இயத்விந்தர் கோமா
இந்திய அரசியல்வாதி
இயத்விந்தர் கோமா (Yadvinder Goma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதியன்று இமாச்சலப் பிரதேசத்தின் பாலம்பூர் நகரத்தில் இவர் பிறந்தார். இமாச்சலப் பிரதேசத்தின் செய்சிங்பூரில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் இரவி திமான் என்பவருக்கு எதிராக 2,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பி.டெக். இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலில் இளநிலை தொழில்நுட்ப பட்டமும் முதுநிலை வணிக மேலாண்மை பட்டமும் பெற்றுள்ளார். [1] 2015 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.[2]
இயத்விந்தர் கோமா Yadvinder Goma | |
---|---|
இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் திசம்பர் 2022 | |
முன்னையவர் | இரவீந்தர் குமார் |
தொகுதி | செய்சிங்பூர் |
பதவியில் 2012–2017 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
தொகுதி | செய்சிங்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 பெப்ரவரி 1986 பாலம்பூர், இமாச்சலப் பிரதேசம், காங்ரா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
வாழிடம் | பஞ்சுருகி |
வேலை | அரசியல்வாதி |
2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு இயத்விந்தர் கோமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Himachal Elections 2012: Educational Qualification of newly elected MLAs | Hill Post". Hillpost.in. 2012-12-22. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
- ↑ "Details | eVidhan- Himachal Pradesh". Hpvidhansabha.nic.in. 1986-02-04. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
- ↑ "CM asks ayurveda students to serve in rural areas". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.