இரண்டாம் சந்திரகுப்தர்

இரண்டாம் சந்திரகுப்தர் (Chandragupta II அல்லது Chandragupta Vikramaditya), குப்த பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர். இவரை சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் என்றும் அழைப்பர். சமுத்திரகுப்தரின் மகனாக இவர் மேற்கு சத்திரபதிகளை வென்று தற்கால குஜராத், இராஜஸ்தான் பகுதிகளை கைப்பற்றி, வட இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர். இவரின் ஆட்சி காலமான பொ.ஊ. 380 முதல் 415 முடிய உள்ள காலத்தில், கலை, இலக்கியம், கட்டிடக் கலை, சிற்பக் கலை செழிப்பின் உச்சத்தைத் தொட்டது. இந்து சமயம் மீண்டும் மிகப் பொலிவுடன் செழித்தோங்கியது. எனவே இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[2] இவரை இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் என்றும் அழைப்பர்.

இரண்டாம் சந்திரகுப்தர்
சந்திரகுப்த விக்கிரமாதித்தியன்
வில், அம்புடன் குதிரை மீதான இரண்டாம் சந்திரகுப்தர் உருவம் பொறித்த தங்க நாணயம்[1]
6வது குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம்பொ.ஊ. 385 - 415
முன்னையவர்இராமகுப்தர்
பின்னையவர்முதலாம் குமாரகுப்தர்
மனைவிகள்
  • துருவதேவி
  • குபேர நாகம்மா
குழந்தைகளின்
பெயர்கள்
முதலாம் குமாரகுப்தர் மற்றும் மகள் பிரபாவதி
மரபுகுப்த அரசமரபு
தந்தைசமுத்திரகுப்தர்
தாய்தத்ததேவி
மதம்இந்து சமயம்

பொ.ஊ. 388 முதல் 409 முடிய உஜ்ஜைன் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு குப்தப் பேரரசை ஆண்டவர்.[2] இவரது அரசவையில் காளிதாசர் முதலான நவரத்தினங்கள் எனும் ஒன்பது மிகப் பெரிய கவிஞர்களும், இலக்கியவாதிகளும், பிற துறை அறிஞர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்த நவரத்தினங்களில் சமசுகிருதம் மொழி இலக்கணக்காரான அமரசிம்மரும், வானவியல்-கணித அறிஞரான வராகமிகிரரும் இருந்தனர்.

இவரது ஆட்சிக் காலத்தில் சீன பௌத்த அறிஞரான பாசியான், வட இந்தியாவில் பயணம் செய்து, இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின் பெருமைகளைத் தனது நூலில் குறித்துள்ளார்.[3][4]

வெளிநாடுகள் மீதான படையெடுப்புகள் தொகு

இரண்டாம் சந்திரகுப்தர், இந்தியாவிற்கு வெளியே, கிழக்கிலும் மேற்கிலும் உள்ள 21 நாடுகளைப் படையெடுத்து வென்றதாக, நான்காம் நூற்றாண்டு பெருங்கவிஞர் காளிதாசர் தனது நூல்களில் குறித்துள்ளார். பாரசீகம், காம்போஜம், ஹூன மக்கள், கிராதர்கள், மிலேச்சர்கள், நேபாளம், யவனம், காஷ்மீரம் ஆகியவை இவர் வென்ற நாடுகளில் குறிப்பட்டத்தக்கதாகும்.[5][6] இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின் அவரது இரண்டாம் மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார்.[7]

சமயம் தொகு

வைணவ சமயத்தைப் பின்பற்றிய இரண்டாம் சந்திரகுப்தர் முதல் அவருக்குப் பின் வந்த குப்த பேரரசர்கள், பரம பாகவதர்கள் அல்லது பாகவத வைணவர்கள் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். இவரது ஆட்சிக் காலத்தில் இந்து சமயம், குறிப்பாக வைணவ சமயம் செழித்தோங்கியது.[8]

விக்கிரம நாட்காட்டி தொகு

பொ.ஊ.மு. 57 காலத்திய பண்டைய இந்தியப் பேரரசரான விக்கிரமாதித்தியன் உஜ்ஜையின் நகரத்தை தலைநகராகக் கொண்டு இந்தியாவை ஆட்சி செய்தவர். அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளின் நினைவாக தீபாவளிக்கு அடுத்த நாள் பாத்வா என அழைக்கப்படுகிறது. விக்ரம் நாட்காட்டி பொ.ஊ.மு. 57 முதல் தொடங்கியது. நேபாளத்தில் விக்கிரம நாட்காட்டி அலுவல்முறை நாட்காட்டியாகக் கடைப்பிடிக்கிறது. சகர்களை வென்றதால் இரண்டாம் சந்திரகுப்தரை, சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.

வெளியிட்ட நாணயங்கள் தொகு

மேற்கு சத்ரபதிகள் மற்றும் சமுத்திரகுப்தரைப் போன்று, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை இரண்டாம் சந்திரகுப்தர் வெளியிட்டார்.

 
இரண்டாம் சந்திரகுப்தர் உருவம் பொறித்த தங்க நாணயம்
 
இரண்டாம் சந்திரகுப்தரின் வெள்ளி நாணயம்

அடிக்குறிப்புகள் தொகு

  1. *1910,0403.26
  2. 2.0 2.1 <http://www.britannica.com/EBchecked/topic/92493/Chandra-Gupta-II>.
  3. Ancient Indian History and Civilization p. 216
  4. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen, p. 216
  5. ata shrivikramadityo helya nirjitakhilah Mlechchana Kamboja. Yavanan neechan Hunan Sabarbran Tushara. Parsikaanshcha tayakatacharan vishrankhalan hatya bhrubhangamatreyanah bhuvo bharamavarayate (Brahata Katha, 10/1/285-86, Kshmendra).
  6. Kathasritsagara 18.1.76–78
  7. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp.191–200
  8. Kalyan Kumar Ganguli: (1988). Sraddh njali, Studies in Ancient Indian History: D.C. Sircar Commemoration: Puranic tradition of Krishna. Sundeep Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-85067-10-4. p.36

மேற்கோள்கள் தொகு

  • R. K. Mookerji, The Gupta Empire, 4th edition. Motilal Banarsidass, 1959.
  • R. C. Majumdar, Ancient India, 6th revised edition. Motilal Banarsidass, 1971.
  • Hermann Kulke and Dietmar Rothermund, A History of India, 2nd edition. Rupa and Co, 1991.

வெளி இணைப்புகள் தொகு

மேலும் காண்க தொகு

அரச பட்டங்கள்
முன்னர்
சமுத்திரகுப்தர்
குப்தப் பேரரசர்
375–414
பின்னர்
முதலாம் குமாரகுப்தர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சந்திரகுப்தர்&oldid=3785774" இலிருந்து மீள்விக்கப்பட்டது