இயன் ஹீலி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் (பிறப்பு 1964)

இயன் ஆண்ட்ரூ ஹீலி (Ian Andrew Healy பிறப்பு: ஏப்ரல் 30, 1964) ஓர் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார்.இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 119 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 4,356 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 161* எடுத்துள்ளார். இவரது மட்டையாட்ட சராசரி 27.39 ஆகும். 168 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1764 ஓட்டங்களை 21.00 எனும் சராசரியில் எடுத்துள்ள இவரது அதிகபட்ச ஓட்டம் 56 ஓட்டங்கள் எடுத்தது ஆகும்.இவரது மேலும் இவர் 189 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 8341 ஓட்டங்களை 30.22 எனும் சராசரியில் எடுத்தார். இவர் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 161* ஓட்டங்களை எடுத்தார். 212 பட்டியல் அ போட்டிகளிலும் விளையாடி 2,183 ஓட்டங்களை 20.99 எனும் சராசரியில் எடுத்த இவர் அதிகபட்சமாக 56 ஓட்டங்களை எடுத்தார்.இழப்புக் கவைப்பாளராகவும் மட்டையாளராகவும் இவர் துடுப்பாட்டம் விளையாடினார்.

இயன் ஆண்ட்ரூ ஹீலி

ஆரம்ப நாட்களில்

தொகு

பிரிஸ்பேன் புறநகர்ப் பகுதியான ஸ்பிரிங் ஹில்லில் பிறந்த ஹீலி பிரிஸ்பேன் மாநில உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். 1972 ஆம் ஆண்டில் சிறிய நகரமான பிலோலாவுக்கு வடக்கே, அவரது தந்தை வங்கி மேலாளராக பணியில் மாற்றப்பட்டதன் காரணமாக ஹீலியும் அவரது குடும்பத்தினரும் 600 கிலோமீட்டர்கள் (370 mi) கடந்து இடம் பெயர்ந்தனர் .[1] ராட் மார்ஷ் ஹீலியை இழப்புக் கவனிப்பாளராக விளையாடுமாறு தூண்டினார். இருந்தபோதிலும் இவர் கூடைப்பந்து, கால்பந்து, சுவர்ப்பந்து மற்றும் ரக்பி லீக் ஆகியவற்றிலும் விளையாடினார்.[2] அவர் குயின்ஸ்லாந்து 11 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அணியின் இழப்புக் கவனிப்பாளரான ஜான் மக்லீன் அவருக்கு சில சிறப்புப் பயிற்சியைக் கொடுத்தார், இது அவரது துடுப்பாட்ட வாழ்க்கைக்கு மேலும் உத்வேகம் அளித்தது.

நகரத்தில் அவரது பிற்காலத்தில், ஹீலி தன்னை விட வயதில் பெரியவர்களுடன் விளையாடினார், இது அவரது துடுப்பாட்ட வாழ்க்கைக்கு உதவியது.[2] தனது 17 ஆம் வயதில் தனது குடும்பத்தினருடன் பிரிஸ்பேனுக்குத் திரும்பிய அவர் பிரிஸ்பேன் மாநில உயர்நிலைப் பள்ளி 1 வது லெவன் மற்றும் 1 வது XV க்காகவும் விளையாடினார், பின்னர் 1982 ஆம் ஆண்டில் பிரிஸ்பேனின் வடக்கு புறநகர் துடுப்பாட்ட சங்கத்தில் சேர்ந்தார். ஒரு சிறப்பு மாற்று துடுப்பாட்ட வீரராக குயின்ஸ்லாந்து கோல்ட்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, ஹீலி 1986-87ல் காயமடைந்த பீட்டர் ஆண்டர்சனுக்கு மாற்றாக தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.

குடும்பம்

தொகு

ஹீலிக்கு, கென், கிரெக் எனும் இரண்டு சகோதரர்களும் கிம் எனும் ஒரு சகோதரியும் உள்ளனர். கென் 1990 ஆம் ஆண்டில் குயின்ஸ்லாந்துக்காக ஒரு ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டித் தொடரில் 1991 ஆம் ஆண்டில் பட்டியல்- அ போட்டியில் அறிமுகமானார். ஹெலன் எனவரை மணந்த இவருக்கு எம்மா மற்றும் லாரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர், ஒரு மகன் டாம். அவரது மருமகள் அலிஸா ஹீலி இழப்புக் கவனிப்பாளராக ஆஸ்திரேலியா பெண்கள் தேசிய துடுப்பாட்ட அணியில் விளையாடினார்.அலிஸா தனது குழந்தை பருவ நண்பரான ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ஏப்ரல் 2016 இல் திருமணம் செய்து கொண்டார்.

சான்றுகள்

தொகு
  1. Wisden 1994 edition: Ian Healy cricketer of the year.
  2. 2.0 2.1 Cricinfo: Ian Healy.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_ஹீலி&oldid=4062716" இலிருந்து மீள்விக்கப்பட்டது