இரகோத்தம தீர்த்தர்
இரகோத்தம தீர்த்தர் (Raghuttama Tirtha) ( அண். 1548 அண். 1596) இவர் ஓர் இந்திய தத்துவவாதியாகவும், அறிஞராகவும், இறையியல் அறிஞராகவும் துறவியாகவும் இருந்துள்ளார். இவர் பாவபோதாச்சார்யா என்றும் அழைக்கப்பட்டார். மத்துவர் மற்றும் ஜெயதீர்த்தரின் படைப்புகள் பற்றிய வர்ணனைகள் இவரது மாறுபட்ட சாயலில் அடங்கும். இவர் 1557-1595 வரை மத்வாச்சாரியரியன் உத்திராதி மடத்தின் பதினான்காம் தலைவராக இருந்தார். இவர் முப்பதொன்பது ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பணிகளைக் கொண்டிருந்தார். [1] துவைத சிந்தனைப் பள்ளியின் வரலாற்றில் மிக முக்கியமான பார்வையாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். [2] தமிழ்நாட்டின் திருக்கோவிலூரிலுள்ள இவரது கோவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. [3]
இரகோத்தம தீர்த்தர் | |
---|---|
பிறப்பு | 1548 மானூர், பீசப்பூர் மாவட்டம், கருநாடகம், இந்தியா |
இறப்பு | 1596 திருக்கோயிலூர், தமிழ்நாடு, இந்தியா |
இயற்பெயர் | இராமச்சந்திர பட்டா |
சமயம் | இந்து சமயம் |
தலைப்புகள்/விருதுகள் | பாவபோதாச்சார்யா |
தத்துவம் | துவைதம், வைணவ சமயம் |
குரு | இரகுவார்யா தீர்த்தர் |
ஒரு பிரபுத்துவ பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவர், இரகுவார்ய தீர்த்தரின் வழிகாட்டுதலில் மடத்தில் வளர்க்கப்பட்டார். இவர் 11 படைப்புகளை இயற்றினார். மத்துவர், ஜெயதீர்த்தர் மற்றும் வியாசதீர்த்தர் ஆகியோரின் படைப்புகளை பாவபோதனையின் வடிவத்தில் துவைத சிந்தனையை விரிவாகக் கூறுகிறார். [1]
வாழ்க்கை
தொகுஇவரது வாழ்க்கையைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் இவரது மடங்களின் (குரு பரம்பரை) வழியாகவே பெறப்பட்டுள்ளது. [1] இவர் கன்னட மொழி பேசும் தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் இராமச்சந்திர பட்டாவாக 1548 இல் சுப்பா பட்டா மற்றும் கங்காபாய் ஆகியோருக்கு பிறந்தார். [4] இவரது தந்தை ஒரு ஜமீந்தார் என அறியப்படுகிறது. இவர் கர்நாடகாவின் பிஜப்பூர் மாவட்டத்தில் மானூர் என்ற பிறந்தார். இவர் தனது ஏழு வயதில் தனது உபநயனத்தை தரித்துக் கொண்டு, சந்நியாச வாழ்க்கையை மேற்கொண்டார். [1] இவர் இரகுவார்ய தீர்த்தரின் வழிகாட்டுதலில் மானூரின் கற்றறிந்த பண்டிதரான ஆத்ய வரதராஜாச்சார்யாவின் கீழ் சில காலம் படித்ததாகக் கூறப்படுகிறது. [3]
படைப்புகள்
தொகுஇவரது பத்து படைப்புகள் உள்ளன. அவற்றில் 9 படைப்புகள் மத்துவர், பத்மநாப தீர்த்தர் மற்றும் ஜெயதீர்த்தர் ஆகியோரின் படைப்புகள் பற்றிய விளக்கவுரைகளாகும். அவற்றில் ஐந்து படைப்புகள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பவபோதனை என்பது இவரது பெரும்பான்மையான படைப்புகளின் பொதுவான தலைப்பாகும். இவர், பொதுவாக "பவபோதகர்" அல்லது "பாவபோதாச்சார்யா" என்று அழைக்கப்படுகிறார். [3] இவரது படைப்புகள் பிருகதாரண்யக பாவபோதனை என்பது மத்துவரின் பிருகதாரண்யக உபநிடத பாஷ்யம் பற்றிய வர்ணனையாகும். இது இவரது மகத்தான பணியாக கருதப்படுகிறது.[5]
மரபு
தொகுஜெயதீர்த்தருக்குப் பிறகு, திகாச்சார்யர் அதாவது பாவபோதாச்சார்யர் என்று குறிப்பிடப்படுகிறார். [3] வரலாற்றாசிரியர் சர்மா எழுதுகிறார் "இவரது மொழி எளிமையானதாகவும், துல்லியமானதாகவும் உள்ளது. இவர் தனது கருத்துக்களை ஆணித்தரமாகக் கூறுகிறார். வேறு எந்த வர்ணனையாளரால் மேற்கோள் காட்டப்படாத சில அடையாளம் தெரியாத மூலங்களிலிருந்து இவர் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்". [5] இவர் சாதி, மத வேறுபாடின்றி விஷ்ணுவின் வழிபாட்டை பிரசங்கிக்க அறியப்பட்ட ஒரு துறவியாக கருதப்படுகிறார். தமிழ்நாட்டின் திருக்கோவிலூரிலுள்ள இவரது கோவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. [3]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Sharma 2000, ப. 463.
- ↑ Sharma 2000, ப. 433.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Sharma 2000, ப. 464.
- ↑ Hebbar 2005, ப. 155.
- ↑ 5.0 5.1 Sharma 2000, ப. 465.
நூலியல்
தொகு- Sharma, B. N. Krishnamurti (2000), A History of the Dvaita School of Vedānta and Its Literature, Vol 1. 3rd Edition, Motilal Banarsidass (2008 Reprint), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120815759
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Dasgupta, Surendranath (1975), A History of Indian Philosophy, Volume 4, Motilal Banarsidass Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120804159
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Devadevan, Manu V. (2016), A Prehistory of Hinduism, Walter de Gruyter GmbH & Co KG, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3110517378
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Hebbar, B.N (2005). The Sri-Krsna Temple at Udupi: The History and Spiritual Center of the Madhvite Sect of Hinduism. Bharatiya Granth Nikethan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89211-04-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Brück, Regina von; Brück, Michael von (2011). Life in the Power of Rituals : Religion and Spirituality in India. CHBeck. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3406612428.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Glasenapp, Helmuth von (1992). Madhva's Philosophy of the Viṣṇu Faith. Dvaita Vedanta Studies and Research Foundation.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Trivedi, Krishnaji (1971). Mahatmas: Acharyas, Mystics, Saints, Sages, Seers. Shivaji news printers.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Tirtha, Raghuttama (1956). Tattvaprakāśikā-vyākhya Bhavabodhah. Government Oriental Manuscripts Library.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Naqvī, Ṣādiq; Rao, V. Kishan (2005). A Thousand Laurels--Dr. Sadiq Naqvi: Studies on Medieval India with Special Reference to Deccan, Volume 2. Department of Ancient Indian History, Culture & Archaeology, Osmania University.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Kashyap, Ram Anant; Purnaiya, R. (1973), An Introduction to Madhva Ontology, Tattva Viveka Publications
- Callewaert, Winand M. (1994). According to Tradition: Hagiographical Writing in India. Otto Harrassowitz Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3447035248.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sharma, B. N. Krishnamurti (1971). The Brahmasutras and Their Principal Commentaries A Critical Exposition. Munshiram Manoharlal Publishers (2008 Reprint). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8121500357.
- Rao, Vasudeva (2002). Living Traditions in Contemporary Contexts: The Madhva Matha of Udupi. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125022978.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Okita, Kiyokazu (2014). Hindu Theology in Early Modern South Asia: The Rise of Devotionalism and the Politics of Genealogy. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0198709268.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
மேலும் படிக்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Works of Raghuttama Tirtha at Internet Archive
- Sri Raghuttama Tirtha from https://www.uttaradimath.org
- Sri Raghuttama Tirtha from http://www.tatvavada.org/eng/