இயல் மொழி ஆக்கம்

"இயல் மொழி" என்கிறபொழுது, தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை மக்கள் தங்கள் இயல்பான வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துகின்றனரோ அத்தகையது எனப் பொருள்கொள்கிறோம்.

நிரலாக்க மொழிகள் முதலிய செயற்கை மொழிகளைப் போல் அல்லாது இயல் மொழிகள் வாழையடி வாழையாய் தழைத்து வந்துள்ளமையால் குறிப்பிட்ட விதிகளைக் கொண்டு விளங்கிக் கொள்வது கடினம்.

சற்றே பரந்த நோக்கில் இயல் மொழி ஆக்கம் என்பதனை (சுருக்கமாக இ.மொ.ஆ) இயல் மொழியொன்றினை கணினியாக்கத்திற்கான எத்தகைய ஒரு பணியாகவும் எடுத்துக் கொள்வோம்.

ஒரு பக்கம் அது கொடுக்கப் பட்டுள்ளப் பத்தியில் 'ஆ' எத்தனை முறை வருகிறது எனக் கணக்கிடுவதாக இருக்கலாம். மற்றொரு பக்கம், இ.மொ.ஆ மனிதன் மொழிபவற்றை புரிந்து கொள்வதாய், குறைந்த பட்சம் அவர்களுக்கு பயனுள்ள பதில் அளிக்கவல்லதாய் அமையலாம்.

இணைப்புகள்

தொகு

இயல் மொழியாக்கத்துக்கான பைதான் நிரலகம் பரணிடப்பட்டது 2007-10-11 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயல்_மொழி_ஆக்கம்&oldid=3234229" இலிருந்து மீள்விக்கப்பட்டது