பிஜி இந்தியர்
பிசி இந்தியர் (Indo-Fijians) எனப்படுவோர் இந்தியா மற்றும் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா போன்ற பல்வேறு பாகங்களிலும் இருந்து பிசித் தீவில் குடியேறியவர்களின் வம்சாவழியினரைக் குறிக்கும்.[7] 2007 கணக்கெடுப்பின் படி பிசியில் இவர்களின் மொத்தத்தொகை 313,798 (37.6%) ஆகும்.[8] இவர்களின் மூதாதையர்கள் பெரும்பாலும் 1879 முதல் 1916 வரையான காலப்பகுதியில் பிசியின் பிரித்தானிய ஆட்சியாளர்களால் இங்குள்ள சீனித் தோட்டங்களில் பணி புரிவதற்காக அழைத்து வரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். இவர்களுடன் பின்னர் இங்கு வந்து குடியேறிய குசராத்தியர், மற்றும் பஞ்சாபியரும் இணைந்தனர். இவர்கள் காலப்போக்கில் தமது தனிப்பட்ட பண்பாட்டைப் பேணிப் பாதுகாத்தாலும், பிசிய இனத்தவர்களின் மொழி, உடை, மற்றும் அவர்களது பழக்க வழக்கங்களைத் தழுவினர். பிசி இந்தியர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடியிருந்தாலும், அதில் அவர்கள் பெரிதளவு வெற்றி காணவில்லை. பெருமளவு இந்தியர்கள் தமது சமூக உரிமை, மற்றும் மேம்பட்ட வாழ்வைத் தேடி அங்கிருந்து வெளியேறினர். 1980களின் இறுதியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிகளின் தாக்கத்தால் இந்த வெளியேறல் பெரும் எண்ணிக்கையில் இடம்பெற்றது.
மொத்த மக்கள்தொகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
460,000 பிஜியின் மொத்த மக்கள்தொகையில் 40% (2001) | |||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||||||
பிஜி | 313,798 (2007 கணக்கெடுப்பு)[1] | ||||||
ஆத்திரேலியா | 48,141 (2006)[2] | ||||||
நியூசிலாந்து | 37,746 (2006)[3] | ||||||
ஐக்கிய அமெரிக்கா | 30,890 (2000)[4] | ||||||
கனடா | 24,441 (2004)[5] | ||||||
ஐக்கிய இராச்சியம் | தெரியவில்லை | ||||||
மொழி(கள்) | |||||||
பிஜி இந்தி (lingua franca), பஞ்சாபி மொழி, குஜராத்தி | |||||||
சமயங்கள் | |||||||
இந்து (76.7%), இசுலாம் (15.9%), சீக்கியர் (0.9%), கிறித்தவர் (6.1%), ஏனையோர் (0.4%) [6] |
மேற்கோள்கள்
தொகு- ↑ index.htm Fiji Islands Bureau of Statistics[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ - Australia: Stock of foreign-born population by country of birth, various years, 1991 to 2006
- ↑ "QuickStats About Culture and Identity". Archived from the original on 2007-12-01. பார்க்கப்பட்ட நாள் 2012-12-15.
- ↑ People born in Fiji
- ↑ Migration facts, stats and maps
- ↑ stats.htm Population by Religion and by Race
- ↑ Girmit by Suresh Prasad
- ↑ "Fiji population up 50,000 in 10 yrs". Fijilive. 31 October 2007. http://www.fijilive.com/news/show/news/2007/10/31/news5.html. பார்த்த நாள்: 4 November 2007.