இயக்கியற்ற அணுக்கருப் பாதுகாப்பு
இயக்கியற்ற அணுக்கருப் பாதுகாப்பு (Passive nuclear safety) என்பது அணுக்கரு உலைகளில் எவ்வித இயக்குனரின் செயல்களையோ மின்னணு சாதன பின்னூட்டையோ சார்ந்திராது நெருக்கடிக் காலங்களில் (பொதுவாக குளிர்விக் குறைவினால் அல்லது குளிர்வி பாய்மம் குறைவினால் சூடு கூடுதலாகும்போது) தானே பாதுகாப்பாக இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்ற ஓர் பாதுகாப்பு அமைப்பாகும். இத்தகைய அணுஉலைகளில், பயன்படுத்தப்படும் பொருட்களின் தேர்வில் அவற்றின்தன்மையால் இயற்பியல் விதிகளின்படி நெருக்கடிக் காலங்களில் அணுக்கரு வினையை ஊக்குவிக்காது மட்டுப்படுத்துபவையாக பொறியியல் வடிவமைப்பின்போது கவனம் செலுத்தப்படுகிறது. மாறாக முந்தைய அணுஉலை வடிவமைப்புகளில், பொதுவான விளைவாக, சூடு கூடுதலாகும்போது அணுக்கரு வினையும் விரைவுபடுத்தப்படுமாதலால் அணுஉலைச் சேதத்தை தவிர்க்க இயக்கும் மனிதரின் இடையீடு அல்லது மின்னியல் பின்னூட்டு மூலமான இடையீடு தேவையாக இருந்தது.
சொல்லாட்சி
தொகுஒரு அணுஉலையை 'இயக்கியற்ற பாதுகாப்புடையது' என்று விவரிப்பது அங்கு பின்பற்றக்கூடிய பாதுகாப்பு யுக்தியைக் குறிப்பதாக அமையுமே தவிர எந்தளவிற்கு பாதுகாப்பானது என்பதை அல்ல. இயக்கியற்ற பாதுகாப்பை பின்பற்றும் அணுஉலை பாதுகாப்பானதா அல்லவா என்பது பாதுகாப்புக் குறித்தான மதிப்பீடு அளவைகளைப் பொறுத்ததாகும். இருப்பினும் நவீன அணுஉலைகள் இயக்கியற்ற பாதுகாப்பைக் கூட்டுவனவாகவும் இயக்கியற்ற மற்றும் இயக்கத்தில் உள்ள பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றி முந்தைய நிறுவல்களைவிட பாதுகாப்பானதாகவும் உள்ளன.
இயக்கியற்ற பாதுகாப்பு என்பது பயன்படுத்தப்படும் கூறுகளுக்கானவையே தவிர எக்காரணம் கொண்டும் முழுமையான பாதுகாப்பு நல்குவனவாகக் கருதப்படல்கூடாது. எனவே பன்னாட்டு அணுசக்தி முகமையகம் "இயக்கியற்ற பாதுகாப்பு" பொருட்களை, அவை எவற்றை பயன்படுத்துவதில்லை என்பதைப் பொறுத்து, கீழ்கண்டவாறு தரப்படுத்தியுள்ளது[1]:
- நகரும் இயக்க பாய்மம் தேவை இல்லை
- நகரும் இயந்திர பாகம் தேவை இல்லை
- 'நுண்ணறிவான' சமிக்ஞை உள்ளீடு தேவை இல்லை
- வெளி மின்னாற்றல் உள்ளீடு அல்லது விசை தேவை இல்லை
மேற்கோள்கள்
தொகு- ↑ Safety related terms for advanced nuclear plants. Vienna, Austria: பன்னாட்டு அணுசக்தி முகமையகம். செப்டம்பர் 1991. பக். 1–20. IAEA-TECDOC-626. பன்னாட்டுத் தர தொடர் எண்:1011-4289. http://www-pub.iaea.org/MTCD/publications/PDF/te_626_web.pdf.