இமிக் பெமோஸ்
பெமோசு (FAMOS) fast analysis and monitoring of signals எனும் ஆங்கிலத் தொடரின் முதலெழுத்துக் குறுக்கம்) என்பது படிமப் பகுப்பாய்வுக்கான வரைவியல் தரவு பகுப்பாய்வு நிரலாகும். இது அளவீட்டு விளைவுகளை மதிப்பீடு செய்துக் காட்சிப்படுத்துகிறது. இந்த நிரலை 1987 இல் பெர்லின் நகரத்து செருமானியக் குழுமமான இமிக் ஓர்வு, அளவீட்டு நிறுவனம்(அளவீடும் கட்டுப்பாடும்) விண்டோசு 3.11. க்காக உருவாக்கியது. குழும மதிப்பீட்டின்படி, இது எவ்வளவு பெரிய தரவுக் கணங்களையும் உயர்வேகத்தில் கையாண்டு காட்சிப்படுத்தும் நிரலாகும்.[சான்று தேவை]
உருவாக்குனர் | இமிக் ஓர்வு, அளவீட்டு GmbH, பெர்லின் |
---|---|
அண்மை வெளியீடு | 7.3 |
இயக்கு முறைமை | விண்டோசு |
கிடைக்கும் மொழி | இடாய்ச்சு, ஆங்கிலம் |
மென்பொருள் வகைமை | தரவு ஈட்டல் |
உரிமம் | தனி உடைமை |
இணையத்தளம் | imcfamos.com |
அகல் விரிவான தரவுப் படிவங்களை தளமிறக்கல்
தொகுபெமோசு(FAMOS) என்பது, Excel, Binary, அல்லது ASCII கோப்புகள் போன்ற பலவகை கோப்புப் படிவங்களில் இருந்து தரவைத் தள மிறக்கவல்லதாகும். ஒரு கோப்பு உதவிநிரலுடன், இதனால் பல்வேறு தளமிறக்க வடிப்பிகளை உருவாக்க இயலும். இந்தத் தரவுகளை பலவகை வரைவியல் வழிமுறைகளில் காட்சிப்படுத்த முடியும். தகவலை சேர்த்துச் சிட்டையிட்டுக் கையாளலாம். பெமோசால் தனிக்கிடங்கிலோ ASCII அல்லது Excel கோப்புப் படிவங்களில் தேக்கிவைக்க முடியும்.[சான்று தேவை][1]
தரவுப் பகுப்பாய்வு
தொகுதளமிறக்கிய தரவுகளை மாந்த ஆற்றலாலோ தன்னியக்க வழிமுறைகளாலோ பல்வேறு கணிதவியல் இயக்கிகளைப் பயன்படுத்தி உருமாற்றலாம். மின்னனியல் வடிகட்டி, கதிர்நிரல் பகுப்பாய்வு, தரவுகளின் ஒருங்கியைந்த காட்சிப்படுத்தல், காணொலிசார் வரிசைகள், தன்னியக்க, அளவீட்டு அமைப்புச் செந்தமாக்கக் கழகத்தின் ASAM-ODS தரவுப் படிமம் போன்றவற்றுக்கான விரிவாக்க மென்பொருள்களை FAMOS அளிக்கவல்லது. மேலும், தனியாட் கணினி ஒலியட்டைவழி தரவுகளை மீட்டுக் கேட்கலாம்.[சான்று தேவை]
ஆவணமாக்கம்
தொகுபெமோசு தனது "அறிக்கையாக்க நிரல்" வழியாக, ஆவணங்களையும் அச்சிடும்போது தானாக மறையவல்ல பல்வேறு உரையாடல் கூறுகளும் கட்டுபாடுகள் அமைந்த வரைவியல் திட்டமிடல்களும் கொண்ட ஆய்வக அறிக்கையையும் உருவாக்க வல்லது. மேலும், உருவாக்கிய அறிக்கைகளின் பகுதி அல்லது முழுமையான தன்னியக்க உட்கூறுகளைத் தரும் வார்ப்புருக்களையும் பல்வேறு உள்ளீட்டுத் தரவுகளையும் பயன்படுத்தி பின்திருத்தச் செயல்முறைக்கு ஆட்படுத்தலாம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Media, OpenSystems. "New Version of Data Analysis Software imc FAMOS 2022". Embedded Computing Design (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-08.