இரண்டாம் கர்கன்

இரண்டாம் கர்கன் (Karka II ஆட்சிக்காலம் 972-973 ), இவன் இராஷ்டிரகூட மன்னன் கொத்திக அமோகவர்சனுக்குப் பின் அரியணை ஏறினான். இவன் குர்சார், சோழர், பாண்டியர்களுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றான் . இவனது கூட்டுப்படைகளுடன் சென்ற மேலைக் கங்கர் மன்னன் இரண்டாம் மாறசிம்மன் பல்லவர்களைத் தோற்கடித்தான். ஆனால் பரமரா அரசன் இரண்டாம் சியக்காவினால் தோற்கடிக்கப்பட்டு தலைநகரான மான்யக்டாவில் ஏற்பட்ட கொள்ளையினால் ஏற்பட்ட பலவீனங்களில் இருந்து மீளமுடியவில்லை. இந்நிலையில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் தைலப்பன் தன் சுயாட்சியை அறிவித்தான். நாட்டில் குழப்பநிலை ஏற்பட்டது. இரண்டாம் கர்கன் கொல்லப்பட்டான்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_கர்கன்&oldid=2487937" இருந்து மீள்விக்கப்பட்டது