இம்பா மாவட்டம்
இம்பா மாவட்டம் பிஜி நாட்டின் விட்டிலெவு தீவின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. இந்த மாவட்டத்தில் இம்பா நகரமும் அதைச் சுற்றியுள்ள ஊர்களும் அடங்குகின்றன. இந்த மாவட்டம் மேற்குக் கோட்டத்திற்கு உட்பட்டது. இங்கு கரும்பை பயிரிடுகின்றனர். இங்கு பிஜி இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.