDoAQgwMAM#v=onepage&q=Gujrat%20mughal%20-gujarat%20punjab&f=false.
- ↑ 8.0 8.1 "Gujrat | Pakistan" (in en). Encyclopedia Britannica. https://www.britannica.com/place/Gujrat.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;:2
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Jaques, Tony (2007) (in en). Dictionary of Battles and Sieges: F-O. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780313335389. https://books.google.com/books?id=Dh6jydKXikoC&pg=PA420&lpg=PA420&dq=Gujrat+mughal+-gujarat+punjab&source=bl&ots=nKAftNt0P9&sig=3XYwmHffZCABQyFaL7-7A3A8hzo&hl=en&sa=X&ved=0ahUKEwjUxpaz_IbZAhVPKKwKHZDKAYQ4ChDoAQgoMAA#v=onepage&q=Gujrat%20mughal%20-gujarat%20punjab&f=false.