இரண்டாம் பிரிதிவிசேனன்

வாகாடக ஆட்சியாளர்

இரண்டாம் பிரிதிவிசேனன் (Prithivishena II) (ஆட்சி சுமார். 480 – 500/505 பொ.ச. [1] ) வாகாடக வம்சத்தின் நந்திவர்தன-பிரவரபுர கிளையின் ஆட்சியாளராவார். இவர் தனது தந்தை நரேந்திரசேனனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். இவர் வாகாடக வரிசையின் கடைசி அறியப்பட்ட மன்னராக இருந்தார். இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் பற்றிய சான்றுகள் ஏதுமில்லை.

இரண்டாம் பிரிதிவிசேனன்
மகாராஜா
ஆட்சிக்காலம்சுமார் 480 - 500 பொ.ச.
முன்னையவர்நரேந்திரசேனன்
மரபுவாகாடகப் பேரரசு
தந்தைநரேந்திரசேனன்
தாய்அஜ்ஜிதபட்டாரிகா

பின்னணி தொகு

பிருதிவிசேனன், நரேந்திரசேனனுக்கும் அவரது மனைவி குந்தள நாட்டு இளவரசி அஜ்ஜிதபட்டாரிகா ஆகியோருக்குப் பிறந்தார். [2] இவரது தாத்தா இரண்டாம் பிரவரசேனனின் ஆட்சியின் போது இவரது தந்தை பட்டத்து இளவரசராக இருக்கும்போதே இவர் பிறந்திருக்கலாம். சுமார் 20 வயது இளைஞனாக இருந்தபோது, வாகாடகா இராச்சியத்தின் மீது படையெடுத்த பஸ்தார் பகுதியின் நளன்களை விரட்டியடிக்க தனது தந்தைக்கு உதவியதாக வரலாற்றாளர் ஏ. எஸ். அல்டேகர் கூறுகிறார். [3]

ஆட்சி தொகு

இவரது கல்வெட்டுகள், "தனது குடும்பத்தின் மூழ்கிய அதிர்ஷ்டத்தை" இரண்டு முறை மீட்டதாக குறிப்பிடுகின்றன. [4] இந்த இரண்டு நிகழ்வுகள் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. முதல் உதாரணம் இவரது தந்தையின் ஆட்சியின் போது மேற்கூறிய நளர்களை விரட்டியடித்தது என்றும், இரண்டாவது திரிகூடக மன்னன் தக்ரசேனனுடனான போருக்குப் பிறகு நடத்திய அசுவமேத யாகத்தை பற்றியது என்று அல்டேகர் கூறுகிறார். [3] படையெடுப்பு மூலம் இவர் குடும்பத்தின் செல்வத்தை மீட்டெடுத்தது முதல் நிகழ்வாக அமைந்தது என்று அல்டேகருடன் உடன்படுகிறார். மேலும் இரண்டாவது நிகழ்வு வகாடகா வம்சத்தின் வட்சகுல்மா கிளையின் ஹரிஷேனாவுடன் மோதலுடன் தொடர்புடையது என்று பரிந்துரைக்கிறார். [5] குறிப்பிடத்தக்க வகையில், பிருதிவிஷேனாவின் சாசனங்களில் உள்ள முத்திரைகள் அவரது முன்னோடிகளை விட போர்க்குணமிக்க தன்மையை வெளிப்படுத்துகின்றன, ஏனெனில் அவை அரசன் "வெற்றி பெற விரும்பினான்" என்பதைக் குறிக்கிறது. [6] எவ்வாறாயினும், பிரிதிவிஷேனா சம்பந்தப்பட்ட போர்கள் பற்றிய விவரங்கள் எங்களிடம் இல்லை.

இவர் ஒரு வைஷ்ணவர், இவர் "பரம-பாகவதர்" அல்லது "பாகவத பக்தி" என விவரிக்கப்படுகிறார். [5] இது இவரது புகழ்பெற்ற தாத்தா இரண்டாம் பிரவரசேனனின் உறுதியான சைவ மதத்திலிருந்து ஒரு தலைகீழ் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இவர் தனது பாட்டி பிரபாவதிகுப்தாவின் வைணவ நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். [6]

வாரிசுகள் தொகு

பிருதிவிசேனனுக்கு சொந்த வாரிசுகள் இல்லை. அது இவரது மரணத்துடன் முடிவுக்கு வந்தது. இவரது மரணத்திற்குப் பிறகு வத்சகுல்மா கிளையைச் சேர்ந்த அர்சேனன் வாகாடகக் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கலாம். அஜந்தாவில் உள்ள கல்வெட்டு, குந்தள நாடு, அவந்தி நாடு, இலதா, தெற்கு கோசலம், கலிங்க நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல நாடுகளை அர்சேனன் வென்றவர் என்று விவரிக்கிறது. வாகாடகர்களின் பிரதான கிளையின் சில பிரதேசங்களை முதலில் கையகப்படுத்தாமல் அரிசேனன் தனது செல்வாக்கை இவ்வளவு பரந்த அளவில் விரிவுபடுத்தியிருக்க வாய்ப்பில்லை. [3]

சான்றுகள் தொகு

  1. Shastri, Ajay Mitra (1997). Vakatakas: Sources and History. Aryan Books International. பக். 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788173051234. 
  2. The Classical Age. 
  3. 3.0 3.1 3.2 The Vakataka-Gupta Age. 
  4. Singh, Upinder (2016). A History of Ancient and Early Medieval India From the Stone Age to the 12th Century. Pearson India Education Services. பக். 483. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131716779. 
  5. 5.0 5.1 D.C. Sircar (1997). The Classical Age. Bharatiya Vidya Bhavan. பக். 184. D.C. Sircar (1997). Majumdar, R.C. (ed.). The Classical Age (Fifth ed.). Bharatiya Vidya Bhavan. p. 184.
  6. 6.0 6.1 Bakker, Hans (1997). The Vakatakas: An Essay in Hindu Iconology. Egbert Forsten. பக். 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9069801000. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_பிரிதிவிசேனன்&oldid=3405916" இலிருந்து மீள்விக்கப்பட்டது