இரண்டாம் ஜெயசிம்மன்
இரண்டாம் ஜெயசிம்மன் (Jayasimha II ஆட்சிக்காலம்1015 -1042 ) (இரண்டாம் ஜெகதேகமல்லன், மல்லிகமோட என்றும் அழைக்கப்படுகிறான்) இவனது சகோதரன் ஐந்தாம் விக்ரமாதித்தனுக்குப்பின் மேலைச் சாளுக்கிய அரியணையில் ஏறினான். இவன் தன்னாட்டைக்காக்க தெற்கில் சோழர்களுடனும் வடக்கில் பரமரா வம்சத்தவர்களுடனும் பல முனைகளில் போராட வேண்டி இருந்தது. [1][2] எப்படியாயினும் இவனது ஆட்சிக் காலம் கன்னட இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். இவனது அமைச்சர் பிராமண கன்னட எழுத்தாளரான துர்கசிம்மா ஆவார்(இவர் பஞ்சதந்திரத்தை கி.பி. 1031இல் எழுதியவர்).[3][4][5][6]
சோப்ரா போன்ற வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, இந்தக் காலத்தில் வேங்கியைத் தங்கள் திருமண உறவுகளால் சோழர்கள் தங்கள் கைகளில் உறுதியாக பற்றியிருந்தனர். இது மேலைச்சாளுக்கியருக்கு ஏமாற்றத்தையும், எரிச்சலையும் தந்தது. இரண்டு முனைகளில் இருந்து கிழக்கிலும் தெற்கிலும் மேலைச் சாளுக்கியர்களை சோழர்கள் அச்சுறுத்தினர். [7]
மால்வா படையெடுப்பு
தொகுமால்வாவைச் சேர்ந்த பரமரா வம்சத்தின் மன்னன் போஜா என்பவன் அவனது முன்னோடியான மஞ்சா அடைந்த தோல்விக்குப் பழிவாங்க வேண்டுமென வடக்கில் இருந்து சாளுக்கிய அரசின் மீது படையெடுத்து வட கொங்கன் லதா (நவீன குஜராத்) பகுதிகளைக் கைப்பற்றி சிலகாலம் தங்கள் வசம் வைத்திருந்தனர். மூன்றாம் பில்லம்மன் என்னும் சியுனா (யாதவ) மரபின் சிற்றரசன் தேவகிரியை (நவீன தௌலதாபாத் ) ஆண்டுவந்தான் இவன் போஜா வுக்கு ஆதரவாளனாகி இரண்டாம் ஜெயசிம்மனுக்கு எதிராகப் போராடினான். வரலாற்றாசிரியர் சென் இந்த படையெடுப்பு போஜா, காளச்சூரியப் ஆட்சியாளர் கங்கேயாதவா மற்றும் இராஜேந்திர சோழன் ஆகியோரின் கூட்டமைப்பின் காரணமாக இருக்கலாம் எனக் கருதுகிறார். ஆனால் இரண்டாம் ஜெயசிம்மன் கி.பி.1024 இல் செய்த படையெடுப்புக்கள் மூலமாக அவன் இழந்த அனைத்து வடக்குப் பகுதிகளையும் வெற்றிகரமாக மீட்டான். மூன்றாம் பில்லம்மனுடன் சமாதானமாகப் போகும் விதமாக இரண்டாம் ஜெயசிம்மனின் ஒரு மகளை அவனுக்குத் திருமணம் செய்வித்தான். [8][9]
சோழர்களுடன் போர்கள்
தொகுஇந்தக் காலகட்டத்தில், இராஜேந்திர சோழன் வேங்கி மீதான மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டியது மட்டுமல்லாது தொடர்ந்து மேலைச் சாளுக்கிய பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளிலும் தங்கள் பேரரசை விரிவாக்க முயற்சி மேற்கொண்டான். ஒரு காலகட்டத்தில் சோழர் தங்கள் படைகளின் கவனத்தை இலங்கை மீதும் பாண்டியர், சேரர் செய்த குழப்பங்கள் மீதும் செலுத்தவேண்டி இருந்தது. இந்தக் குழப்பங்கள் காரணமாக வேங்கியில் சோழர் கவனம் குறைவாக இருக்கும் நிலையைச் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த இரண்டாம் ஜெயசிம்மன் திட்டமிட்டான். கீழைச் சாளுக்கிய (வேங்கி) மன்னன் விமலாதித்தன் இறந்து சிம்மாசனத்திற்குப் போட்டி ஏற்பட்ட நிலையில் இரண்டாம் ஜெயசிம்மன் இவ்விசயத்தில் தலையிட்டான். ஜெயசிம்மன் விமலாதித்தனின் ஒரு மகனான இரண்டாம் விஜயாதித்தனை ஆதரித்தான் . [10][11][9] இது விமலாதித்தனுக்கும் சோழ இளவரசிக்கும் பிறந்த ராஜராஜ நரேந்திரனை மன்னனாக்க விரும்பிய ராஜேந்திர சோழன் திட்டத்துக்கு எதிராக இருந்தது. தன்னை வலுப்படுத்திக்கொள்ள இரண்டாம் ஜெயசிம்மன் துங்கபத்திரையின் தெற்கில் படைகளுடன் அணிவகுத்துச் சென்று, விருபாக்ஷா மற்றும் பெல்லாரி , ராய்ச்சூர், டோப் ஆகியவற்றையும் கங்கப்பாடி (நவீன கர்நாடக மாநிலத்தின் தென்கிழக்கு) பகுதிகளைக் கைப்பற்றினான். இராஜேந்திர சோழன் இரண்டு பக்கத் தாக்குதலை மேற்கொண்டான். ஒருபடையை மேலைச் சாளுக்கிய ராஜ்யத்துக்கு அனுப்பி வெற்றிகரமாக தந்தையை இழந்த ராஜராஜ நரேந்திரனை மன்னனாக்கினான். மற்றொரு படையை மேற்கே இரண்டாம் ஜெயசிம்மனை எதிர்த்து மசங்கி (மசகி தற்கோதைய ராய்ச்சூர் மாவட்டம்) என்ற இடத்தில் கி.பி.1021 இல் நடந்த போரில் ஜெயசிம்மனைத் தோற்கடித்து சோழர் படைகள் விரட்டின. துங்கபத்ரை ஆறு இரு பேரரசுகளுக்கு இடையே எல்லையாக இருந்தது. [10][11][9]
குறிப்புகள்
தொகு- ↑ Sastri (1955), p.166
- ↑ Kamath (1980), p.103
- ↑ Kamath (1980), p.102, p.114
- ↑ Narasimhacharya (1988), p.19
- ↑ Sastri (1955), p.359
- ↑ Encyclopaedia of Indian literature - vol2, pp.1164-1165, Sahitya Akademi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1194-7
- ↑ Chopra, Ravindran and Subrahmanian (2003), p.138
- ↑ Kamath (1980), p.102
- ↑ 9.0 9.1 9.2 Sen (1999) p.383
- ↑ 10.0 10.1 Sastri (1955), p. 166
- ↑ 11.0 11.1 Kamath (1980), p. 102
மேற்கோள்கள்
தொகு- Chopra, P.N.; Ravindran, T.K.; Subrahmanian, N (2003) [2003]. History of South India (Ancient, Medieval and Modern) Part 1. New Delhi: Chand Publications. ISBN 81-219-0153-7.
- Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka : from pre-historic times to the present. Bangalore: Jupiter books. LCCN 80905179. கணினி நூலகம் 7796041.
- Narasimhacharya, R (1988) [1988]. History of Kannada Literature. New Delhi: Penguin Books. ISBN 81-206-0303-6.
- Sastri, Nilakanta K.A. (2002) [1955]. A history of South India from prehistoric times to the fall of Vijayanagar. New Delhi: Indian Branch, Oxford University Press. ISBN 0-19-560686-8.
- Sen, Sailendra Nath (1999) [1999]. Ancient Indian History and Civilization. New Age Publishers. ISBN 81-224-1198-3.