இரண்டாம் எலிசபெத்தின் அயர்லாந்து பயணம்
இரண்டாம் எலிசெபத்தின் அயர்லாந்து குடியரசுப் பயணம் மே 17, 2011 அன்று இடம் பெற்றது. இந்த பயணத்தின் போது எலிசபெத்துடன் அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் கலந்து கொண்டார். இரண்டாம் எலிசெபெத் அயர்லாந்து குடியரசின் அதிபர் மெரி மக்கல்சியின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார். அயர்லாந்து குடியரசு சுதந்திரம் அடைந்த பின்னர் அங்கு பயணம் செய்யும் முதலாவது ஐக்கிய இராச்சிய அரச குடும்பத்தைச் சேர்ந்த தலைவர் எலிசபெத் ஆவார். இதற்கு எதிராக அயர்லாந்தில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், அரசி பயணிக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வெடி குண்டையும் அயர்லாந்து இராணுவத்தினர் செயல் இழக்கச்செய்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Queen in Ireland: Why royal visit had to wait". BBC News (BBC.co.uk). 16 May 2011. https://www.bbc.co.uk/news/magazine-13410979.
- ↑ Cowell, Alan (18 May 2011). "Queen Elizabeth Visits Irish Massacre Site". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2011/05/19/world/europe/19queen.html.
- ↑ "Queen shifts gears with trip to Irish horse heartland". ராய்ட்டர்ஸ். 19 May 2011. https://www.reuters.com/article/us-ireland-queen-idUSTRE74I3KJ20110519.