இரட்டை நுனி முடிச்சு

இரட்டை நுனி முடிச்சு (Double overhand knot) என்பது வழமையான நுனி முடிச்சின் ஒரு விரிவாக்கம் ஆகும். நுனி முடிச்சின் தடத்தில் இன்னொரு சுற்றுப் போடுவதன் மூலம் "இரட்டை நுனி முடிச்சு" முடியப்படுகிறது. இதனால் இம்முடிச்சுச் சற்றுப் பெரிதாக இருப்பதுடன் இறுகிய பின்னர் அவிழ்ப்பதற்குக் கடினமானதாகவும் இருக்கிறது. இம்முடிச்சு, மருத்துவர் முடிச்சின் முதல் பகுதியாகவும், இரட்டை மீனவர் முடிச்சின் இரு பகுதிகளாகவும் அமைகின்றது. இறுக்கு முடிச்சு என்பதும், பொருளொன்றைச் சுற்றி அமைக்கப்படும் இரட்டை நுனி முடிச்சின் மாற்றியமைக்கப்பட்ட ஒரு வடிவமாகும்.

இரட்டை நுனி முடிச்சு
வகைதடை வகை
செயற்றிறன்இடைத்தரம்
மூலம்nov
தொடர்புநுனி முடிச்சு, மருத்துவர் முடிச்சு, இறுக்கு முடிச்சு, இரட்டை மீனவர் முடிச்சு
ABoK
  1. 516

இது ஒரு சிறந்த தடை முடிச்சு. முறைப்படி முடியும் போது இது ஒரு சீர்மையான முடிச்சாக அமையும்.

முடியும் முறை தொகு

 
Tying the knot

பொதுவான நுனி முடிச்சொன்றைப் போட்டபின் செயல் நுனியைத் தடத்துக்குள் செலுத்தி இன்னொரு முறை சுற்றினால் இரட்டை நுனி முடிச்சுக் கிடைக்கும். பார்த்து இதன் அமைப்பைப் புரிந்து கொள்வதும், இதனைக் கட்டுவதும் மிகவும் இலகுவானது. (இடப்புறம் உள்ள படத்தைப் பார்க்கவும்). இதனை வேறு வழிகளிலும் முடிய முடியும்.

பயன்கள் தொகு

கயிற்றின் நுனைகளில் போடப்படும் தடை முடிச்சாகப் பயன்படும் அதே வேளை இது, பிற முடிச்சுகளின் ஒரு பகுதியாகவும், பிற முடிச்சுக்களுக்குக் கூடுதலான பாதுகாப்பை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

குறிப்புகள் தொகு


இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_நுனி_முடிச்சு&oldid=3234277" இலிருந்து மீள்விக்கப்பட்டது