இரண்டாம் பெரோஸ் குசான்ஷா

கிடாரைட்டு ஆட்சியாளர்

இரண்டாம் பெரோஸ் குசான்ஷா ( Peroz II Kushanshah ) [2] சுமார் பொ.ச 303 முதல் 330 வரையிலான குசான-சாசானிய இராச்சியத்தின் இறுதி குசான்ஷா ஆவார். [3] இவர் இரண்டாம் ஹோர்மிஸ்ட் குசான்ஷாவின் வாரிசு ஆவார் .

இரண்டாம் பெரோஸ் குசான்ஷா
Coin of Peroz II Kushanshah in Kushan style, possible Balkh mint. Peroz II is wearing his characteristic bull-horns crown.[1]
Kushanshah of the Kushano-Sasanian Kingdom
ஆட்சிக்காலம்303–330
முன்னையவர்Hormizd II Kushanshah
பின்னையவர்Varahran Kushanshah
இறப்பு330
மதம்Zoroastrianism

இவரது முந்தைய இரண்டு முன்னோடிகளான முதலாம் ஹோர்மிஸ்ட் குசான்ஷா மற்றும் இரண்டாம் ஹோர்மிஸ்ட் குசான்ஷா ஆகியோரைப் போலவே இவர் தனது ஆட்சியின் போது அதே நாணயங்களின் குழுவை வைத்திருந்தார். துகாரிஸ்தானின் முக்கிய குசான-சாசானியர்களின் முக்கிய தளமான பாக்திரியாவிலிருந்து தங்கம் மற்றும் செப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. [4] இருப்பினும், இவரது நாணயங்களில் "பெரிய குசான மன்னன் " என்று அழைக்கப்படுகிறார். எனவே சாசானியப் பேரரசின் மீதான அவர்களின் உரிமைக் கோரிக்கையை கைவிடுகிறார். [4] முதலாம் ஹோர்மிஸ்ட் குசான்ஷாவின் ஆட்சியில் இருந்து, செப்பு நாணயங்கள் இரண்டு உள்ளூர் ஆளுநர்களான மியாஸ் மற்றும் காவித் ஆகியோரின் பெயர்களுடன் அச்சிடப்பட்டன. [4] இது இவரது கீழும் தொடரப்பட்டது. [4]

காந்தாரத்தில் வெளியிடப்பட்ட இவரது செப்பு நாணயங்களில் தனித்துவமான "காளைக் கொம்புகளுடன் கூடிய கிரீடம்" அணிந்திருப்பதை போலவெளியிட்டார். [5] இவ்வாறு , காந்தாரத்தில் இத்தகைய நாணயங்களை வெளியிட்ட குசான-சாசானிய ஆட்சியாளர்களில் கடைசியாக இவர் இருதார். [5] அதன் பிறகு, காபூலில் இருந்து தனது சொந்த நாணயங்களை வெளியிட்ட இரண்டாம் சாபூரால் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. [4] [6] [5]

இவர், வராஹ்ரான் குஷன்ஷாவிற்குப் பின்னர் பதவிக்கு வந்தார். அந்த நேரத்தில் சாசானிய மன்னர் இரண்டாம் சாபூர் ( ஆட்சி. 309–379 ) காந்தாரத்தையும் காபூலையும் தனது பகுதிகளில் இணைத்து கொண்டார். [4] [6] [5]

சான்றுகள் தொகு

ஆதாரங்கள் தொகு