இரட்டை அருவி (ஓரிகான்)
இரட்டை அருவி (Twin Falls -Oregon) என்பது அமெரிக்க மாநிலமான ஓரிகானில் உள்ள மரியன் கவுண்டியில் சேலம் நகரின் கிழக்கு முனையில் உள்ள சில்வர் அருவி மாநிலப் பூங்காவில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும்.[1] இது மவுண்ட் ஹூட் தேசிய வனப்பகுதி மத்திய சாண்டியம் வனப்பகுதியைச் சந்திக்கும் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. தென் நீர்வீழ்ச்சி, டிரேக் நீர்வீழ்ச்சி, லோயர் சவுத் நீர்வீழ்ச்சி மற்றும் குளிர்கால நீர்வீழ்ச்சி போன்ற பல முக்கிய நீர்வீழ்ச்சிகள் இந்தப் பூங்காவில் அமைந்துள்ளன.
இரட்டை அருவி | |
---|---|
வசந்த காலத்தில் இரட்டை அருவி | |
அமைவிடம் | சில்வர் அருவி, ஸ்டேட் பார்க் |
ஆள்கூறு | 44°53′07″N 122°38′13″W / 44.88518°N 122.63702°W |
வகை | வடிநிலம் |
ஏற்றம் | 1,237 அடி (377 m) |
மொத்த உயரம் | 31 அடி (9.4 m) |
சராசரிப் பாய்ச்சல் வீதம் | 100 cu ft/s (2.8 m3/s) |
அமைவிடம்
தொகுசில்வர் க்ரீக்கின் நார்த் ஃபோர்க்கின் போக்கில் இரட்டை நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது. இது பத்து நீர்வீழ்ச்சியின் சில்வர் அருவி மாநிலப் பூங்கா டிரெயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கனியன் டிரெயில் வழியாக நார்த் ஃபால்ஸ் டிரெயில் நோக்கி, மத்திய வடக்கு நீர்வீழ்ச்சி கால் மைல் தூரத்தில் உள்ளது.[2] வசந்த காலத்தில் அது இரண்டு பிரிவுகளாகப் பிரிந்ததால் இதற்கு இரட்டை அருவி எனப் பெயர் வந்தது.
விளக்கம்
தொகுஇரட்டை நீர்வீழ்ச்சி பத்து நீர்வீழ்ச்சியின் பாதையில் மூன்றாவது சிறிய அருவியாகும். இதனை கனியன் தடத்தின் அதிகாரப்பூர்வ பார்வையிலிருந்து முழுமையாகப் பார்க்க முடியாது. நீர்வீழ்ச்சி ஒரு கோண பசால்ட் லெட்ஜ் மீது இரண்டு பகுதிகளாக விழுகிறது. இந்த அருவி 31 அடிகள் (9 m) திரைச்சீலைகளைப் போன்றது.[3] இரண்டில் தூரத்தில் உள்ள ஒன்று கோடையில் வற்றி அருகிலுள்ள குன்றின் மீது மட்டும் பாய்வதால் இதனைக் காண்பது சாத்தியமற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Twin Falls Marion County, Oregon". Northwest Waterfall Survey. பார்க்கப்பட்ட நாள் 22 May 2017.
- ↑ "Silver Falls State Park Trail of Ten Falls" (PDF). Oregon State Parks. Archived from the original (PDF) on 23 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 6 May 2017.
- ↑ "Twin Falls Hike". OregonHikers.org. பார்க்கப்பட்ட நாள் 20 May 2017.