இம்ரான் மசூத்

இந்திய அரசியல்வாதி

இம்ரான் மசூத் (Imran Masood - பிறப்பு: ஏப்ரல் 21, 1971) ஒரு இந்திய அரசியல்வாதி. அவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சகாரன்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மாநில சட்டமன்றத்தில் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள முசாபராபாத் தொகுதியில் எம்.எல்.ஏவாகவும் பணியாற்றியுள்ளார். அவர் இந்திய தேசிய காங்கிரஸின் உத்தரபிரதேசத்தின் துணைத் தலைவராகவும், உத்தரபிரதேச காங்கிரஸில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ. ஐ. சி. சி.) முன்னாள் தேசிய செயலாளராகவும் இருந்தார்.

இம்ரான் மசூத்
Imran Masood
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்ஆச்சி பாசுலுர் இரகுமான்
தொகுதிசகாரன்பூர்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
13 மே 2007 – 9 மார்ச்சு 2012
முன்னையவர்இயகதீசு சிங் ராணா
பின்னவர்மகாவீர் சிங் ராணா
தொகுதிமுசாபர்பாத்து சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 ஏப்ரல் 1971 (1971-04-21) (அகவை 53)
காங்கோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி
துணைவர்சைமா மசூத்
உறவுகள்ரசீத் மசூத்
பிள்ளைகள்5 மகள்கள்
வாழிடம்சகாரன்பூர்

பிறப்பும் கல்வியும்

தொகு

இம்ரான் மசூத் ஏப்ரல் 21, 1971ல் உத்தரப் பிரதேசத்தின் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கோஹ் எனும் ஊரில் ரஷீத் மசூத் என்பவருக்கு மகனாக விவசாய குடும்பத்தில் பிறந்தார். கங்கோஹ்வில் உள்ள ஹெச்.ஆர்.இ கல்லூரியில் தனது பள்ளிப்படிப்பை 1987 ஆம் ஆண்டு முடித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

2006–2007 - சஹாரன்பூர் நகராட்சி தலைவர் 2007–2012 - முசாபராபாத் சட்டமன்ற உறுப்பினர் (சுயேட்சையாக)[1] 2008-2009 - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் சிறப்புக் குழு உறுப்பினர் 2019-2020 - இந்திய தேசிய காங்கிரஸில் உத்தரப்பிரதேசத்தின் துணைத் தலைவர் 2020-2021 - உத்தரப் பிரதேச காங்கிரஸில் ஆலோசனைக் குழு உறுப்பினர் 2021-2022 - அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) தேசிய செயலாளர் மற்றும் டெல்லி செயலாளர் 2024 - தற்போது) சகாரன்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.[2], [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Congress candidate Imran Masood threatens to 'chop' Narendra Modi". Economic Times. 28 March 2014. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/congress-candidate-imran-masood-threatens-to-chop-narendra-modi/articleshow/32834234.cms. 
  2. "Imran Masood as Congress Candidate". http://www.dnaindia.com/india/report-up-elections-2017-cong-candidate-list-includes-imran-masood-who-threatened-to-chop-up-pm-modi-2295187. 
  3. "SP और BSP होते हुए फिर Congress में लौटे इमरान मसूद, राहुल के इस करीबी नेता ने दिलाई सदस्यता". Zee News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்ரான்_மசூத்&oldid=4014593" இலிருந்து மீள்விக்கப்பட்டது