இயசோதர மிசுரா

ஒடிய மொழி எழுத்தாளர்

இயசோதர மிசுரா (Yashodhara Mishra) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். ஆங்கிலப் பேராசிரியரான இவர் ஒடிய மொழியில் கவிதைகள், பல சிறுகதைகள் மற்றும் நாவல்களின் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இந்திய உயர்கல்வி நிறுவனத்தில் இவர் ஒரு சக ஊழியராக இருந்தார்.

இயசோதரா மிசுரா
Yashodhara Mishra
பிறப்பு1951
சம்பல்பூர், ஒடிசா, இந்தியா
தொழில்எழுத்தாளர் மற்றும் கவிஞர்
தேசியம்இந்தியா
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாடமி விருது - 2020

வாழ்க்கைக் குறிப்பு தொகு

மிசுரா 1951 இல் ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூரில் பிறந்தார். ஒரு கவிஞராகவும் ஆங்கிலப் பேராசிரியராகவும் செயல்பட்டார். பல சிறுகதைகள் மற்றும் நாவல்களின் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஒடியா, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார். [1]

மிசுரா கதா கதை விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். [2]

இந்திய உயர் கல்வி நிறுவனத்தில் ஒரு சக ஊழியராக இருந்தார். அங்கு இவரது ஆராய்ச்சியில் சடங்குகள், பாலினம், ஒரிசா பெண்கள் ஆகியவை இடம்பெற்றன. [3]

தனது சமுத்திரகுல கரா என்ற புத்தகத்திற்காக 2020 ஆம் ஆண்டு மிசுராவிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. [4]

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  • "Odisha Sahitya Akademi". odishasahityaakademi.org. Archived from the original on 13 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயசோதர_மிசுரா&oldid=3911882" இலிருந்து மீள்விக்கப்பட்டது