வாகாடகப் பேரரசு

வாகாடகப் பேரரசு (Vakataka Empire) (Vākāṭaka), (ஆட்சிக் காலம்: கி. பி 250 - 500), இந்தியாவின் தக்கானப் பகுதியில் கி. பி மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய இந்திய இந்துப் பேரரசாகும். இப்பேரரசு வடக்கே மால்வா மற்றும் குஜராத் பகுதியிலிருந்து, தெற்கே துங்கபத்திரை ஆறும், மேற்கே மகாராஷ்டிரம் வரையும், கிழக்கே தற்கால சத்திஸ்கர் வரை பரவியிருந்தது. விந்தியசக்தி மன்னர் கி. பி 250-270இல் தோற்றுவித்த இப்பேரரசை, கி. பி 250 முதல் 500 வரை தொடர்ந்து பல வாகாடக அரசர்கள் ஆட்சி செய்தனர். இப்பேரரசின் தலைநகராக தற்கால மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள வாசிம் நகரம் ஆகும்.இப்பேரரசின் அரசர்கள் பலர் அஜந்தா குகைக் கோயில்கள் எழுப்பினர். கலை, இலக்கியம் செழித்தது.[1][2]

வாகாடகப் பேரரசு
[[சாதவாகனர்|]]
கிபி 250–கிபி 500 [[விஷ்ணுகுந்தினப் பேரரசு|]]
தலைநகரம் வாசிம் நகரம்
மொழி(கள்) சமசுகிருதம்
மகாராஷ்டிரீ, பிராகிருதம்
சமயம் இந்து சமயம்
பௌத்தம்
அரசாங்கம் முடியாட்சி
மகாராஜா
 -  250–270 விந்தியசக்தி
 -  270–330 முதலாம் பிரவரசேனன்
 -  475–500 ஹரிசேனன்
வரலாற்றுக் காலம் பாரம்பரிய இந்திய அரசுகள்
 -  உருவாக்கம் கிபி 250
 -  குலைவு கிபி 500
Warning: Value not specified for "common_name"
கிபி 375ல் வாகாடப் பேரரசின் நிலப்பரப்பு
கிபி 450ல் வாகாடப் பேரரசின் நிலப்பரப்பு

வாகாடகப் பேரரசு, தக்கானப் பீடபூமியில், சாதவாகனர்களுக்குப் பின்னர் தோன்றியதும், குப்த பேரரசுக்கு சமகாலத்திய பேரரசாகும்.

குப்த பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தர், தன் விதவை மகளை, வாகாடக இளவரசருக்கு திருமணம் செய்து கொடுத்ததின் மூலம், வாகாடகர்களின் ஆதரவுடன் 4ஆம் நூற்றாண்டில் மேற்கு சத்திரபதிகளை வென்று குஜராத்தை, குப்த பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.

வாகாடகப் பேரரசர் ஹரிசேனன் ஆதரவில், அஜந்தா குகைச் சிற்பங்களும், இலக்கியங்களும், கலைகளும் செழித்தோங்கியது.

வாகாடகப் பேரரசர்கள்தொகு

 1. விந்தியசக்தி கி. பி 250 - 270
 2. முதலாம் பிரவரசேனர் 270-330

பிரவரசேனருக்குப் பின்பு வாகாடகப் பேரரசு, பிரவரபுர-நந்திவர்தன கிளை மற்றும் வட்சகுல்மா கிளை இரண்டு குலங்களாக பிரிந்து வாகாடகப் பேரரசின், மத்திய இந்திய பகுதிகளையும், தக்கானப் பகுதிகளையும் பிரித்துக் கொண்டு ஆண்டனர்.

பிரவரபுர - நந்திவர்தன கிளை பேரரசர்கள்தொகு

 • முதலாம் ருத்திரசேனர் 330–355
 • முதலாம் பிரிதிவிசேனர் 355–380
 • இரண்டாம் ருத்திரசேனர் 380–385
 • பிரபாவதிகுப்தா (பெண்ணரசி) 385–405
 • திவாகரசேனர் 385–400
 • தாமோதரசேனர் (இரண்டாம் பிரவரசேனர்) 400–440
 • நரேந்திரசேனர் 440–460
 • இரண்டாம் பிரிதிவிசேனர் 460–480

வட்சகுல்மா கிளையின் பேரரசர்கள்தொகு

அஜந்தா குகைக் கோயில்கள்
 • சர்வசேனர் 330–355
 • இரண்டாம் விந்தியசக்தி (விந்தியசேனர்) 355–400)
 • இரண்டாம் பிரவரசேனர் 400–415
 • தெரியவில்லை (415–450)
 • தேவசேனர் (450–475)
 • ஹரிசேனர் (475–500)

வட்சகுல்மா கிளைதொகு

வாடாகப் பேரரசின் பிரவரசேனரின் இரண்டாம் மகன் சர்வசேனர் வட்சகுல்மா கிளையை நிறுவினார். தற்கால மகாராஷ்டிரம் மாநிலத்தின் வாசிம் நகரத்தை தலைநகராக்க் கொண்டு தக்கானத்தை ஆண்டவர்.[3] இவர் ஆண்ட பகுதி சாகித்திரி மலத் தொடருக்கும் கோதாவரி ஆற்றுக்கு இடையே அமைந்தது. வட்சகுல்மா கிளையினர் பௌத்த சமயத்தை ஆதரித்தனர். அஜந்தா பௌத்த குகைக் கோயில்களை எழுப்பினர்.

   
பத்மபாணி மற்றும் வஜ்ரபாணி ஆகியவர்களின் ஓவியம், அஜந்தா குகை எண் 1

வீழ்ச்சிதொகு

தண்டி எழுதிய தசகுமார சரித்திரம் எனும் காவியத்தின்படி, வாகாடக குலத்தின் ஹரிசேனரின் மகன் அரச நீதியை மறந்து நாட்டை மறந்திருந்ததால், மக்களும் நீதிநெறிகளின்றி வாழ்ந்தனர். இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி வடக்கு கன்னட நாட்டு அரசர், தக்கான வாகாடகப் பேரரசை வீழ்த்தியதாக அறியப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

அடிக்குறிப்புகள்தொகு

 • The Vākātaka-Gupta Age: Circa 200-550 A.D., by Ramesh Chandra Majumdar, Anant Sadashiv Altekar.Published by Motilal Banarsidass Publ., 1986. ISBN 81-208-0026-5.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகாடகப்_பேரரசு&oldid=2698536" இருந்து மீள்விக்கப்பட்டது